சர்வதேச ஸ்மார்ட்போன் சந்தையில் டாப்பில் இடம் பிடித்த Samsung நிறுவனம்.! பின்னுக்கு சென்றது யார்?

|

கவுண்ட்டர்பாயிண்ட் ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வின் படி 2020 ஆகஸ்ட் மாதத்தில் சர்வதேச ஸ்மார்ட்போன் சந்தையில் சாம்சங் நிறுவனம் முதலிடம் பிடித்துள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச ஸ்மார்ட்போன் சந்தை மட்டுமின்றி, இந்திய ஸ்மார்ட்போன் சந்தையிலும் சாம்சங் நிறுவனம் தான் முதலிடம் பிடித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச ஸ்மார்ட்போன் சந்தையில் டாப்பில் இடம் பிடித்த Samsung நிறுவனம்!

கவுண்ட்டர்பாயிண்ட் ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வின் படி, சர்வதேச ஸ்மார்ட்போன் சந்தையில் சாம்சங் நிறுவனம் 22 சதவீத பங்குகளை பெற்றுள்ளது. இந்த அளவிற்கான பங்குகளை பெற்ற முதல் நிறுவனமாக சாம்சங் புதிய சாதனை படைத்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், இந்த காலகட்டத்தில் ஹூவாய் நிறுவனம் 16 சதவீத சரிவை சந்தித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இனி LPG சிலிண்டர் வாங்க இது கட்டாயம்.. நவம்பர் 1 முதல் அமலுக்கு வரும் புதிய முறை.!

சர்வதேச ஸ்மார்ட்போன் சந்தையில் டாப்பில் இடம் பிடித்த Samsung நிறுவனம்!

சாம்சங் நிறுவனத்தைத் தொடர்ந்து ஆகஸ்ட் 2020 ஆம் ஆண்டில் சியோமி நிறுவனம் 11 சதவீத பங்குகளை பெற்றுள்ளது. சர்வதேச ஸ்மார்ட்போன் சந்தையில் ஏப்ரல் மாதம் முதல் அனைத்து ஸ்மார்ட்போன் நிறுவனங்களும் கொரோன தொற்றுநோய் ஊரடங்கு காரணமாக பெரும் சரிவை சந்தித்திருந்தது. ஊரடங்கு தளர்வுக்கு பின்னர் ஆகஸ்ட் மாதம் முதல் ஸ்மார்ட்போன் துறை வளர்ச்சி அடைந்துள்ளது.

சர்வதேச ஸ்மார்ட்போன் சந்தையில் டாப்பில் இடம் பிடித்த Samsung நிறுவனம்!

இதில் சாம்சங் நிறுவனம் அதிக வளர்ச்சி அடைந்து சர்வதேச மற்றும் உள்நாட்டு சந்தையில் முன்னிலையில் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய-சீனா பதற்றம் காரணமாக, இந்தியர்கள் மத்தியில் சீனா பொருட்களுக்கு எதிரான மனநிலை உருவானது, இதன் காரணமாகவும் பெருகிய ஆன்லைன் விற்பனையின் காரணமாகவும் சாம்சங் பெரும் வளர்ச்சி அடைந்துள்ளது என்று கருதப்படுகிறது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Samsung has once again topped the international smartphone market : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X