50-50 வெறி ஏத்தும் ஆஃப்பர்.! யோசிக்காம Samsung Galaxy Z Flip3 போனை வாங்கலாமா? வேண்டாமா?
சாதாரண ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தி போர் அடித்துவிட்டதா? அப்போ உடனே ஃபிலிப் ஸ்மார்ட்போனுக்கு மாறுங்க. ஃபிலிப் போனா? அது 1 லட்சம் கிட்ட வருமே! என்று நீங்கள் யோசிப்பது எங்களுக்கு தெரிகிறது. ஆனால், ஃபிலிப் போன் மீது இப்போது 50-50 ஆஃப்பர் அறிவிக்கப்பட்டுள்ளது.
எது 50-50 ஆஃப்பர்-ஆ! உண்மையாவா? என்று சிலர் ஷாக் ஆகலாம். அமேசான் மற்றும் பிளிப்கார்ட் தளங்களில் சிறப்பு விற்பனை கோலாகலமாக நடைபெற்று வருவதனால் தான் இந்த ஆஃப்பர் மழை பொழிகிறது. இதுவரை இல்லாத அளவில், பல தயாரிப்புகள் மீது சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் நம்மை கவர்ந்த சலுகையாக Samsung Galaxy Z Flip3 என்று ஃபிலிப் போன் மீது கிடைக்கும் தள்ளுபடி உள்ளது.

பிளிப்கார்ட் பிக் சேவிங்ஸ் டேஸ் சேல்ஸ் (Flipkart Big Savings Days sale) விற்பனையில் இந்த மிரட்டலான சலுகை லைவில் உள்ளது. சாம்சங் கேலக்ஸி இஜட் பிலிப் 3 (Samsung Galaxy Z Flip3) என்ற இந்த ஃபிலிப் ஸ்மார்ட்போன் 50% தள்ளுபடியுடன் வாங்க கிடைக்கிறது. இந்த Samsung Galaxy Z Flip3 ஸ்மார்ட்போன் கடந்த 2021 ஆம் ஆண்டில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.
பிரீமியம் ஸ்மார்ட்போன் மாடலாக ரூ.84,999 என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்ட போனின் தற்போதைய விலையே வேற. பிளிப்கார்ட் சலுகையின் மூலம், இப்போது இதன் விலை பாதிக்கு பாதி குறைந்துள்ளது. பாதிக்கு பாதி, 50-50 ஆஃப்பர் என்றதும் எல்லோரும் யோசிக்காமல் இந்த போனை வாங்க அதிக ஆர்வம் காட்ட வாய்ப்புள்ளது. முதலில் உங்கள் ஆர்வத்திற்கு கொஞ்சம் பிரேக் போடுங்கள். இந்த சாதனத்தை ஆஃப்பர் விலையில் வாங்கலாமா? வேண்டாமா? என்பதை முதலில் தெரிந்துகொள்ளுங்கள்.
Samsung Galaxy Z Flip3 இன் 8ஜிபி + 128ஜிபி மாடல் ரூ.84,999 விலையிலும், இதன் 256ஜிபி மாடல் ரூ.88,999 விலையிலும் வருகிறது. இருப்பினும், Flipkart Big Savings Days விற்பனையின் ஒரு பகுதியாக, கிடைக்கும் சலுகைக்கு பிறகு இதன் விலை ரூ.44,999 ஆக குறைந்துள்ளது. இது ரூ.40,000 தள்ளுபடியை பெறுகிறது. கூடுதலாக, நீங்கள் SBI கிரெடிட் கார்டு மூலம் இந்த போனை வாங்கினால், ரூ.2,500 எக்ஸ்ட்ராவாக உடனடி தள்ளுபடியும் கிடைக்கிறது.

இதன் மூலம் Samsung Galaxy Z Flip3 விலை ரூ.42,649 ஆக குறைந்துள்ளது. சரி, இந்த Samsung Galaxy Z Flip3 போனை இப்போது வாங்கலாமா? வேண்டாமா? இந்த சாதனம் 2021 இல் அறிமுகப்படுத்தப்பட்டது. சாம்சங்கின் மூன்றாம் தலைமுறை Flip ஃபோன் மாடல் இதுவாகும். இப்போது 2023 இல், OPPO, Vivo மற்றும் பிற பிராண்டுகளிலிருந்து பல மாடல்கள் இந்த விலையில் வாங்க கிடைக்கிறது.
இருப்பினும், நீங்கள் இந்த போனை வாங்குவதற்கு முன் கருத்தில் கொள்ள சில விஷயங்கள் உள்ளன. முதலாவதாக, இது 3,300mAh பேட்டரியுடன் வருகிறது. இது மிதமான பயன்பாட்டுடன் ஒரு நாள் முழுவதுமாக கூட தாக்குபிடிக்காது என்பது வருத்தமளிக்கிறது. இது 15W சார்ஜர் உடன் வருகிறது. ஆனால் இதே ரூ.45,000 மற்றும் ரூ.50,000 பிரிவில் இப்போது 100W அல்லது 120W சார்ஜிங் வேகத்துடன் ஸ்மார்ட்போன்கள் கிடைக்கின்றன.
இந்த ஃபிலிப் போன் Qualcomm Snapdragon 888 உடன் வருகிறது. சமீபத்திய சாப்ட்வேர் அப்டேட்டிற்கு பிறகு இந்த போனில் சிறிது ஓவர் ஹீட்டிங் இஸ்யூ இருப்பதாக கூறப்படுகிறது. கடைசியாக, 2023 ஆம் ஆண்டில் இதே விலையில் கிடைக்கும் மாடல்களுடன் ஒப்பிடும்போது இது அவ்வளவு சிறப்பாக தெரியவில்லை. இருப்பினும், நீங்கள் ஒரு பிலிப் போனை பயன்படுத்த விரும்பினால், Samsung Galaxy Z Flip3 மீது கிடைக்கும் சலுகைக்கு நீங்கள் நேரடியாக செல்லலாம்.


Click it and Unblock the Notifications








