Home
News

ஆஹா! என்ன ஒரு மடிப்பு! என்ன ஒரு லுக்! Samsung அறிமுகம் செய்யும் புதிய மாடல் போனுக்கு இவ்வளவு மவுசா?

வழக்கமானா ஸ்மார்ட்போன் (Smartphone) மாடல்களை பார்த்து மக்களுக்கு போர் அடித்துவிட்டது. அதனால், வித்தியாசமான மொபைல் போன்களை வாங்க மக்கள் ஆர்வம் காட்டத் துவங்கியுள்ளனர். இந்த விதத்தில் சாம்சங் (Samsung) நிறுவனம் மிகவும் சிறப்பாக செயல்படுகிறது.

சாம்சங் நிறுவனம் தனது புதிய தலைமுறை ஃபிளாக்ஷிப் போல்டபில் ஸ்மார்ட்போன்களை விரைவில் அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. சாம்சங் நிறுவனம் அடுத்த மாதம் சாம்சங் கேலக்ஸி Z போல்ட் 5 (Samsung Galaxy Z Fold 5) மற்றும் சாம்சங் கேலக்ஸி Z பிலிப் 5 (Samsung Galaxy Z Flip 5) ஆகிய 2 மாடல்களை உலகளாவிய சந்தைக்கு அறிவிக்க போகிறது.

ஆஹா! என்ன ஒரு மடிப்பு! Samsung அறிமுகம் செய்யும் புதிய மாடல் போன்!

ஆனால், அதன் ஜூலை அறிமுகத்திற்கு முன்னதாக, Samsung Galaxy Z Flip 5 சாதனம் இந்திய சான்றிதழ் இணையதளத்தில் காணப்பட்டுள்ளது. Samsung Galaxy Z Flip 5 இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுவது உறுதியாகியுள்ளது. தென் கொரிய தொழில்நுட்ப நிறுவனமான சாம்சங், தனது போல்டபில் ஸ்மார்ட்போன் பிரிவை கடந்த சில ஆண்டுகளாக விரிவுபடுத்தி வருகிறது.

இதன் கீழ், நிறுவனம் தற்போது Samsung Galaxy Z Flip 5 மாடலை அறிமுகம் செய்யவுள்ளது. இந்த போனின் சில முக்கிய தகவல்கள் இப்போது BIS (Bureau of Indian Standards) தளத்தில் காணப்பட்டுள்ளது. இது, அதன் SM-F731B என்ற மாடல் எண்ணை வெளிப்படுத்தும் அடையாளத்துடன் பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த போனின் இந்திய வருகையை நிறுவனம் உறுதிப்படுத்துகிறது.

ஆனால் துரதிர்ஷ்டவசமாக, வரவிருக்கும் ஸ்மார்ட்போன் தொடர்பான வேறு எந்த சிறந்த விவரங்களையும் சான்றிதழ் வெளிப்படுத்தவில்லை. ஃபிளிப் மாடல் அதன் கிளாம்ஷெல் போல்ட் வடிவமைப்பையும், பெரிய புதிய கவர் டிஸ்ப்ளேவையும் பெரும் என்று கூறப்படுகிறது. இருப்பினும், முந்தைய கசிவுகளின் அடிப்படையில், இந்த ஸ்மார்ட்போன் சாதனம் 12 மெகாபிக்சல் டூயல் கேமரா அமைப்புடன் பின்புறத்தில் 3.4 இன்ச் கவர் டிஸ்பிளேயுடன் வெளிவரும்.

ஆஹா! என்ன ஒரு மடிப்பு! Samsung அறிமுகம் செய்யும் புதிய மாடல் போன்!

இதற்கிடையில், இதன் மெயின் டிஸ்ப்ளே 6.7' இன்ச் AMOLED டிஸ்பிளேவை கொண்டிருக்கும். இது முழு HD+ தெளிவுத்திறனைக் கொண்டுள்ளது. இது 120Hz ரெஃப்ரஷ் ரேட் உடன் பஞ்ச் ஹோல் செல்ஃபி கேமரா கடவுட்டை கொண்டுள்ளது. ஹூட்டின் கீழ், Samsung Galaxy Z Flip 5 ஆனது குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 Gen 2 சிப்செட் உடன் வெளிவரும், இது 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்படும்.

இந்த Samsung Galaxy Z Flip 5 போல்டபில் ஸ்மார்ட்போன் சாதனம் 3,700mAh பேட்டரி உடன் பேக் செய்யப்பட்டுள்ளது. இது 25W பாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கும். 10W வயர்லெஸ் சார்ஜிங் போன்ற அம்சத்தையும் இது ஆதரிக்கிறது. மற்ற குறிப்பிடத்தக்க அம்சங்களில், பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனர், ஆண்ட்ராய்டு 13 OS அடிப்படையிலான OneUI 5.1 அவுட் தி பாக்ஸ் உடன் இது வெளிவரும்.

ஜூலையில் தொடங்கும் நிகழ்வையொட்டி இன்னும் பல தகவல்கள் லீக் செய்யப்படும் என்று நம்புகிறோம். விரைவில் இந்த சாதனம் குறித்த மற்ற விபரங்களை அப்டேட் செய்கிறோம்.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy Z Flip 5 spotted on BIS Website Indian Launch Confirmed Soon
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X