படையல் வைத்து விருந்து போடும் Samsung: ஆகஸ்ட் 10 வரை பசியோடு காத்திருக்கும் வாடிக்கையாளர்கள்!

|

சாம்சங் கேலக்ஸி இசட் ஃபிளிப் 4, கேலக்ஸி இசட் ஃபோல்ட் 4 ஆகிய ஸ்மார்ட்போன்கள் ஆகஸ்ட் 10 ஆம் தேதி அன்று அறிமுகமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன்களுடன் சாம்சங் கேலக்ஸி வாட்ச் 5 மற்றும் வாட்ச் 5 ப்ரோ ஆகிய சாதனங்களும் அறிமுகமாகும் என தகவல்கள் தெரிவிக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் அப்படி என்ன ஸ்பெஷல் என்பது குறித்து பார்க்கலாம்.

ஆகஸ்ட் 10 ஆம் தேதி இரண்டு ப்ரீமியம் ஸ்மார்ட்போன்கள்

ஆகஸ்ட் 10 ஆம் தேதி இரண்டு ப்ரீமியம் ஸ்மார்ட்போன்கள்

சாம்சங் நிறுவனம் ஆகஸ்ட் 10 ஆம் தேதி இரண்டு ப்ரீமியம் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய இருக்கிறது. இதில் ஒன்று ஃப்ளிப் ரக மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மற்றொன்று ஃபோல்ட் ரக மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் ஆகும். டிப்ஸ்டரில் இந்த ஸ்மார்ட்போன் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. ப்ரீமியம் ரக ஸ்மார்ட்போன் வாங்க திட்டமிட்டிருப்பவர்களுக்கு ஒரு விருந்தாக இந்த ஸ்மார்ட்போன்கள் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கேலக்ஸி இசட் ஃபிளிப் 4 மற்றும் கேலக்ஸி இசட் ஃபோல்ட் 4

கேலக்ஸி இசட் ஃபிளிப் 4 மற்றும் கேலக்ஸி இசட் ஃபோல்ட் 4

சாம்சங் நிறுவனம் கேலக்ஸி இசட் ஃபிளிப் 4, கேலக்ஸி இசட் ஃபோல்ட் 4 ஆகிய ஸ்மார்ட்போன்களுடன் Galaxy Watch 5 மற்றும் Watch 5 Pro ஆகியவற்றை ஆகஸ்ட் 10 ஆம் தேதி அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. டிப்ஸ்டர் இவான் ப்ளாஸ் மூலம் கசிந்த தகவலை விரிவாக பார்க்கலாம். சாம்சங் நிறுவனம் Galaxy Unpacked நிகழ்வை நடத்த இருப்பதாக கூறப்படுகிறது.

டிப்ஸ்டர் தகவல் சொன்ன சுவாரஸ்யம்

டிப்ஸ்டர் தகவல் சொன்ன சுவாரஸ்யம்

சாம்சங் நிகழ்வில் Galaxy Z Flip 4 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய இருப்பதாக டிப்ஸ்டர் தகவல் தெரிவிக்கிறது. மேலும் இதனுடன் Galaxy Z Fold 4 அறிமுகப்படுத்தப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் நிறுவனம் தரப்பில் இருந்து ஃபோல்டபிள்களுக்கான வெளியீட்டு தேதியை நிறுவனம் இன்னும் உறுதிப்படுத்தவில்லை என்பது கவனிக்கத்தக்க ஒன்று. அதே சமயத்தில் கேலக்ஸி இசட் ஃப்ளிப் 4 அறிமுகமாவது உறுதியான தகவலாக இருக்கிறது.

இதுவரை இல்லாத 3x ஜூம் கேமரா

இதுவரை இல்லாத 3x ஜூம் கேமரா

சாம்சங்கின் கேலக்ஸி அன்பேக்கிட் நிகழ்வு ஆகஸ்ட் 10 ஆம் தேதி நடைபெறும் என ஜான் ப்ரோஸர் முன்பு கண்டறிந்து தெரிவித்தார். சாம்சங்கின் வரவிருக்கும் ஃபோல்டபிள் ஸ்மார்ட்போன் ஆனது "சாம்சங் போனில் இதுவரை கண்டிராத சிறந்த 3x ஜூம் கேமரா இடம்பெறும்" என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன்களின் அம்சங்களை விரிவாக பார்க்கலாம்.

50 எம்பி முதன்மை கேமரா உட்பட டிரிபிள் கேமரா ஆதரவு

50 எம்பி முதன்மை கேமரா உட்பட டிரிபிள் கேமரா ஆதரவு

சாம்சங் Galaxy Z Fold 4 ஸ்மார்ட்போனானது 50 எம்பி முதன்மை கேமரா உடன் டிரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இதில் 3x ஜூம் உடனான 12 எம்பி அல்ட்ராவைட் லென்ஸ் மற்றும் 12 எம்பி டெலிஃபோட்டோ கேமராவைக் கொண்டிருக்கும் என தகவல் வெளியாகி இருக்கிறது. Galaxy S22 மற்றும் Galaxy S22 Plus போன்றே கேலக்ஸி இசட் ஃபோல்ட் 4 ஸ்மார்ட்போனிலும் அல்ட்ரா வைட் ஸ்னாப்பர் இருக்கும் என GizmoChina தகவல் தெரிவிக்கிறது. இதன்மூலம் Galaxy Z Fold 4 ஸ்மார்ட்போன் மேம்படுத்தப்பட்ட புகைப்பட அனுபவத்தை வழங்கும் என கசிவு தகவல் உறுதிப்படுத்துகிறது.

உயரம் குறைவு அகலம் அதிகம்

உயரம் குறைவு அகலம் அதிகம்

Samsung Galaxy Z Fold 4 ஆனது 6.2 இன்ச் கவர் டிஸ்ப்ளே மற்றும் 7.6 இன்ச் இன்டெர்னல் டிஸ்ப்ளே உடன் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதுமாடல் ஸ்மார்ட்போனை பொருத்தவரை, முந்தைய போல்ட் மாடலை விட குறுகிய அளவிலான டிஸ்ப்ளே மற்றும் அகலமான டிஸ்ப்ளேவை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. அதுமட்டுமில்லை ஸ்மார்ட்போனில் இன்டர்னல் டிஸ்ப்ளேவில் இன்-ஸ்க்ரின் கேமரா இருக்கும் என கூறப்படுகிறது.

பிரத்யேகமாக பல அம்சங்கள்

பிரத்யேகமாக பல அம்சங்கள்

ஃபோல்ட் ஸ்மார்ட்போனில் கேமரா அம்சங்களை பொறுத்தவரை, இதன் கேமரா குறித்த எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை. இருப்பினும் இதில் 10 எம்பி முன்புற கேமரா மற்றும் 4 எம்பி அண்டர் டிஸ்ப்ளே கேமரா இருக்கும் என கூறப்படுகிறது. இந்த Samsung Galaxy Z Fold 4 ஸ்மார்ட்போனில் 4400 எம்ஏஎச் பேட்டரி இருக்கும் எனவும் 25 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டிருக்கும் எனவும் கூறப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் வயர்லெஸ் மற்றும் ரிவர்ஸ் சார்ஜிங் ஆதரவைக் கொண்டிருக்கும் எனவும் பிரத்யேக S Pen ஸ்லாட் இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது

இவரே இந்த ஸ்மார்ட்போன் தான் யூஸ் பண்றாரு

இவரே இந்த ஸ்மார்ட்போன் தான் யூஸ் பண்றாரு

ப்ரீமியம் ஸ்மார்ட்போன்களை பயன்படுத்த விரும்பும் பெரும்பாலானோர் தேர்ந்தெடுப்பது சாம்சங் ஃபோல்டபிள் மற்றும் ஃப்ளிப் ஸ்மார்ட்போன் தான். இதற்கு உதாரணமும் இருக்கிறது. மைக்ரோசாஃப்ட் நிறுவனரும் உலகப் பணக்காரர்களில் ஒருவருமான பில்கேட்ஸ் மடிக்கக்கூடிய தொலைபேசியை பயன்படுத்துகிறார். Reddit Ask Me Anything என்ற அமர்வில், பில்கேட்ஸ் தான் சாம்சங் கேலக்ஸி இசட் ஃபோல்ட் 3 சாதனத்தை பயன்படுத்துவதாக குறிப்பிட்டார்.

ஃபோல்ட் 3, ஃபிளிப் 3 மாடலை இப்போதே சலுகையுடன் வாங்கலாம்

ஃபோல்ட் 3, ஃபிளிப் 3 மாடலை இப்போதே சலுகையுடன் வாங்கலாம்

சாம்சங் நிறுவனம் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள் பிரிவில் முதன்மை ரகமாக இருக்கிறது. சாம்சங் நிறுவனம் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மாடலை கேலக்ஸி இசட் தொடரில் அறிமுகம் செய்து வருகிறது. சாம்சங் ஸ்மார்ட்போன்களின் இந்த ஃபோல்ட் மற்றும் ஃபிளிப் மாடல்களான கேலக்ஸி இசட் ஃபோல்ட் 3 5ஜி மற்றும் கேலக்ஸி இசட் ஃபிளிப் 3 5ஜி ஸ்மார்ட்போன்கள் தற்போது வாங்குவதற்கு கிடைக்கிறது. இந்த மாடல்களுக்கு ரசிகர்கள் அதிகம் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.

சாம்சங் கேலக்ஸி இசட் பிளிப் 3 விலை என்ன

சாம்சங் கேலக்ஸி இசட் பிளிப் 3 விலை என்ன

சாம்சங் கேலக்ஸி இசட் பிளிப் 3 ஆனது இரண்டு வேரியண்ட்களில் விற்பனைக்கு கிடைக்கிறது. அது 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் வேரிண்ட், 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் வேரிண்ட் ஆகும். இதன் விலை விவரங்கள் குறித்து பார்க்கையில், 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை ரூ.84,999 ஆகவும் 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை ரூ.88,999 ஆகவும் இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன்களுக்கு வழங்கப்படும் சலுகையின் மூலம் இதன் விலை ஒவ்வொரு தளத்திலும் வேறுபட்டு இருக்கிறது.

சாம்சங் கேலக்ஸி இசட் போல்ட் 3 விலை என்ன

சாம்சங் கேலக்ஸி இசட் போல்ட் 3 விலை என்ன

சாம்சங் கேலக்ஸி இசட் போல்ட் 3 ஸ்மார்ட்போன்கள் இரண்டு வேரியண்ட்களில் வருகிறது. அது 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ், 12 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் ஆகும். அதேபோல் இதன் 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் விலை ரூ.1,49,999 ஆகவும் 12 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் விலை ரூ.1,57,999 ஆகவும் இருக்கிறது.

Best Mobiles in India

English summary
samsung Galaxy Z flip 4, samsung Galaxy z Fold 4 Set to Launch on August 10

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X