India

சம்பவம் செய்த Samsung! ஜூன்.29 வரை வேற எந்த பட்ஜெட் ஸ்மார்ட்போனும் வாங்கிடாதீங்க!

|

ரியல்மி நிறுவனத்திற்கு அடுத்தபடியாக, அவ்வப்போது புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யும் ஒரு நிறுவனம் என்றால், அது சாம்சங் (Samsung) தான்!

ஒருபக்கம் ரியல்மி அதன் சி சீரீஸ் மற்றும் நார்சோ சீரிஸ் வழியாக முடிந்த வரையிலாக, பட்ஜெட் மொபைல் விரும்பிகளை தன்பக்கம் ஈர்த்துக் கொண்டிருக்கும் நிலைப்பாட்டில், சாம்சங் நிறுவனம் சைலன்ட் ஆக ஒரு பட்ஜெட் ஸ்மார்ட்போனை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து "அட இது நல்லா இருக்கே!" என்று யோசிக்க வைத்துள்ளது; அதுவும் எஃப் சீரீஸின் கீழ்!

அதென்ன ஸ்மார்ட்போன்?

அதென்ன ஸ்மார்ட்போன்?

சாம்சங் நிறுவனம், இன்று (ஜூன்.22) அதன் எஃப் சீரீஸின் கீழ் சாம்சங் கேலக்சி எஃப்13 (Samsung Galaxy F13) என்கிற ஒரு புதிய மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்தது.

இந்த லேட்டஸ்ட் எஃப் சீரீஸ் ஸ்மார்ட்போன் ஆனது ட்ரிபிள் ரியர் கேமரா செட்ட்டப், 15W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, 128ஜிபி வரையிலான இன்டர்னல் ஸ்டோரேஜ், ஆக்டா-கோர் எக்ஸினோஸ் 850 SoC போன்ற முக்கிய அம்சங்களை பேக் செய்கிறது.

அதாவது கேலக்ஸி எம்13 மாடலை போலவே உள்ளது! ஆனால்?

அதாவது கேலக்ஸி எம்13 மாடலை போலவே உள்ளது! ஆனால்?

சாம்சங் கேலக்சி எஃப்13 ஸ்மார்ட்போனின் பிரதான அம்சங்களை அறியும் எவருமே இதென்ன சாம்சங் கேலக்சி எம்13 மாடலை போலவே இருக்கிறது என்று எண்ணுவதில் எந்த தவறும் இல்லை; அது உண்மைதான்!

ஆனால் இங்கே கவனிக்க வேண்டிய முக்கியமான மேட்டர் என்னவென்றால், எம்13 மாடல் கடந்த மே மாதம் அறிமுகமானது, ஆனால் அது இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படவில்லை.

Google ஆண்டவரின் அடுத்த அதிரடி; Chrome ப்ரவுஸரில் காத்திருக்கும் சர்ப்ரைஸ்!Google ஆண்டவரின் அடுத்த அதிரடி; Chrome ப்ரவுஸரில் காத்திருக்கும் சர்ப்ரைஸ்!

அப்போது எம்13 மற்றும் எஃப்13-க்கு இடையே வித்தியாசம் இல்லையா?

அப்போது எம்13 மற்றும் எஃப்13-க்கு இடையே வித்தியாசம் இல்லையா?

இருக்கிறது. ஒரே ஒரு வித்தியாசம் - பேட்டரி திறனில்! சாம்சங் கேலக்சி எஃப்13 ஆனது 6,000mAh பேட்டரியை பேக் செய்கிறது, அதே நேரத்தில் சாம்சங் கேலக்ஸி எம்13 ஆனது 5,000mAh பேட்டரியை கொண்டுள்ளது.

அதாவது ஒப்பீட்டளவில், கேலக்சி எஃப்13 மாடல் ஆனது கேலக்சி எம்13 மாடலை விட அதிக பேட்டரி திறனை கொண்டுள்ளது.

சிலருக்கு இது போதுமான அப்கிரேட் ஆக தோன்றினாலும், சிலருக்கு இதெல்லாம் ஒரு அப்டேட்-ஆ என்று தோன்றலாம், இதுபோன்ற சூழ்நிலைகளில் விலை நிர்ணயம் தான் சரியான முடிவை எடுக்க உதவும்.

கேலக்சி எஃப்13 ஸ்மார்ட்போனின் விலை என்ன?

கேலக்சி எஃப்13 ஸ்மார்ட்போனின் விலை என்ன?

இந்தியாவில் சாம்சங் கேலக்சி எஃப்13 ஸ்மார்ட்போனின் பேஸிக் 4ஜிபி ரேம் + 64ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனின் விலை ரூ.11,999 என்றும், 4ஜிபி + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனின் விலை ரூ.12,999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

பணம் கொடுத்து பயன்படுத்துற அளவுக்கு Telegram Premium-ல அப்படி என்ன தான் இருக்கு?பணம் கொடுத்து பயன்படுத்துற அளவுக்கு Telegram Premium-ல அப்படி என்ன தான் இருக்கு?

எப்போது முதல் விற்பனை? என்னென்ன ஆபர்?

எப்போது முதல் விற்பனை? என்னென்ன ஆபர்?

இது நைட்ஸ்கை கிரீன், சன்ரைஸ் காப்பர் மற்றும் வாட்டர்ஃபால் ப்ளூ என்கிற மூன்று வண்ண விருப்பங்களின் கீழ் வாங்க கிடைக்கும்.

விற்பனையை பொறுத்தவரை, இது வருகிற ஜூன் 29 ஆம் தேதி முதல் பிளிப்கார்ட், சாம்சங்.காம் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட சில்லறை விற்பனை கடைகளில் வாங்க கிடைக்கும்.

அறிமுக சலுகைகளை பொறுத்தவரை, HDFC வங்கி கார்டுகளை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.1,000 இன்ஸ்டன்ட் பேங்க் டிஸ்கவுண்ட் கிடைக்கும்.

மேலும் பிளிப்கார்ட் தளமானது இந்த லேட்டஸ்ட் சாம்சங் ஸ்மார்ட்போனை வாங்கும்போது கூகுள் நெஸ்ட் மினி மற்றும் நெஸ்ட் ஹப் ஆகியவற்றை தள்ளுபடி விலையில் வழங்கும்.

சூப்பரான டிஸ்பிளே... கவனிக்கப்பட வேண்டிய ரேம் பிளஸ் அம்சம்!

சூப்பரான டிஸ்பிளே... கவனிக்கப்பட வேண்டிய ரேம் பிளஸ் அம்சம்!

டூயல் சிம் (நானோ) ஆதரவு கொண்ட கேலக்சி எஃப்13 ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ் கொண்டு இயங்குகிறது மற்றும் 6.6-இன்ச் அளவிலான ஃபுல்-எச்டி+ (1,080x2,408 பிக்சல்ஸ்) டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது.

முன்னரே குறிப்பிட்டபடி, இந்த ஸ்மார்ட்போன் Exynos 850 SoC மற்றும் 4ஜிபி ரேம் உடன் வருகிறது. இதில் இன்டர்னல் ஸ்டோரேஜை பயன்படுத்தி மெமரியை நீட்டிக்க உதவும் ரேம் பிளஸ் அம்சமும் உள்ளது.

இன்டர்னல் ஸ்டோரேஜை பொறுத்தவரை, இது 128ஜிபி வரை பேக் செய்கிறது. மேலும் ஸ்மார்ட்போனின் மெமரியை மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக 1டிபி வரை நீடிக்கும் ஆதரவும் உண்டு.

கேமராக்கள் எப்படி?

கேமராக்கள் எப்படி?

சாம்சங் கேலக்சி எஃப்13 ஆனது 50 மெகாபிக்சல் மெயின் சென்சார் + 5 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் கேமரா + 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை பெறுகிறது.

செல்பீக்கள் மற்றும் வீடியோ கால்களுக்கான தேவையை, முன்பக்கத்தில் உள்ள 8 மெகாபிக்சல் கேமரா பூர்த்தி செய்கிறது. ஒட்டுமொத்தமாக இதை விலையை மீறிய கேமராக்கள் என்று சொல்ல முடியாது. அதே சமயம் மோசமான செட்டப் என்றும் கூறிவிட முடியாது.

கனெக்டிவிட்டி முதல் பேட்டரி வரை!

கனெக்டிவிட்டி முதல் பேட்டரி வரை!

4ஜி எல்டிஇ, வைஃபை 802.11ac, ப்ளூடூத் வி5.0, GPS/ A-GPS, யூஎஸ்பி டாய்-சி மற்றும் 3.5mm ஹெட்ஃபோன் ஜாக் போன்ற கனெக்டிவிட்டி விருப்பங்களை வழங்கும் இந்த லேட்டஸ்ட் சாம்சங் ஸ்மார்ட்போன் ஆனது ஆக்ஸலரோமீட்டர், ஆம்பியண்ட் லைட், மேக்னெட்டோமீட்டர் மற்றும் ப்ராக்சிமிட்டி போன்ற சென்சார்களையும் பேக் செய்கிறது.

பக்கவாட்டில் பொருத்தப்பட்ட பிங்கர் பிரிண்ட் சென்சார் உடன் வரும் சாம்சங் கேலக்சி எஃப்13 ஆனது 15W பாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கும் 6,000mAh பேட்டரியை கொண்டுள்ளது.

Windows 11 டிப்ஸ்: எந்த சாப்ட்வேரும் இல்லாமல் Screen Record செய்வது எப்படி?Windows 11 டிப்ஸ்: எந்த சாப்ட்வேரும் இல்லாமல் Screen Record செய்வது எப்படி?

இந்த மாடலுக்கு வேற ஆல்டர்நேட்டிவ் ஸ்மார்ட்போன்கள் இருக்கிறதா?

இந்த மாடலுக்கு வேற ஆல்டர்நேட்டிவ் ஸ்மார்ட்போன்கள் இருக்கிறதா?

நிச்சயமாக! இந்த புதிய கேலக்ஸி எம்-சீரிஸ் போன் உங்கள் தேவைகளை பூர்த்தி செய்யும் என்கிற நம்பிக்கை உங்களுக்கு வழங்கவில்லை என்றால், நீங்கள் இதே விலைப்பிரிவின் கீழ் உள்ள ரெட்மி 10 ப்ரைம் (Redmi 10 Prime), ரியல்மி நார்சோ 50ஏ ப்ரைம் (Realme Narzo 50A Prime) மற்றும் போக்கோ எம்3 ப்ரோ 5ஜி (Poco M3 Pro 5G) போன்ற மாடல்களை பரிசீலிக்கலாம்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Samsung Galaxy F13 launched in India. Packs Triple rear camera setup, 15W fast charging support, 128GB onboard storage, Octa-core Exynos 850 SoC, and more. Check the Sale date and offers.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X