Home
News

Samsung-ன் உடையவே உடையாத Mobile.. மிலிட்டரி கிரேடு தரம்.. புது Rugged போன் ரெடி.. என்ன மாடல்? எப்போ ரிலீஸ்?

சாம்சங் (Samsung) நிறுவனம் அதன் ஸ்மார்ட்போன் மாடல் வரிசையில் புதிதாக சாம்சங் கேலக்ஸி எக்ஸ் கவர் 7 ப்ரோ (Samsung Galaxy XCover7 Pro) ரக்டு ஸ்மார்ட்போன் (rugged smartphone) சாதனத்தை அறிமுகம் செய்ய தயாராகிறது என்று தகவல் வெளியாகியுள்ளது. நம்பகமான ஆண்ட்ராய்டு அத்தாரிட்டி (Android Authority) தளம் வழியாக வெளியான தகவலில் இந்த விபரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளதால், இதன் வருகையை நாம் மிக விரைவில் எதிர்பார்க்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. இந்த புதிய சாம்சங் ரக்டு ஸ்மார்ட்போன் 2025 மாடல் (Samsung Rugged Smartphone 2025) பற்றிய கூடுதல் விபரங்களை இப்போது பார்க்கலாம்.

டெக் ஜெயிண்ட் நிறுவனமான சாம்சங் (Samsung) கடந்த வருடம் ஜனவரி மாதத்தில் அதன் சாம்சங் கேலக்ஸி XCover7 (Samsung Galaxy XCover7) என்ற ரக்டு ஸ்மார்ட்போன் சாதனத்தை அறிமுகம் செய்தது. இப்போது, சரியாக 1 வருட இடைவெளிக்கு பிறகு, சாம்சங் நிறுவனம் Samsung Galaxy XCover7 ஸ்மார்ட்போனின் மேம்படுத்தப்பட்ட ப்ரோ வேரியண்ட் மாடலை உருவாக்கி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

Samsung-ன் உடையவே உடையாத Mobile.. மிலிட்டரி கிரேடு தரம்.. Rugged போன்

Samsung-ன் உடையவே உடையாத Mobile.. மிலிட்டரி கிரேடு தரம்.. புது Rugged போன் ரெடி:

இதற்கு முன்பு வெளியான சமுபத்திய தகவலில் சாம்சங் நிறுவனம் அதன் புதிய ரக்டு ஸ்மார்ட்போன் சாதனத்தில் மிகவும் தீவிரமாக வேலை செய்து வருவதாக தகவல்கள் வெளியானது. ஆனால், வெளியான தகவலில் Samsung Galaxy XCover7 Pro மாடலுக்கு பதிலாக Samsung Galaxy XCover8 Pro என்ற மாடல் குறிப்பிடப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஆகையால், அனைவரும் Samsung Galaxy XCover8 Pro சாதனத்தை எதிர்பார்த்து காத்திருந்தனர்.

தற்போது வெளியான லேட்டஸ்ட் லீக்ஸ் தகவலின் படி, சாம்சங் நிறுவனம் Samsung Galaxy XCover8 Pro சாதனத்தை உருவாக்குவதற்கு முன்பாக, கடந்த வருடம் அறிமுகம் செய்து வெளியிட்ட Samsung Galaxy XCover7 மாடலின் மேம்மபடுத்தப்பட்ட வெர்ஷனை உருவாக்க திட்டமிட்டுள்ளது என்பது தெளிவாகியுள்ளது. இந்த புதிய ரக்டு ஸ்மார்ட்போன் சாதனத்தை சாம்சங் நிறுவனம் லேட்டஸ்ட் சிப்செட் உடன் வெளியிடும் என்று லீக் தகவல்கள் குறிப்பிட்டுள்ளது.

மிலிட்டரி கிரேடு தரத்துடன் புதிய Samsung Galaxy XCover7 Pro:

குறிப்பிட்டு கூற வேண்டுமென்றால், சமீபத்தில் காணப்பட்ட Samsung Galaxy XCover7 Pro தொடர்பான கோடிங்கில் SM7635 என்ற எண்கள் காணப்பட்டுள்ளது. இது ஆகஸ்ட் 2024 இல் அறிமுகம் செய்யப்பட்ட புதிய ஸ்னாப்டிராகன் 7s ஜென் 3 சிப்செட்டை (Snapdragon 7s Gen 3 Chipset) குறிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முந்தைய Samsung Galaxy XCover7 மாடல் மீடியாடெக் டைமென்சிட்டி 6100+ சிப்செட்டை (Dimensity 6100+ SoC) பெற்றது என்பது கவனிக்கத்தக்கது.

இந்த வரவிருக்கும் புதிய சாம்சங் கேலக்ஸி எக்ஸ் கவர் 7 ப்ரோ (Samsung Galaxy XCover7 Pro) ஸ்மார்ட்போன் சாதனம் MIL-STD-810H சான்றிதழ் பெற்றுள்ளது. இதுவொரு மிலிட்டரி கிரேடு தரசான்றிதழ் (military grade certifications) ஆகும்.அதேபோல், இந்த புதிய சாம்சங் ரக்டு மொபைல் (Samsung rugged mobile) சாதனம் IP68 ரேட்டிங் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ஸ் பாதுகாப்பை வழங்கும் சான்றிதழ் வடன் வரும் என்று கூறப்படுகிறது.

Samsung Galaxy XCover7 Pro டிஸ்பிளேவுக்கு கூட வலுவான பாதுகாப்பு:

இந்த புதிய Samsung Galaxy XCover7 Pro சாதனம் கார்னிங் கொரில்லா விக்டஸ்+ (Corning Gorilla Victus+) மேம்படுத்தப்பட்ட டிஸ்பிளே பாதுகாப்புடன் வரும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த டிஸ்பிளே டச் சென்சிட்டிவிட்டி அம்சத்தை அட்ஜெஸ்ட்மென்ட் செய்ய அனுமதிக்கும். இதன் மூலம் உங்கள் கையில் க்ளோவ்ஸ் அணிந்திருந்தால் கூட இந்த போனின் டிஸ்பிளேவை இயக்க முடியும். அதேபோல், இந்த டிவைஸ் POGO பின் சார்ஜிங் ஆதரவுடன் வெளிவரும் என்று கூறப்பட்டுள்ளது. இன்னும் சில மாதங்களில் இது ரிலீஸ் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Samsung Galaxy XCover7 Pro Rugged Smartphone Spotted With Snapdragon 7s Gen 3 Chipset Coming Soon
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X