சாம்சங் ஹெச்.எம்.டி ஒடிசி பிளஸ் விஆர் ஹெட்செட் அறிமுகம்.!

|

சாம்சங் நிறுவனத்தின் புதிய வரவான ஒடிசி என்பது 3.5 இன்ச் அமோல்ட் இரண்டு டிஸ்ப்ளேக்களுடன், ஒவ்வொரு கண்ணுக்கும் 1,440 x 1,600 ரெசலுசனுடனும் வெளிவந்துள்ளது. ஆன்ட்டி ஸ்க்ரீன் டோர் தன்மையுடன் கூடிய டெக்னாலஜி கொண்ட இந்த சாதனம் பயன்படுத்தும்போது ஏற்படுத்தும் அனுபவத்திற்கு எல்லையே இல்லை

சாம்சங் ஹெச்.எம்.டி ஒடிசி பிளஸ்  விஆர் ஹெட்செட்  அறிமுகம்.!

இந்த சாதனம் தான் சாம்சங் அறிமுகம் செய்துள்ள ஒடிசி பிளஸ் மற்றும் விஆர் ஹெட்செட் உடன் கூடிய ஒரு சாதனம். விண்டோஸ் மிக்ஸ் ரியாலிட்டி சாதனமான இந்த சாதனம் நிச்சயம் வாடிக்கையாளர்களை கவரும்

ஒடிசி பிளஸ் சாதனத்தில் 3.5 இன்ச் டூயல் டிஸ்ப்ளேக்கள் உள்ளன. இவை ஒவ்வொரு கண்ணுக்கும் 1,440 x 1,600 ரெசலுசன் தன்மையை கொண்டவை. ஆன்ட்டி ஸ்க்ரீன் டோர் தன்மையுடன் கூடிய டெக்னாலஜி கொண்ட இந்த சாதனம் பயன்படுத்தும்போது ஏற்படுத்தும் அனுபவத்திற்கு எல்லையே இல்லை. மேலும் இதில் உள்ள ஒரு பட்டன் மூலம் தேவையான போது பிளாஷ்லைட்டாகவும் பயன்படுத்தி கொள்ளலாம்

சாம்சங் ஹெச்.எம்.டி ஒடிசி பிளஸ்  விஆர் ஹெட்செட்  அறிமுகம்.!

மேலும் இந்த சாம்சங் விஆர் ஹெட்செட்டில் ஏகேஜியின் பிரிமியம் ஆடியோ டெக்னாலஜி பயனப்டுத்தப்படுவதால் இதிலிருந்து வெளிப்படும் ஆடியோ 360 டிகிரி அளவில் ஒரு 3டி ஆடியோவாக வெளிவந்து தெளிவான அதே நேரத்தில் ஆச்சரியப்படத்தக்க ஆடியோவை தருகிறது. மேலும் இதில் உள்ள வால்யூம் கண்ட்ரோலை பயன்படுத்தி தேவைப்படும் அளவுக்கு ஆடியோவை கட்டுப்படுத்தலாம்

இந்த ஹெச்.எம்.டி ஒடிசி பிளஸ் சாதனம் வெறும் 590 கிராம் எடை மட்டுமே கொண்டது. அதேபோல் 146 மிமீ அளவில் ஐபாக்ஸ் கொண்டிருப்பதால் முகத்தில் சரியாக பொருந்தி எளிதில் பயன்பட வைக்கின்றது. விரல்களிலும் சரியாக பொருந்தும் வகையில் உள்ளது.

சாம்சங் ஹெச்.எம்.டி ஒடிசி பிளஸ்  விஆர் ஹெட்செட்  அறிமுகம்.!

மேலும் இந்த சாம்சங் ஹெச்.எம்.டி ஒடிசி பிளஸ் சாதனத்தில் பிரிபேர்டு கண்ட்ரோலர்ஸ் இருப்பதால் கேம்ஸ் விளையாடுவதற்கும் பயன்படுகிறது. இதில் உள்ள 6DOF கண்ட்ரோலர் நீங்கள் கேம் விளையாடும்போது உங்கள் நகர்வுகள், தேவையான தூரம் ஆகியவற்றை கட்டுப்படுத்தும். இதனால் வேகமாக மற்றும் மெதுவாக விளையாடும் தன்மை கிடைப்பதுடன் நல்ல அனுபவமும் கிடைக்கும்

இந்த சாம்சங் ஹெச்.எம்.டி ஒடிசி பிளஸ் சாதனம் தற்போது இந்திய மதிப்பில் ரூ.36,800 என்ற விலையில் மைக்ரோசாப்ட் ஸ்டோர் மற்றும் சாம்சங் இணையதளங்களில் கிடைக்கின்றது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Samsung HMD Odyssey+ VR headset announced with dual 3.5-inch AMOLED displays: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X