காத்துவாக்குல 2 போன் வெளியிட்ட Samsung.! இரண்டு போனுக்கும் என்ன வித்தியாசம்? எது பிஸ்தானு பாக்கலாமா?
சாம்சங் நிறுவனம் நேற்று அதன் சாம்சங் கேலக்ஸி அன்பேக்டு ஈவென்ட் 2023 நிகழ்வை (Samsung Galaxy Unpacked Event 2023) நடத்தியது. இந்த நிகழ்வின் போது நிறுவனம் சாம்சங் கேலக்ஸி இஸட் ஃபோல்ட் 5 (Samsung Galaxy Z Fold 5) சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது.
இத்துடன் சேர்த்து நிறூவனம், சாம்சங் கேலக்ஸி இஸட் ஃபிளிப் 5 (Samsung Galaxy Z Flip 5) ஸ்மார்ட்போனையும் அறிமுகம் செய்துள்ளது. இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் போல்டபில் ஸ்மார்ட்போன் சாதனமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. ஒரே நேரத்தில் சாம்சங் நிறுவனம் காற்று வாக்கில் 2 போல்டபில் போன்களை அறிமுகம் செய்துள்ளதால், எந்த போனை வாங்குவதென்ற குழப்பம் ரசிகர்களுக்கு உருவாகியுள்ளது.

இந்த குழப்பம் உங்களுக்கும் இருந்தால், இந்த பதிவை படித்து உங்களுக்கு இருக்கும் சந்தேகங்களை சரி செய்துகொள்ளுங்கள். ஓகே.. இப்போது இந்த இரண்டு போன்களில் இருக்கும் சிறப்பம்ச விபரங்களை ஒப்பிட்டு பார்க்கலாம். சாம்சங் கேலக்ஸி இஸட் ஃபோல்ட் 5 (Samsung Galaxy Z Fold 5) சாதனம் 7.6' இன்ச் கொண்ட QXGA+ (2176 x 1812 பிக்சல்ஸ்) உடைய டைனமிக் AMOLED 2X இன்ஃபினிட்டி ஃப்ளெக்ஸ் டிஸ்பிளேவுடன் வருகிறது.
இது 1Hz முதல் 120Hz வரையிலான ரெஃப்ரெஷ் ரேட் அம்சத்துடுன் வருகிறது. இதில் 6.2' இன்ச் FHD+ (2316 x 904 பிக்சல்ஸ்) டைனமிக் AMOLED 2X கொண்ட டிஸ்பிளேவும் இருக்கிறது. மறுபுறம், சாம்சங் கேலக்ஸி இஸட் ஃபிளிப் 5 பற்றி பார்க்கையில், இது 6.7' இன்ச் கொண்ட FHD+ (1080x 2640 பிக்சல்ஸ்) உடைய டைனமிக் AMOLED 2X இன்ஃபினிட்டி ஃப்ளெக்ஸ் இன்னர் டிஸ்பிளேவை கொண்டுள்ளது.

இதுவும் 120Hz அடாப்டிவ் ரெஃப்ரெஷ் ரேட் அம்சத்துடன் வருகிறது. இத்துடன், 3.4' இன்ச் சூப்பர் AMOLED ஃபோல்டர் ஷேப்டு கவர் டிஸ்பிளேவை கொண்டுள்ளது. டிஸ்பிளேவை வைத்து பார்க்கையில் Samsung Galaxy Z Fold 5 பெரிய டிஸ்பிளேவை கொண்டுள்ளது. Samsung Galaxy Z Flip 5 வழக்கமான டிஸ்பிளே அளவை கொண்டுள்ளது. இது முறையை 12 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி ரேம் உடன் வருகிறது.
இதிலும் சாம்சங் கேலக்ஸி இஸட் ஃபோல்ட் 5 தெறிக்கவிடுகிறது. இரண்டு போன்களும் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. Samsung Galaxy Z Fold 5 ஆனது 50MP + 12MP + 10MP கேமரா கொண்ட ட்ரிபிள் கேமரா அமைப்பை கொண்டுள்ளது. Samsung Galaxy Z Flip 5 ஆனது 12 MP + 12 MP கொண்ட டூயல் கேமரா அமைப்பை கொண்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி இஸட் ஃபோல்ட் 5 ஸ்மார்ட்போன் முன்பக்கத்தில் 10 MP + 4 MP டூயல் கேமரா அம்சத்தை கொண்டுள்ளது. மறுபுறம், சாம்சங் கேலக்ஸி இஸட் ஃபிலிப் 5 சாதனம் அதன் முன்பக்கத்தில் 10 MP செல்பி கேமராவை கொண்டுள்ளது. முறையை இந்த இரண்டு போன்களும் 4400 mAh பேட்டரி மற்றும் 3700 mAh பேட்டரியை கொண்டுள்ளது.
இரண்டு போன்களும் 25W ஃபாஸ்ட் சார்ஜிங், 15W வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் 4.5W ரிவர்ஸ் சார்ஜிங் அம்சத்தை ஆதரிக்கிறது. சாம்சங் கேலக்ஸி இஸட் ஃபோல்ட் 5 சாதனம் ரூ.1,47,600 விலை முதல் கிடைக்கிறது. சாம்சங் கேலக்ஸி இஸட் ஃபிலிப் 5 ஸ்மார்ட்போன் ரூ.82,000 விலை முதல் கிடைக்கிறது. இரண்டு போனும் வெவ்வேறு விதமான ஸ்பெக்ஸ் உடன் வருகிறது.
சாம்சங் கேலக்ஸி இஸட் ஃபோல்ட் 5 மிரட்டலான பிரீமியம் அம்சங்களுடன் வருகிறது. சாம்சங் கேலக்ஸி இஸட் ஃபிலிப் 5 அற்புதமான அம்சங்களுடன் வருகிறது. விலை உங்களுக்கு ஒரு பிரச்சனை இல்லை என்றால், தாராளமாக நீங்கள் சாம்சங் கேலக்ஸி இஸட் ஃபோல்ட் 5 சாதனத்தை வாங்கலாம். 1 லட்சத்திற்கு குறைவான விலையில் ஒரு தரமான போல்டபில் போன் வாங்க விரும்புவோருக்கு சாம்சங் கேலக்ஸி இஸட் ஃபிலிப் 5 தான் பெஸ்ட் சாய்ஸ்.


Click it and Unblock the Notifications








