67 ஆயிரம் மதிப்புள்ள கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட்போனை இலவசமாக வழங்கிய சாம்சங்

|

ஸ்பெயின் நாட்டு விமான பயணிகளில் 200 பேருக்கு இலவசமாக கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட்போன்களை வழங்கியுள்ளது. பயணிகளை வியப்பில் ஆழ்த்தும் வகையில் சாம்சங் நடவடிக்கை அமைந்தது. இலவச நோட் 8 ஸ்மார்ட்போன் மாட்ரிட்டில் இருந்து கொருனாவிற்கு செல்ல இருந்த விமானத்தில் இருந்த பயணிகளுக்கு வழங்கப்பட்டது.

67 ஆயிரம் மதிப்புள்ள கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட்போனை இலவசமாக வழங்கிய சாம்ச

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 7 ஸ்மார்ட்போன் பேட்டரி பிழை காரணமாக வெடித்ததால் விமானங்களில் எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டது. கடந்த ஆண்டு இந்த சம்பவம் அரங்கேறியதை தொடர்ந்து இந்த ஆண்டு கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட்போன்களை விமான பயணிகளுக்கு இலவசமாக வழங்கியுள்ளது.

புதிய நோட் 8 ஸ்மார்ட்போன்கள் சாக்லேட்களை போன்று பாதுகாப்பானது என்பதை உணர்த்தும் வகையில் ஸ்மார்ட்போன் வழங்கப்பட்டுள்ளது.

இலவசமாக வழங்கப்பட்ட கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட்போன் பெட்டியில் கடந்த ஆண்டு இதனை ஸ்விட்ச் ஆஃப் செய்ய சொன்னோம், இம்முறை உங்களை வரவேற்கிறோம் என்ற வாசகம் ஸ்பெயின் மொழியில் எழுதப்பட்டிருந்தது. இது கடந்த ஆண்டு வெளியாகி பின் திரும்ப பெறப்பட்ட நோட் 7 ஸ்மார்ட்போன்களை குறிக்கும் வகையில் அமைந்துள்ளது.

மீண்டும் மீண்டும் ஜியோவிடம் மீண்டும் மீண்டும் ஜியோவிடம் "பல்ப்" வாங்கும் ஏர்டெல்.!

சாம்சங் கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட்போன் சில மாதங்களுக்கு முன் அறிமுகம் செய்யப்பட்டது. ஒரு ஆண்டு இடைவெளிக்கு பின் வெளியிடப்பட்டுள்ள கேலக்ஸி நோட் 8 வாடிக்கையாளர்கள் பயன்படுத்த பாதுகாப்பான சாதனம் என்பதை உணர்த்தும் வகையில் விமான பயணிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட்போன் இந்தியாவில் ரூ.67,900 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

Best Mobiles in India

Read more about:
English summary
Samsung has handed out free Galaxy Note 8 smartphones to 200 passengers in a flight to send a message to the world that its latest device is safe.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X