ரூ.1,999 க்கு Samsung Galaxy Z Fold 4, Galaxy Z Flip 4- உடனே முந்துங்கள்!

|

சாம்சங் நிறுவனம் ப்ரீமியம் ஸ்மார்ட்போன்களுக்கு மிகவும் பெயர் பெற்றது. குறிப்பாக தனித்துவ அம்சத்தோடு வெளியான ஃபோல்ட் மற்றும் ஃப்ளிப் ஸ்மார்ட்போன்கள்.

ஆரம்பத்தில் இவ்வளவு விலை உயர்ந்த ஸ்மார்ட்போனா? இதைவிட ஐபோன் விலையே குறைவு, டிஸ்ப்ளே மடிக்கும் வகையில் இருக்கிறது ஏதாவது பழுது ஏற்பட்டால் சரிசெய்ய அதிக செலவாகும் போன்ற பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது.

ஆனால் இந்த அனைத்து விமர்சனங்களையும் துவம்சம் செய்தது சாம்சங்கின் ஃபோல்ட் மற்றும் ஃப்ளிப் மாடல்கள்.

ப்ரீமியம் வாடிக்கையாளர்கள் மத்தியில் அமோக வரவேற்பு

ப்ரீமியம் வாடிக்கையாளர்கள் மத்தியில் அமோக வரவேற்பு

சாம்சங் கேலக்ஸி இசட் ஃபோல்ட் 3 5ஜி, சாம்சங் கேலக்ஸி இசட் ஃப்ளிப் 3 5ஜி ஆகிய ஸ்மார்ட்போன்கள் ப்ரீமியம் வாடிக்கையாளர்கள் மத்தியில் அமோக வரவேற்பு பெற்றது.

பணக்காரர்கள் ஐபோன் மட்டுமே பயன்படுத்துவார்கள் என்ற நிலையை இந்த ஸ்மார்ட்போன் மாற்றியது. உதாரணமாக உலகப் பணக்காரர்களில் பிரதான ஒருவரான பில்கேட்ஸ் சாம்சங் கேலக்ஸி இசட் ஃபோல்ட் 3 5ஜி தான் பயன்படுத்துகிறார்.

இந்த நிலையில் மேம்பட்ட அம்சங்களோடு ஃபோல்ட் மற்றும் ஃப்ளிப் இன் புதிய மாடல்கள் அறிமுகமாக இருக்கிறது.

Samsung Galaxy Z Fold 4, Galaxy Z Flip 4 முன்பதிவு தொடக்கம்

Samsung Galaxy Z Fold 4, Galaxy Z Flip 4 முன்பதிவு தொடக்கம்

Samsung Galaxy Z Fold 4, Galaxy Z Flip 4 முன்பதிவு இந்தியாவில் தொடங்கியுள்ளன. இந்த ஸ்மார்ட்போனுக்கு அறிமுக சலுகைகளும் கிடைக்கிறது.

இந்த ஸ்மார்ட்போன்கள் ஆகஸ்ட் 10 ஆம் தேதி இந்தியா உட்பட பல உலக சந்தைகளில் வெளியாக இருக்கிறது.

இந்த நிலையில் நேற்று (ஜூலை 31) இரண்டு ஸ்மார்ட்போன்களின் முன்பதிவும் தொடங்கி இருக்கிறது. முன்பதிவு செய்வது எப்படி, பிரத்யேக ஆரம்ப சலுகைகள் என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

முன்பதிவு செய்வது எப்படி?

முன்பதிவு செய்வது எப்படி?

Samsung Galaxy Z Fold 4, Galaxy Z Flip 4 ஆகிய ஸ்மார்ட்போன்களின் முன்பதிவை தற்போதே Samsung இன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் செய்யலாம்.

இரண்டு ஸ்மார்ட்போன்களையும் ரூ.1,999 செலுத்தி முன்பதிவு செய்யலாம். முன்பதிவு செய்யும் போது ஆரம்ப சலுகையாக ரூ.5000 மதிப்புள்ள பிரத்யேக பலன்கள் கிடைக்கிறது.

சலுகையுடன் இந்த ஸ்மார்ட்போனை வாங்க வேண்டும் என்றால் உடனே முன்பதிவு செய்வது அவசியும்.

இது கையில் இருந்தால் உங்கள் மதிப்பு வேறலெவல்

இது கையில் இருந்தால் உங்கள் மதிப்பு வேறலெவல்

Samsung Galaxy Z Fold 4, Galaxy Z Flip 4 ஆகிய இரண்டு ஸ்மார்ட்போன்களும் ஆகஸ்ட் 10 ஆம் தேதி மாலை 6.:30 மணிக்கு அறிமுகமாக இருக்கிறது.

தொடர்ந்து ஆகஸ்ட் இறுதியில் இந்த ஸ்மார்ட்போனின் ஷிப்பிங் தொடங்கப்படும். இந்த ஸ்மார்ட்போன் மாடல்கள் கையில் இருந்தால் கண்டிப்பாக உங்களுக்கான மதிப்பு வேறலெவலில் இருக்கும். இதற்கு இந்த ஸ்மார்ட்போனின் அம்சங்களும் லுக்கும் தான் காரணம்.

Samsung Galaxy Z Fold 4 சிறப்பம்சங்கள்

Samsung Galaxy Z Fold 4 சிறப்பம்சங்கள்

Samsung Galaxy Z Fold 4 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் குறித்த தகவலை பார்க்கலாம். இந்த ஸ்மார்ட்போனானது 7.6 இன்ச் QXGA+ ப்ரைமரி டிஸ்ப்ளே மற்றும் 6.2 இன்ச் HD+ கவர் டிஸ்ப்ளே பொறுத்தப்பட்டிருக்கும். இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களுமே 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷிங் ரேட் உடன் AMOLED பேனல்களாக இருக்கும்.

ரேம் பவர் மற்றும் சிப்செட் வசதி

ரேம் பவர் மற்றும் சிப்செட் வசதி

வரவிருக்கும் புதிய சாம்சங் ஸ்மார்ட்போன்களின் வேரியண்ட்கள் குறித்து பார்க்கையில், இந்த ஸ்மார்ட்போன்களானது 12 ஜிபி ரேம், 16 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி மற்றும் 512 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் ஆகிய வேரியண்ட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல் Qualcomm Snapdragon 8+ Gen 1 எஸ்ஓசி மூலம் இந்த ப்ரீமியம் ஸ்மார்ட்போன் இயக்கப்படும்.

இந்த ஸ்மார்ட்போன்கள் வேரியண்ட்டில் 1டிபி இன்டெர்னல் ஸ்டோரேஜும் இடம்பெறும் என சில தகவல்கள் தெரிவிக்கிறது.

முந்தைய மாடலை விட மேம்பட்ட கேமரா ஆதரவு

முந்தைய மாடலை விட மேம்பட்ட கேமரா ஆதரவு

கேமரா அம்சங்களுக்கு வருவோம், Galaxy Z Fold 3 ஸ்மார்ட்போனில் நிலையான டிரிபிள் 12 எம்பி ரியர் கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தது.

இந்த நிலையில் Galaxy Z Fold 4 ஸ்மார்ட்போனில் 50MP + 12MP + 12MP கேமரா அம்சங்கள் இடம்பெறும். இந்த ஸ்மார்ட்போனில் இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை கேமராக்களானது அல்ட்ரா வைட் மற்றும் டெலிஃபோட்டோ சென்சார்களாக செயல்படும்.

இதன் முன்பக்கத்தில் செல்பி ஆதரவுக்கு என 10எம்பி கேமரா இடம்பெறும் என கூறப்படுகிறது.

புதிய ஃபோல்ட் ஸ்மார்ட்போனின் விலை என்ன தெரியுமா?

புதிய ஃபோல்ட் ஸ்மார்ட்போனின் விலை என்ன தெரியுமா?

25W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 4400mAh பேட்டரி பொருத்தப்பட்டிருக்கும். அதேபோல் இந்த ஸ்மார்ட்போனானது சமீபத்திய ஆண்ட்ராய்டு 12 OS மூலம் இயங்கும்.

மடிக்கக்கூடிய டிஸ்ப்ளே, அம்சங்கள் எல்லாம் ஓகே என்று நினைத்து இந்த ஸ்மார்ட்போனை வாங்க முடிவு செய்தால் 1 லட்சம் ரூபாய் தயாராக வைத்துக் கொள்ளவும்.

காரணம் இந்த ஸ்மார்ட்போன் ரூ.1 லட்சம் விலை பிரிவில் அறிமுகமாகும் என கூறப்படுகிறது. இது Black, Cream/Beige, மற்றும் Grey வண்ண விருப்பத்தில் வெளியிடப்படும்.

Samsung Galaxy Z Flip 4 சிறப்பம்சங்கள்

Samsung Galaxy Z Flip 4 சிறப்பம்சங்கள்

Samsung Galaxy Z Flip 4 சிறப்பம்சங்கள் குறித்து பார்க்காலம். பெயர் குறிப்பிடுவது போல் இது மேல் இருந்து கீழ் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் ஆகும்.

இந்த ஸ்மார்ட்போனானது FHD+ தீர்மானம் மற்றும் 120Hz ரெஃப்ரெஷிங் ரேட் டிஸ்ப்ளே பொருத்தப்பட்டிருக்கும் என கூறப்படுகிறது.

அதேபோல் இந்த ஸ்மார்ட்போன் 6.7 இன்ச் ப்ரைமரி டிஸ்ப்ளே கொண்டிருக்கும்.

சமீபத்திய ஸ்னாப்டிராகன் 8+ Gen 1 SoC மூலம் இயக்கப்படும் இந்த ப்ரீமியம் ஸ்மார்ட்போன் 12ஜிபி வரையிலான ரேம் மற்றும் 256 ஜிபி வரையிலான இன்டெர்னல் ஸ்டோரேஜை கொண்டிருக்கும்.

அதேபோல் ஃப்ளிப் 4 ஸ்மார்ட்போன் 512 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் வேரியண்ட் உடனும் வெளியாகலாம்.

புதிய ஃப்ளிப் மாடலின் விலை

புதிய ஃப்ளிப் மாடலின் விலை

இதில் டூயல் ரியர் கேமரா அமைப்பு இருக்கும். அது 12எம்பி முதன்மை லென்ஸ் மற்றும் 12எம்பி அல்ட்ரா வைட் சென்சார் ஆகும்.

ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் செல்பி ஆதரவுக்கு என 10 எம்பி ஸ்னாப்பர் இடம்பெறும் என கூறப்படுகிறது.

25W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 3700mAh பேட்டரி பொருத்தப்பட்டிருக்கும். வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவை இந்த ஸ்மார்ட்போன் கொண்டிருக்கும் எனவும் சமீபத்திய ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ் மூலம் இயக்கப்படும் எனவும் கூறப்படுகிறது.

இந்த ஸ்மார்ட்போனும் ரூ.1 லட்சம் விலைப் பிரிவில் அறிமுகமாகும்.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy Z Fold 4, Galaxy Z Flip 4 Pre-booking Start in india: Offers Available

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X