ரூ.17,000 தள்ளுபடி.,இனி கெத்தா யூஸ் பண்ணலாம்- சாம்சங் கேலக்ஸி இசட் போல்ட்3, இசட் ஃபிளிப்3 வாங்க சரியான நேரம்!

|

சாம்சங் நிறுவனம் தனது மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களை வாங்குபவர்களுக்கு சலுகைகளை அறிவித்துள்ளது. சாம்சங் கேலக்ஸி இசட் ஃபோல்ட் 3 மற்றும் சாம்சங் கேலக்ஸி இசட் ஃபிளிப் 3 ஸ்மார்ட்போன்களுக்கு சலுகைகளை அறிவித்துள்ளன. இந்த ஸ்மார்ட்போன் வாங்குபவர்களுக்கு ரூ.17000 வரை தள்ளுபடியை சாம்சங் அறிவித்துள்ளது. இந்த தள்ளுபடி உடனடி கேஷ்பேக் மூலம் கிடைக்கிறது. அதுமட்டுமின்றி சாம்சங் கேலக்ஸி பட்ஸ் 2 இயர்பட்ஸ்களை வாங்கும் போது தொகுக்கப்பட்ட தள்ளுபடிகளை நிறுவனம் வழங்குகிறது.

சாம்சங் கேலக்ஸி இசட் ஃபோல்ட் 3 மற்றும் சாம்சங் கேலக்ஸி ஃபிளிப் 3

சாம்சங் கேலக்ஸி இசட் ஃபோல்ட் 3 மற்றும் சாம்சங் கேலக்ஸி ஃபிளிப் 3

சாம்சங் கேலக்ஸி இசட் ஃபோல்ட் 3 மற்றும் சாம்சங் கேலக்ஸி ஃபிளிப் 3 ஸ்மார்ட்போன்கள் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு கேலக்ஸி பட்ஸ் 2ஐ வெறும் ரூ.1999-க்கு வாங்கலாம். சாம்சங்கின் இந்த டபிள்யூஎஸ் இயர்பட்ஸ்களின் உண்மை விலை ரூ.11,999 ஆக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் தற்போது இந்த கேலக்ஸி பட்ஸ் 2 சாதனம் வாங்கும் போது ரூ.10,000 வரை தள்ளுபடியில் வாங்கலாம். கேலக்ஸி பட்ஸ் 2 சாதனம் என்பது டிடபிள்யூஎஸ் சாதனங்களில் மிகவும் பிரபலமானவை ஆகும்.

தள்ளுபடிகள் மற்றும் சலுகைகள்

தள்ளுபடிகள் மற்றும் சலுகைகள்

சாம்சங்கின் கேலக்ஸி இசட் ஃபோல்ட் 3 மற்றும் கேலக்ஸி இசட் ஃபிளிப் 3 சாதனங்களுக்கு வழங்கப்படும் தள்ளுபடிகள் மற்றும் சலுகைகள் குறித்த விவரங்களை பார்க்கலாம். எச்டிஎஃப்சி வங்கி டெபிட் அல்லது கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகளுக்கு ரூ.7000 வரை மேம்படுத்தல் போனஸ் மற்றும் ரூ.7000 உடனடி கேஷ்பேக் வழங்கப்படுகிறது. அப்படி மொத்தமாக கேலக்ஸி இசட் ஃபோல்ட் 3 மற்றும் கேலக்ஸி இசட் ஃபிளிப் 3 ஸ்மார்ட்போன்களை வாங்கும் போது மொத்தமாக ரூ.17000 வரை தள்ளுபடிகள் வழங்கப்படுகிறது.

12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட்

12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட்

சாம்சங் கேலக்ஸி ஃபோல்ட் 3 ஸ்மார்ட்போனின் 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை ரூ.1,49,999 என நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. அதேபோல் 512 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் உடன் கூடிய மாடலின் விலை ரூ.1,57,999 ஆக இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது பாண்டம் பிளாக் மற்றும் பாண்டம் க்ரீன் வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது. சாம்சங் கேலக்ஸி இசட் ஃபிளிப் 3 சாதனத்தின் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை ரூ.84,999 ஆகவும் இதன் 256 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் மாடலின் விலை ரூ.89,999 ஆகவும் கிடைக்கிறது. இந்த இரண்டு மாடல்களும் பாண்டம் பிளாக் மற்றும் க்ரீன் வண்ண விருப்பத்தில் கிடைக்கிறது.

கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் இந்திய சந்தையில் அறிமுகம்

கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் இந்திய சந்தையில் அறிமுகம்

சாம்சங் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்திய சந்தையில் கேலக்ஸி இசட் ஃபோல்ட் 3 மற்றும் கேலக்ஸி இசட் பிளிப் 3 ஆகியவற்றுடன் அறிமுகப்படுத்தியது. இந்த சாதனங்கள் முதலில் செப்டம்பர் மாதம் இந்தியாவில் விற்பனைக்கு வந்தன. கேலக்ஸி ஃபோல்ட் 3 மற்றும் கேலக்ஸி இசட் ஃப்ளிப் 3 சாதனங்கள் சாம்சங்கின் மூன்றாம் தலைமுறை மடிக்கக்கூடிய சாதனங்கள் ஆகும். தாங்கள் பயன்படுத்தும் சாதனங்களை மேம்படுத்த விரும்பினால் அதற்கு இது சரியான நேரமாகும். காரணம் சாம்சங் கேலக்ஸி இசட் ஃபோல்ட் 3 மற்றும் சாம்சங் கேலக்ஸி இசட் ஃபிளிப் 3 சாதனங்களுக்கு சிறந்த தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீத டிஸ்ப்ளே

120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீத டிஸ்ப்ளே

சாம்சங் கேலக்ஸி இசட் ஃபோல்ட் 3 சாதனம் 1768 x 2208 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 7.6 இன்ச் இன்ஃபினிட்டி ஃப்ளெக்ஸ் டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. இது 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் கூடிய 6.2 இன்ச் AMOLED பேணலைக் கொண்ட கவர் டிஸ்பிளேவை கொண்டுள்ளது. டிஸ்பிளே கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸின் பாதுகாப்பு மற்றும் 25: 9 என்ற விகித விகிதத்துடன் வருகிறது. மறுபுறம், Z Flip 3 சாதனம் 6.7' இன்ச் முதன்மை டிஸ்பிளே மற்றும் 1.9 இன்ச் கவர் டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. இது கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸால் பாதுகாக்கப்படுகிறது.

12MP + 12MP இரட்டை பின்புற கேமரா அமைப்பு

12MP + 12MP இரட்டை பின்புற கேமரா அமைப்பு

சாம்சங் இசட் ஃபோல்ட் 3 சாதனம் உள்ளே 4 எம்பி டிஸ்ப்ளே கேமரா மற்றும் கவர் திரையில் 10 எம்பி செல்ஃபி கேமராவை வைத்துள்ளது. இந்த சாதனம் 12 எம்பி முக்கிய சென்சார், 12 எம்பி டெலிஃபோட்டோ லென்ஸ் மற்றும் 12 எம்பி அல்ட்ரா-வைட்-ஆங்கிள் சென்சார் கொண்ட மூன்று பின்புற கேமரா அமைப்பு கொண்டுள்ளது. சாம்சங் Z Flip 3 ஆனது 12MP + 12MP இரட்டை பின்புற கேமரா அமைப்பு மற்றும் 10Mp செல்ஃபி ஸ்னாப்பரை கொண்டுள்ளது. ஹூட்டின் கீழ், இரண்டு போன்களும் குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. சாம்சங் Z ஃபோல்ட் 3 இல் 12GB ரேம் மற்றும் சாம்சங் Z Flip 3 இல் 8GB உடன் இணைக்கப்பட்டுள்ளது. சாம்சங் Z ஃபோல்ட் 3 25W வேகமான சார்ஜிங் ஆதரவுடன் 4,400mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. ஃப்ளிப் 3 15W சார்ஜிங் வேகத்துடன் 3,300mAh பேட்டரியைக் கொண்டுள்ளது.

Galaxy Z Flip 3 5G ஒலிம்பிக் நினைவு பதிப்பு

Galaxy Z Flip 3 5G ஒலிம்பிக் நினைவு பதிப்பு

சமீபத்தில் சாம்சங் நிறுவனம் புதிதாக Samsung Galaxy Z Flip 3 5G ஒலிம்பிக் நினைவு பதிப்பு எடிஷன் மாடலை சீனாவில் வெளியிடப்பட்டுள்ளது. சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியுடன் (IOC) இணைந்து சாம்சங்கின் ஒத்துழைப்பைத் தொடர்ந்து இந்த புதிய ஸ்பெஷல் எடிஷன் மாடலை சாம்சங் நிறுவனம் இப்போது வெளிப்படுத்தியுள்ளது. இது 2022 பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக்கை கொண்டாடும் வகையில் சாம்சங் கேலக்ஸி இசட் ஃபிளிப் 3 இன் புதிய சிறப்பு மாறுபாட்டை சாம்சங் வெளியிடுவதாகக் கூறியுள்ளது.

விண்டர் ட்ரீம் ஒயிட் நிறம்

விண்டர் ட்ரீம் ஒயிட் நிறம்

இந்த புதிய Samsung Galaxy Z Flip 3 5G ஒலிம்பிக்ஸ் ஸ்பெஷல் எடிஷன் ஸ்மார்ட்போன் மாடல் விண்டர் ட்ரீம் ஒயிட் நிறத்தில் வெளி வரும் என்று நிறுவனம் கூறியுள்ளது. இந்த புதிய Samsung Galaxy Z Flip 3 5G ஒலிம்பிக்ஸ் ஸ்பெஷல் எடிஷன் ஸ்மார்ட்போன், ஒலிம்பிக்கால் ஈர்க்கப்பட்ட வால்பேப்பர்கள், ஐகான்கள் மற்றும் கவர் ஸ்கிரீன் க்ளாக் ஸ்டைல்களை கொண்டிருக்கும் என்று நிறுவனம் கூறியுள்ளது. இதன் பின்புறம் சாம்சங் மற்றும் பெய்ஜிங் ஒலிம்பிக் 2022 லோகோக்களுடன் இடம்பெற்றுள்ளது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Samsung Galaxy Z Fold 3 and Galaxy Z Flip 3 Smartphone Gets Up to Rs.17000 Discount in India: Current Price Details

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X