ஆப்பிள்-க்கு பிறகு Samsung இந்தியாவில் உருவாக்கும் போன் இதனா? போடு அப்போ ரேட் கம்மியா?
சாம்சங் கேலக்ஸி இஸட் ஃபிளிப் 5 மற்றும் சாம்சங் கேலக்ஸி இசட் ஃபோல்டு 5 ஆகிய 2 போல்டபில் ஸ்மார்ட்போன் டிவைஸ்களை சாம்சங் (Samsung) நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை மற்றும் விபரங்கள் ஏற்கனவே வெளியாகிவிட்டது.
இப்போது இதன் தயாரிப்பு பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளது, ஆப்பிள் நிறுவனம் ஏற்கனவே இந்தியாவில் அதன் ஐபோன் சாதனங்களை அசெம்பிள் செய்து, உள்ளநாட்டிலேயே அவற்றை உருவாக்கி, விற்பனை செய்து வருகின்றன. இந்த வரிசையில், தற்போது சாம்சங் நிறுவனமும் சேரவுள்ளதாக தெரிகிறது. காரணம், நிறுவனம் அதன் 2 புதிய போல்டபில் போன்களை இந்தியாவில் தயாரிக்கவுள்ளது.

இதன் விலை இந்தியாவில் ஜூலை 26 அன்று தென் கொரியாவில் அறிமுகமான பிறகு அறிவிக்கப்பட்டது. இந்த புதிய ஃபோல்டபில் ஸ்மார்ட்போன்கள் இரண்டுமே, சக்தி வாய்ந்த ஸ்னாப்டிராகன் 8 ஜெனரல் 2 சிப்செட் உடன் வருகின்றது. இது பிரீமியம் செயல்திறனை வழங்கும். சாம்சங் கேலக்ஸி இஸட் போல்ட் 5 சாதனம் 1 லட்சம் விலைக்கு மேல் வருகிறது.
இந்தியாவில் விலையை அறிவிக்கும் போது, இந்தியாவில் விற்கப்படும் Samsung Galaxy Z Flip 5 மற்றும்Samsung Z Fold 5 ஸ்மார்ட்போன்கள் உள்நாட்டிலேயே அசெம்பிள் செய்யப்படும் என்று நிறுவனம் உறுதி செய்துள்ளது. சாம்சங் நொய்டாவில் அதன் மிகப்பெரிய ஸ்மார்ட்போன் தொழிற்சாலையைக் கொண்டிருந்தாலும், போல்டபில் ஸ்மார்ட்போன்களை உள்நாட்டில் தயாரிக்கப்படவில்லை.
ஆனால் அது இப்போது மாறுகிறது. இந்தியாவில் விற்பனை செய்யப்பட்ட முந்தைய Samsung Galaxy Z சீரிஸ் போன்கள் தென் கொரியா மற்றும் வியட்நாமில் அசெம்பிள் செய்யப்பட்டன. உள்நாட்டில் தயாரிக்கப்பட்டாலும், அவற்றின் முன்னோடிகளுடன் ஒப்பிடுகையில், போர்ட்டபில் போன்களின் விலை குறைக்கப்படவில்லை. என்பதே உண்மையாகும்.
Samsung Galaxy Z Fold 5 சிறப்பம்சம் பற்றி பேசுகையில், இது 2,176 x 1,812 பிக்சல்கள் தீர்மானம் மற்றும் 120Hz அடாப்டிவ் ரெஃப்ரஷ் ரேட் வீதத்துடன் 7.6' இன்ச் QXGA+ டைனமிக் AMOLED 2X இன்ஃபினிட்டி ஃப்ளெக்ஸ் டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. இது 6.2'இன்ச் HD+ டைனமிக் AMOLED 2X கவர் டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது.

இது குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜெனரல் 2 சிப்செட் உடன் வருகிறது. இது 12 ஜிபி ரேம் மற்றும் 1 டிபி ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இந்த போன் ஆண்ட்ராய்டு 13 அடிப்படையிலான OneUI 5.1 ஸ்கின் உடன் வருகிறது. இது பின்புறத்தில் மூன்று கேமராக்களைக் கொண்டுள்ளது, 12MP வைட்-ஆங்கிள் கேமரா, 12MP அல்ட்ரா-வைட்-ஆங்கிள் ஷூட்டர் மற்றும் 50MP அல்ட்ரா-வைட்-ஆங்கிள் ஷூட்டர் வருகிறது.
இது முன்பக்கத்தில் 10MP ஷூட்டர் மற்றும் பிரதான போல்டபில் டிஸ்பிளேவில் 4MP அண்டர் டிஸ்ப்ளே சென்சார் உள்ளது. இந்த சாதனத்தில் 25W ஃபாஸ்ட் சார்ஜிங்குடன் 4,400mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. Samsung Galaxy Z Flip 5 சிறப்பம்சம் பற்றி பேசுகையில், இது 6.7' inch FHD+ டைனமிக் AMOLED 2X டிஸ்பிளே மற்றும் 120Hz அடாப்டிவ் ரெஃப்ரெஷ் ரேட் 60Hz ரெஃப்ரஷ் ரேட் வீதத்துடன் 3.4 இன்ச் சூப்பர் AMOLED டிஸ்ப்ளேவுடன் வருகிறது.
இது குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 (Qualcomm Snapdragon 8 Gen 2) சிப்செட் உடன் இயக்கப்படுகிறது. இது 8 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி கொண்ட ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இது ஆண்ட்ராய்டு 13-அடிப்படையிலான OneUI 5.1 உடன் இயங்குகிறது. இது 12MP வைட்-ஆங்கிள் கேமரா மற்றும் 12MP அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸை உள்ளடக்கிய மூன்று கேமராக்களைக் கொண்டுள்ளது. முன்பக்கத்தில் 10MP ஷூட்டரை கொண்டுள்ளது.
இது 25W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் வயர்லெஸ் பவர்ஷேர் ஆதரவுடன் 3,700எம்ஏஎச் பேட்டரி உடன் வருகிறது.


Click it and Unblock the Notifications








