சாம்சங் ஸ்மார்ட்வாட்ச் : இதெல்லாம் உண்மையா இருக்குமோ?

Written By:

சாம்சங் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்வாட்ச் கருவிகள் மூன்று வித மாடல்களில் வெளியாக இருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளது. சாம் மொபைல் (SamMobile) எனும் இணையதளத்தில் இது குறித்து வெளியான செய்தி குறிப்பின் மூலம் தெரிய வந்திருக்கும் தகவல்கள்..

சாம்சங் ஸ்மார்ட்வாட்ச் : இதெல்லாம் உண்மையா இருக்குமோ?

சாம்சங் நிறுவனத்தின் கியர் எஸ்3 (Gear S3) ஸ்மார்ட்வாட்ச் கருவி அடுத்த மாதம் நிடைபெற இருக்கும் ஐஎஃப்ஏ (IFA) தொழில்நுட்ப விழாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றது. இவை கிளாசிக் (Classic), ஃப்ராடன்டியர் (Frontier) மற்றும் எக்ஸ்ப்ளோரர் (Explorer) என மூன்று வித மாடல்களில் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாம்சங் ஸ்மார்ட்வாட்ச் : இதெல்லாம் உண்மையா இருக்குமோ?

இவற்றில் ஃப்ராடன்டியர் (Frontier) மற்றும் எக்ஸ்ப்ளோரர் (Explorer) மாடல்களில் அதிநவீன அம்சங்களைக் கொண்டிருக்கும். இதோடு கியர் எஸ்3 பில்ட்-இன் ஜிபிஎஸ், ஆல்டிமீட்டர், பாரோமீட்டர் மற்றும் ஸ்பீடோமீட்டர் போன்றவகளை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சாம்சங் கியர் எஸ்3 வட்ட வடிவ திரை, மற்றும் டைஸன் இயங்குதளம் போன்றவை வழங்கப்படும் கூறப்படுகின்றது. மேலும் திரையில் மூன்று பட்டன்கள் ஷார்ட்கட் மற்றும் செயலிகளை இயக்க வழி செய்யும் படி வடிவமைக்கப்பட்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சாம்சங் ஸ்மார்ட்வாட்ச் : இதெல்லாம் உண்மையா இருக்குமோ?

எதுவானாலும் கருவி வெளியாகும் வரை பல்வேறு எதிர்பார்ப்புகளைக் கடந்து உண்மையில் புதிய ஸ்மார்ட்வாட்ச் என்னென்ன அம்சங்களைக் கொண்டிருக்கும் என்பதை அதிகாரப்பூர்வமாக அறிந்து கொள்ள காத்திருப்பதை தவிர வேறு வழியில்லை. காத்திருப்போம்.!

English summary
Samsung Gear S3 might have built-in GPS Tamil
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot