ஃபோல்டா?., ஃபிளிப்பா?- உங்க வாய்ப்பு: அதிரடி தள்ளுபடியுடன் சாம்சங் கேலக்ஸி இசட் ஃபிளிப்3 5ஜி, இசட் ஃபோல்ட் 3!
சாம்சங் கேலக்ஸி இசட் ஃபிளிப்3 5ஜி, கேலக்ஸி இசட் ஃபோல்ட் 3 சாதனங்கள் அதிரடி தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. சாம்சங் நிறுவனம் பல்வேறு விலைப் பிரிவுகளில் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. அதன் சாம்சங் நிறுவனத்தில் உயர்ரக ப்ரீமியம் ஸ்மார்ட்போன்களாக இருப்பது சாம்சங் கேலக்ஸி இசட் ஃபிளிப்3 5ஜி, கேலக்ஸி இசட் ஃபோல்ட் 3 ஆகும். இது டிஸ்ப்ளே இரண்டாக மடிக்கக்கூடிய ஃபோல்ட் ரகம் மற்றும் மேலும் கீழும் மடிக்கக்கூடிய ஃபிளிப் ரக ஸ்மார்ட்போன்கள் ஆகும்.

மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள் பிரிவு
சாம்சங் நிறுவனம் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள் பிரிவில் முதன்மை ரகமாக இருக்கிறது. சாம்சங் நிறுவனம் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மாடலை கேலக்ஸி இசட் தொடரில் அறிமுகம் செய்தது. சாம்சங் ஸ்மார்ட்போன்களின் இந்த ஃபோல்ட் மற்றும் ஃபிளிப் மாடல்களான கேலக்ஸி இசட் ஃபோல்ட் 3 5ஜி மற்றும் கேலக்ஸி இசட் ஃபிளிப் 3 5ஜி ஸ்மார்ட்போன்களுக்கு சிறந்த சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன்கள் பிற ஃபிளாக்ஷிப் மாடல்களை விட அதிகமாக இருந்தாலும் குறிப்பிட்ட சலுகைகளும் தள்லுபடிகளும் வழங்கப்படுகின்றன.

சாம்சங் கேலக்ஸி இசட் பிளிப் 3 5ஜி மற்றும் கேலக்ஸி இசட் ஃபோல்ட் 3
சமீபத்திய வளர்ச்சியாக, சாம்சங் கேலக்ஸி இசட் பிளிப் 3 5ஜி மற்றும் கேலக்ஸி இசட் ஃபோல்ட் 3 ஸ்மார்ட்போன் வாங்குபவர்களுக்காக தள்ளுபடிகள் ஐசிஐசிஐ மற்றும் எஸ்பிஐ போன்ற வங்கிகள் மூலம் வழங்கப்படுகின்றன. முன்னதாக எச்டிஎஃப்சி வங்கி மூலம் மட்டுமே கேஷ்பேக் சலுகைகள் மற்றும் போனஸ் வழங்கப்படுகின்றன.

சாம்சங் கேலக்ஸி இசட் ஃபிளிப் 3 5ஜி தள்ளுபடிகள்
ஐசிஐசிஐ, எஸ்பிஐ மற்றும் எச்டிஎஃப்சி போன்ற வங்கிகளின் கார்ட்களை பயன்படுத்தி சாம்சங் கேலக்ஸி இசட் ஃபிளிப் 3 வாங்கும் போது ரூ.10,000 போனஸ் வழங்கப்படுகிறது. அதேபோல் இந்த வங்கி அட்டைகள் மூலம் ஸ்மார்ட்போன்கள் வாங்கும் போது ரூ.7000 கேஷ்பேக் வழங்கப்படுகிறது. அதேபோல் சாம்சங் ஃபைனான்ஸ்+ சர்விஸ் மூலம் சாதனம் வாங்கும் போது ரூ.5000 கேஷ்பேக் வழங்கப்படுகிறது. சாம்சங் ஃபைனான்ஸ்+ என்பது தனித்துவமான டிஜிட்டல் கடன் வழங்கும் தளம் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி ஸ்மார்ட்போன்கள் வாங்கும் போது எளிதான ஃபைனான்ஸ் சலுகையை பெறுவார்கள்.

இரண்டு வேரியண்ட்களில் அறிமுகம்
சாம்சங் கேலக்ஸி இசட் பிளிப் 3 ஆனது இரண்டு வேரியண்ட்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அது 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வசதியோடும்ம், 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு வசதியோடும் வருகிறது. இதன் விலை விவரங்கள் குறித்து பார்க்கையில், 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை ரூ.84,999 ஆகவும் 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை ரூ.88,999 ஆகவும் இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் இரண்டு வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது. அது க்ரீம் மற்றும் பேண்டம் பிளாக் வண்ண விருப்பங்களில் வருகிறது.

சாம்சங் கேலக்ஸி இசட் போல்ட் 3
சாம்சங் கேலக்ஸி இசட் போல்ட் 3 ஸ்மார்ட்போனை ஐசிஐசிஐ வங்கி, எஸ்பிஐ வங்கி அல்லது எச்டிஎஃப்சி வங்கி மூலம் வாங்கும் போது ரூ.7000 அப்க்ரேட் போனஸ் வழங்கப்படுகிறது. அதேபோல் இந்த வங்கி அட்டைகள் மூலம் பணம் செலுத்தும் போது ரூ.7000 கேஷ்பேக் சலுகை வழங்கப்படுகிறது. சாம்சங் ஃபைனான்ஸ் ப்ளஸ் மூலம் வாங்கும் போது ரூ.5000 கேஷ்பேக் வழங்கப்படுகிறது.

12 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி உள்சேமிப்பு வசதி
சாம்சங் கேலக்ஸி இசட் போல்ட் 3 ஸ்மார்ட்போன் இரண்டு வேரியண்ட்களில் வருகிறது. அது 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு, 12 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி உள்சேமிப்பு வசதி ஆகும். அதேபோல் இதன் 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை ரூ.1,49,999 ஆகவும் 12 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை ரூ.1,57,999 ஆகவும் இருக்கிறது. இந்த ஃபோல்டபில் ஸ்மார்ட்போனானது இரண்டு வண்ண விருப்பங்களில் வருகிறது. அது பேண்டம் க்ரீன் மற்றும் பேன்டம் பிளாக் ஆகும்.


Click it and Unblock the Notifications