Home
News

Samsung Vs Xiaomi: ஒரே நேரத்தில் பிரமாண்ட போட்டி- எந்த ஃபோல்டபிள் ஸ்மார்ட்போன் பெஸ்ட்?

ஒரே மாதரியாக ஸ்மார்ட்போன் பயன்படுத்துகிறோமே என்று வருத்தப்படும் ப்ரீமியம் வாடிக்கையாளர்களை பூர்த்தி செய்ய ஃபோல்டபிள், ஃப்ளிப் போன்ற ஸ்மார்ட்போன்களை முன்னணி நிறுவனம் அறிமுகம் செய்து வருகின்றன.

அதன்படி ஒரே காலக்கட்டத்தில் இரண்டு முன்னணி நிறுவனங்கள் ஃபோல்டபிள் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளன. இரண்டையும் ஒப்பிட்டு விவரத்தை பார்க்கலாம் வாங்க.

Samsung Galaxy Z Fold 4 Vs Xiaomi Mix Fold 2

Samsung Galaxy Z Fold 4 Vs Xiaomi Mix Fold 2

சாம்சங்கின் முந்தைய ஃபோல்ட் மாடலுக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் புதிய Samsung Galaxy Z Fold 4 மாடலை அறிமுகம் செய்துள்ளது.

சியோமியின் முந்தைய போல்ட் மாடலுக்கு எதிர்பார்த்த அளவு வரவேற்பை பெறவில்லை என்றே கூறலாம்.

இந்த நிலையில் முந்தைய மாடலை விட பல்வேறு மேம்பாடுகளுடன் புதியXiaomi Mix Fold 2 ஃபோல்டபிள் ஸ்மார்ட்போனை நிறுவனம் அறிமுகம் செய்திருக்கிறது. இரண்டு புதிய மாடலின் விலைக்கு வருவோம்.

இரண்டுமே பிரமாண்ட விலை

இரண்டுமே பிரமாண்ட விலை

சாம்சங் Galaxy Z Fold 4 விலை குறித்து பார்க்கலாம். கேலக்ஸி இசட் ஃபோல்ட் 4 ஸ்மார்ட்போன் ஆனது இந்திய விலை மதிப்பின்படி தோராயமாக ரூ.1,42,700 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் 12ஜிபி ரேம் + 256ஜிபி, 12ஜிபி ரேம் + 512ஜிபி மற்றும் 12ஜிபி ரேம் + 1டிபி என்கிற மூன்று வேரியண்ட்களில் வெளியாகி இருக்கிறது.

சாம்சங் எப்பவுமே இப்படிதான் விலை அதிகமாக இருக்கும். சியோமி ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் இருக்கும் என்று சிந்தித்தால். இங்குதான் ஒரு டுவிஸ்ட் இருக்கிறது.

Xiaomi Mix Fold 2 விலை

Xiaomi Mix Fold 2 விலை

Xiaomi Mix Fold 2 விலை குறித்து பார்க்கையில், இதன் 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் விலை ரூ.1,06,300 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அதேபோல் 12 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் விலை ரூ.1,18,000 எனவும் 12 ஜிபி ரேம் மற்றும் 1 டிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் விலை ரூ.1,41,600 எனவும் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

இரண்டு ஃபோல்டபிள் ஸ்மார்ட்போன்கள்

இரண்டு ஃபோல்டபிள் ஸ்மார்ட்போன்கள்

விலையின் அடிப்படையில் பார்த்தால், xiaomi ஃபோல்டபிள் விலை குறைவுதான். ஆனால் தரத்தின் அடிப்படையில் முந்தைய மாடல் ஸ்மார்ட்போனுடன் ஒப்பிடும் சாம்சங் தரம் வாய்ந்ததாக இருக்கும்.

அதேபோல் இரண்டு ஃபோல்டபிள் ஸ்மார்ட்போன்கள் கேமராக்களும் ஒன்றுக்கொன்று சளைத்தது அல்ல. எண்ணிக்கை அடிப்படையில் ஓரளவிற்கு சாம்சங் ஸ்மார்ட்போன் கேமராக்களை மேம்படுத்தி குறிப்பிடலாம்.

50 மெகாபிக்சல் மெயின் சென்சார்

50 மெகாபிக்சல் மெயின் சென்சார்

சாம்சங் ஃபோல்டபிள் ஸ்மார்ட்போனில் மொத்தம் 5 கேமராக்கள் இருக்கிறது. கவர் டிஸ்ப்ளேவில் ஒன்று, அண்டர் ஸ்க்ரீனில் ஒன்று மற்றும் மீதமுள்ள மூன்று கேமராக்கள் ரியர் பேனலில் இருக்கிறது.

50 மெகாபிக்சல் மெயின் சென்சார், 12 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் கேமரா மற்றும் 10 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமரா இருக்கிறது.

அதேபோல் மெயின் டிஸ்ப்ளேவின் கீழ் 4 எம்பி செல்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. கவர் டிஸ்ப்ளேவில் 10 எம்பி சென்சார் இருக்கிறது.

இந்த அனைத்து கேமரா சென்சார்களும் மேம்பட்டது. அதேபோல் பல்வேறு கேமரா அம்ச ஆதரவுகளை இது கொண்டிருக்கிறது.

Xiaomi Mix Fold 2 ஸ்மார்ட்போனின் கேமரா

Xiaomi Mix Fold 2 ஸ்மார்ட்போனின் கேமரா

Xiaomi Mix Fold 2 ஸ்மார்ட்போனில் கேமரா அம்சங்களும் குறிப்பிடத்தக்க வகையில் இருக்கிறது.

அதாவது இதில் Sony IMX766 சென்சார் மற்றும் OIS உடனான 50MP முதன்மை கேமரா, 13MP வைட் ஆங்கிள் லென்ஸ், 8MP டெலிஃபோட்டோ லென்ஸ் மற்றும் 8K வீடியோ ரெக்கார்டிங்குடன் லைக்கா ஆப்டிக்ஸ் ஆகிய ஆதரவுகளை கொண்டிருக்கிறது.

ஸ்மார்ட்போனின் வெளிப்புற காட்சியின் மேற்புறத்தில் 20MP செல்பி கேமரா பொருத்தப்பட்டிருக்கிறது.

இந்த ஃபோல்டபிள் ஸ்மார்ட்போனை ஓபன் செய்தால் அதன் உட்புறத்தில் கேமரா எதுவும் இல்லை.

எந்த டிஸ்ப்ளே பெஸ்ட்?

எந்த டிஸ்ப்ளே பெஸ்ட்?

டிஸ்ப்ளேக்கு வருவோம், சாம்சங் Galaxy Z Fold 4 ஸ்மார்ட்போனில் 7.6 இன்ச் டைனமிக் AMOLED 2X இன்ஃபினிட்டி ஃப்ளெக்ஸ் மெயின் டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது.

கவர் டிஸ்ப்ளே குறித்து பார்க்கையில், இதில் 6.2-இன்ச் HD+ (904x2,316 பிக்சல்ஸ்) டைனமிக் AMOLED 2X டிஸ்ப்ளே இருக்கிறது.

அதேபோல் சியோமி Mix Fold 2 ஸ்மார்ட்போனானது 8.02 இன்ச் இன்டெர்னல் டிஸ்ப்ளேவையும், 6.56 இன்ச் முழு HD+ Samsung E5 AMOLED டிஸ்ப்ளேவையும் கொண்டிருக்கிறது.

இரண்டும் ஒரே சிப்செட் ஆதரவு

இரண்டும் ஒரே சிப்செட் ஆதரவு

சாம்சங் ஃபோல்டபிள் ஸ்மார்ட்போனானது ஆக்டோ கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8+ ஜென் 1 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது.இது சமீபத்திய முன்னணி சிப்செட் ஆகும்.

அதேபோல் Mix Fold 2 ஸ்மார்ட்போனும் இதே ஸ்னாப்டிராகன் 8+ ஜென் 1 சிப்செட்டைக் கொண்டிருக்கிறது.

ஆண்ட்ராய்டு 12 அடிப்படையிலான MIUI 13 மூலம் சியோமி ஸ்மார்ட்போனும் ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ் அடிப்படையிலான One UI 4.1.1 மூலம் சாம்சங் போனும் இயக்கப்படுகிறது.

பேட்டரி மற்றும் சார்ஜிங் ஆதரவுகள்

பேட்டரி மற்றும் சார்ஜிங் ஆதரவுகள்

சாம்சங் ஃபோல்டபிள் ஸ்மார்ட்போனில் 4,400mAh டூயல் பேட்டரி பேக் செய்யப்பட்டுள்ளது. ஆனால் இதற்கான 25W சாம்சங் சார்ஜர் ஆனது பாக்ஸ் உடன் அனுப்பப்படாது, தனியாகவே விற்கப்படும்.

அதேபோல் சியோமி ஸ்மார்ட்போனில் 67W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 4500 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.

இந்த மேலோட்ட ரிவ்யூக்கள் மூலம் ஓரளவிற்கு தெளிவு கிடைத்திருக்கும். வரும் நாட்களில் இரண்டு ஸ்மார்ட்போன்களின் ரிவ்யூக்கள் தனித்தனியாக அம்சங்களின் அடிப்படையில் வெளியாகும்.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy Z Fold 4 Vs Xiaomi Mix Fold 2: Which One is Best
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X