அவசரம் வேணாம் கொஞ்சம் வெயிட்.. 30% தள்ளுபடியுடன் Samsung Galaxy Fold! உடனே முந்துங்கள்

|

கீபோர்ட் போன் பயன்பாட்டில் இருந்து மாற்றை விரும்பிய மக்கள், முழுமையாக ஸ்மார்ட்போன்களை ஏற்றுக் கொண்டனர். ஸ்மார்ட்போன்களும் மக்களை முழுமையாக ஆக்கிரமித்து வருகிறது.

ஒரே மாதிரியான வடிவமைப்பு கொண்ட ஸ்மார்ட்போன்களை தான் நீண்ட காலமாக பயன்படுத்துகிறோமே என்று மக்கள் சிந்திக்கத் தொடங்குவதற்கு முன்னாள் நிறுவனங்கள் எடுத்த நடவடிக்கைகளின் விளைவு தான் இந்த ஃபோல்டபிள் ஸ்மார்ட்போன்கள்.

வளர்ச்சி அடையும் ஃபோல்டபிள் ஸ்மார்ட்போன்கள்

வளர்ச்சி அடையும் ஃபோல்டபிள் ஸ்மார்ட்போன்கள்

ஸ்மார்ட்போன்களும் ஆரம்பத்தில் அறிமுகமான போது அதன் விலை அதிகமாகவே இருந்தது. காலப்போக்கில் தரைமட்ட விலைக்கு வந்தது.

அதேபோல் தான் தற்போது ஃபோல்டபிள் ஸ்மார்ட்போன் விலைகளும் அதிகமாக இருக்கிறது. காலப்போக்கில் இந்த மாடல் ஸ்மார்ட்போன்கள் வளர்ச்சி அடைந்து உன் போன் இரண்டாக தான் மடிக்க முடியுமா, என் போனை நான்காக மடிக்கலாம் என்ற பேச்சுக் கூட வரலாம். அந்தக் காலக்கட்டத்தில் இந்த போன்களின் விலையும் அடிமட்டத்துக்கு வரலாம். சரி, இந்த கதைக்கு வரவோம்.

சிறந்த தள்ளுபடியுடன் Samsung Galaxy Fold 3

சிறந்த தள்ளுபடியுடன் Samsung Galaxy Fold 3

ஃபோல்டபிள் ஸ்மார்டபோனின் மிகவும் புகழ் பெற்ற நிறுவனம் சாம்சங். இந்த நிறுவனம் சமீபத்தில் சாம்சங் கேலக்ஸி ஃபோல்ட் 4 மாடலை அறிமுகம் செய்தது. சாம்சங் நிறுவனத்தின் ஃபோல்ட் மாடல்களுக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இந்த நிலையில் அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையில் Samsung Galaxy Fold 3 சிறந்த தள்ளுபடியுடன் கிடைக்கிறது.

30 சதவீதம் தள்ளுபடியுடன் சாம்சங் ஸ்மார்ட்போன்கள்

30 சதவீதம் தள்ளுபடியுடன் சாம்சங் ஸ்மார்ட்போன்கள்

அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையின் இரண்டாம் பகுதியான எக்ஸ்ட்ரா ஹேப்பினஸ் டேஸ் விற்பனை அறிவிக்கப்பட்டு நடந்து வருகிறது.

இந்த விற்பனையில் சாம்சங் கேலக்ஸி ஃபோல்ட் 3 ஸ்மார்ட்போனுக்கு 30 சதவீதம் வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டிருக்கிறது.

Samsung Galaxy Fold 3 ஸ்மார்ட்போனானது ஆகஸ்ட் 2021 இல் அறிமுகப்படுத்தப்பட்டது.

Samsung Galaxy Z Fold 3 விலை

Samsung Galaxy Z Fold 3 விலை

Samsung Galaxy Z Fold 3 ஸ்மார்ட்போனானது நிறுவனத்தின் மூன்றாம் தலைமுறை ஃபோல்டபிள் ஸ்மார்ட்போன் ஆகும்.

இந்த ஸ்மார்ட்போனானது ரூ.1,71,999 என விற்கப்பட்ட நிலையில் தற்போது Amazon Great Indian Festival Extra Happiness Days விற்பனையில் ரூ.1,19,999 என கிடைக்கிறது.

இந்த ஸ்மார்ட்போனுக்கு கூடுதலாக கூப்பன் சலுகையும் வழங்கப்படுகிறது.

கேலக்ஸி இசட் ஃபோல்ட் 3 அம்சங்கள்

கேலக்ஸி இசட் ஃபோல்ட் 3 அம்சங்கள்

சாம்சங் கேலக்ஸி இசட் ஃபோல்ட் 3 இரண்டு அமோலெட் காட்சிகளை கொண்டுள்ளது. இதன் வெளிப்புறம் 6.2 இன்ச் மற்றும் இரண்டாவது டிஸ்ப்ளே 7.6 இன்ச் டிஸ்ப்ளேவுடன் வருகிறது.

இந்த மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 888 சிப்செட் வசதி இருக்கிறது. இது 12 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி உள்சேமிப்பு வசதி உள்ளது. புகைப்படங்களை பதிவு செய்ய 12 எம்பி பின்புற கேமரா அமைப்பும், வெளிப்புற காட்சியில் 10 எம்பி லென்ஸ் மற்றும் டிஸ்ப்ளே ஷூட்டர் கூழ் 4 எம்பி கேமரா உள்ளது. எஸ் பென் ஆதரவும் இதில் கிடைக்கும்.

டிஸ்ப்ளே அம்சங்கள்

டிஸ்ப்ளே அம்சங்கள்

Samsung Galaxy Z Fold 3 சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கையில், இந்த ஸ்மார்ட்போனை இரண்டாக டிஸ்ப்ளே உடன் மடிக்கலாம். இந்த ஸ்மார்ட்போனானது ஆண்ட்ராய்டு 12 அடிப்படையிலான UI 4.1 மூலம் இயங்குகிறது.

இதில் 7.6 இன்ச் பிரைமரி QXGA+ (2,208x1,768 பிக்சல்கள்) டைனமிக் AMOLED 2X இன்ஃபினிட்டி ஃப்ளெக்ஸ் டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது. இந்த டிஸ்ப்ளே ஆனது 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரஷிங் ரேட் ஆதரவைக் கொண்டிருக்கிறது.

6.2-இன்ச் HD+ (832x2,268 பிக்சல்கள்) டைனமிக் 2X0 டிஸ்ப்ளே ஆனது கவர் டிஸ்ப்ளே ஆக செயல்படுகிறது.

இந்த ஸ்மார்ட்போனானது குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது. இதில் 12 ஜிபி ரேம் ஆதரவு உள்ளது.

டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு

டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு

Samsung Galaxy Z Fold 3 ஸ்மார்ட்போனில் டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு இருக்கிறது. முன்பக்கத்தில் 10 எம்பி செல்பி கேமரா பொருத்தப்பட்டிருக்கிறது. அதேபோல் ஃபோல்டபிள் டிஸ்ப்ளேவில் 4 எம்பி அண்டர் டிஸ்ப்ளே கேமரா இடம்பெற்றுள்ளது.

தள்ளுபடி விலையில் வாங்க சரியான நேரம்

தள்ளுபடி விலையில் வாங்க சரியான நேரம்

ஃபோல்டபிள் ஸ்மார்ட்போனில் வயர்லெஸ் மற்றும் 25 வாட்ஸ் வயர்ட் சார்ஜிங் ஆதரவு இருக்கிறது. ரிவர்ஸ் சார்ஜிங் ஆதரவுடன் கூடிய 4400 எம்ஏஎச் டூயல் செல் பேட்டரி இதில் பொருத்தப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் புகழ் பெற்ற ஸ்மார்ட்போன் இதுவாகும். தற்போது இந்த ஸ்மார்ட்போனை தள்ளுபடி விலையில் வாங்க சரியான நேரம்.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy Z Fold 3 Now Available at Huge Discount in Amazon

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X