விரைவில் 'போல்டபிள் டிஸ்பிளே' கொண்ட சாம்சங் கருவிகள்.!

சாம்சங் நிறுவனத்தின் போல்டபிள் டிஸ்பிளே மற்றும் அடுத்த வெளிவரப்போகும் கேலக்ஸி தொடர் கருவிகளின் காப்புரிமைகள் லீக்.!

|

இந்தாண்டு அதிக அளவிலான அம்சங்களுடன் சேர்த்து ஏதாவது புதுமை ஒன்றையும் திணித்தால் தான் மீண்டும் சந்தையை ஆக்கிரமிக்க முடியும், பேட்டரி வெடிப்பு சம்பவங்கள் மூலம் பாழாய்ப்போன பிராண்ட் பெயரை மீட்டெடுக்க முடியுமென்று சாம்சங் முடிவு செய்துவிட்டது போலும்.

ஆம், நாம் கடந்த சில ஆண்டுகளாக அவ்வப்போது, ஆங்காங்கே போல்டபிள் ஸ்மார்ட்போன்கள் அதாவது மடங்கும் வடிவமைப்பு கொண்ட ஸ்மார்ட்போன்கள் பற்றிய தகவல்களை கேட்டு வருகின்றோம். அப்படியான போல்டபிள் ஸ்மார்ட்போன் செய்திகளுடன் மிகவும் நெருக்கமாக பேசப்படுவது - சாம்சங் நிறுவனம் தான்.

போல்டபிள் டிஸ்பிளே

போல்டபிள் டிஸ்பிளே

அதாவது, கேலக்ஸி எக்ஸ் ஸ்மார்ட்போன் என்ற பெயரிடப்படாத கருவி இன்னும் மேம்பாட்டில் உள்ளது என்றும், அதில் இவ்வகையான போல்டபிள் டிஸ்பிளே அமைக்கப்படலாம் என்றும் நம்பப்படுகிறது.

காப்புரிமை

காப்புரிமை

சாம்சங் ஸ்மார்ட்போன் வடிவமைப்பு எதிர்காலத்தில் ஒரு பெரிய வளர்ச்சியை அடையும் மற்றும் சாம்சங் நிறுவனம் இவ்வகையான ஸ்மார்ட்போன் வளர்ச்சிக்காக சில காப்புரிமைகளை தாக்கல் செய்துள்ளது என்று சாம்சங் பற்றிய சமீபத்திய அறிக்கை மூலம் நம்பப்படுகிறது.

இரண்டு டிஸ்ப்ளே

இரண்டு டிஸ்ப்ளே

அதில் ஒரு காப்புரிமையானது போல்டபிள் ஸ்மார்ட்போனை உருவாக்கும் எண்ணத்திலான போல்ட்-அவுட் டிசைன் கொண்டுள்ளது. அதாவது சாதனத்தை வளைக்கவும், வசதியாக கையாளவும், இரண்டு டிஸ்ப்ளேவிற்க்கு இடையேவும் கீல்கள் உருவாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, இதோபோன்ற முந்தைய முன்மாதிரி ஒன்றுடன் இந்த வடிவமைப்பு ஒற்றுப்போவதால், சாம்சங் திட்டங்கள் இதனை சுற்றிய தான் இருக்க வேண்டுமென்று தெரிகிறது.

வலிமை

வலிமை

மேலும் வதந்திகளின்படி, சாம்சங் ஸ்மார்ட்போன் திரையில் கொரில்லா கிளாஸை விட வலிமையாக உள்ள ஒரு நீடித்த கண்ணாடி பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. நிச்சயமாக, இந்த நெகிழ்வான கருவி வடிவமைப்பில் நெகிழ்வான கண்ணாடி தான் பயன்படுத்தப்படும்.

இருபுறமும் எட்ஜ் டிசைன்

இருபுறமும் எட்ஜ் டிசைன்

மேலும் தாக்கல் செய்யப்பட்ட இரண்டு காப்புரிமைகளின்கீழ் வரவிருக்கும் கேலக்ஸி ஸ்மார்ட்போன் வடிவமைப்பு சுட்டிக் காட்டபட்டுள்ளது. அறிக்கையின்படி இந்த ஸ்மார்ட்போன் வடிவமைப்புகள் ஆனது பிளாக்ஷிப் கேலக்ஸி எஸ் தொடரின் கருவிகள் பரீசீலிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. மற்றோரு காப்புரிமையானது மிகவும் ஆச்சரியமூட்டும் இருபுறமும் எட்ஜ் டிசைன் கொண்ட ஒரு கேலக்ஸி நோட் 4 எட்ஜ் அக்கருவி போன்ற வடிவமைப்பு காட்டுகிறது.

ஒரு மலிவு மாறுபாடு

ஒரு மலிவு மாறுபாடு

இரண்டாவது மற்றும் மூன்றாவது காப்புரிமைகள் இருந்து சாம்சங் அதன் இடைப்பட்ட வரிசையிலான ஒரு புதிய வடிவமைப்பு தயார்படுத்தி வருகிறது என்பது உறுதியாகிறது. ஒருவேளை கேலக்ஸி நோட் சாதனங்களின் ஒரு மலிவு மாறுபாடாக இக்கருவிகள் இருக்க முடியும். எனினும், அனைத்து சாம்சங் காப்புரிமை நடைமுறைக்கு வரும் என்ற சாத்தியமில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க

மேலும் படிக்க

வெறும் ரூ.5,553/-க்கு 3000எம்ஏஎச் பேட்டரி கொண்ட 4ஜி ஸ்மார்ட்போன்.!

ஆதாரம் : பெனால்டிமொபைல்

Best Mobiles in India

Read more about:
English summary
Samsung Hasn't Forgotten Foldable Smartphones, New Design for Galaxy Lineup on the Cards. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X