வைட்., சாம்சங் கேலக்ஸி வைட் 5 அறிமுகம்: ப்ரீமியம் ரகத்தோடு குறைந்த விலையில்!

|

சாம்சங் கேலக்ஸி வைட் 5 சாதனம் தென் கொரியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சாதனத்தின் பின்புறத்தில் மூன்று பின்புற கேமரா அமைப்பு மற்றும் டைமன்சிட்டி 700 மூலம் இயக்கப்படுகிறது.

புதிய சாம்சங் கேலக்ஸி வைட் 5

புதிய சாம்சங் கேலக்ஸி வைட் 5

சாம்சங் தென்கொரியாவில் புதிய சாம்சங் கேலக்ஸி வைட் 5 ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்மார்ட்போனானது மீடியாடெக் டைமன்சிட்டி 700 எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது. இதில் பாதுகாப்பு அம்சத்துக்கு பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனர் வசதி இருக்கிறது.புதிய சாம்சங் கேலக்ஸி வைட் 5 சாதனமானது ஒற்றை 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி வேரியண்டில் வருகிறது. இதன் இந்திய மதிப்பு ரூ.28,200 ஆக இருக்கிறது. இந்த சாதனம் பிளாக், வைட் மற்றும் ப்ளூ வண்ண விருப்பங்களில் வருகிறது.

சாம்சங் கேலக்ஸி வைட் 5 சிறப்பம்சங்கள்

சாம்சங் கேலக்ஸி வைட் 5 சிறப்பம்சங்கள்

சாம்சங் கேலக்ஸி வைட் 5 ஸ்மார்ட்போனானது 6.6 இன்ச் எச்டி ப்ளஸ் இன்ஃபினிட்டி வி டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. இந்த சாதனம் மீடியாடெக் டைமன்சிட்டி 700 எஸ்ஓசி மற்றும் 6ஜிபி ரேம் 128 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது. கூடுதல் மெமரி வேண்டும்பட்சத்தில் இதில் 1 டிபி வரை மெமரி விரிவாக்கக்கூடிய மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் வசதி இருக்கிறது.

மூன்று பின்புற கேமரா அமைப்பு

மூன்று பின்புற கேமரா அமைப்பு

கேலக்ஸி வைட் 5 ஸ்மார்ட்போனில் மூன்று பின்புற கேமரா அமைப்பு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் 64 மெகாபிக்சல் பிரதான கேமரா, 5 மெகாபிக்சல் இரண்டாம் நிலை கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் மூன்றாம் நிலை கேமரா என மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.

5000 எம்ஏஎச் பேட்டரி வசதி

5000 எம்ஏஎச் பேட்டரி வசதி

அதேபோல் ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் செல்பி வசதிக்கென 8 மெகாபிக்சல் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இதில் 5000 எம்ஏஎச் பேட்டரி வசதி இருக்கிறது. பாதுகாப்பு அம்சத்துக்கு இந்த சாதனத்தில் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனர் இருக்கிறது. இணைப்பு விருப்பங்களுக்கு என இதில் 5ஜி, வைஃபை, ஆண்ட்ராய்டு 11 அடிப்படையிலான ஒன் யூஐ கோர் வசதியோடு இருக்கிறது.

கேலக்ஸி எஃப் 42 5ஜி

கேலக்ஸி எஃப் 42 5ஜி

கேலக்ஸி எஃப் 42 5ஜி சாதனம் கேலக்ஸி வைட் 5-ன் மறுபெயராக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சாம்சங் கேலக்ஸி இந்தியாவின் ஆதரவு பக்கத்தின் படி மாடல் SM-E426B/DS உடன் பட்டியலிடப்பட்டுள்ளது. இருப்பினும் இது ஸ்னாப்டிராகன் மூலம் இயங்கும் என குறிப்பிடப்பட்டுள்ளதால் இந்த சாதனம் சாம்சங் எஸ் 22 ஆக இருக்கலாம் என கூறப்படுகிறது. நிறுவனம் இந்தியாவில் சாம்சங் எஸ் 22 சாதனத்தை கொண்டுவர திட்டமிடலாம் என கூறப்படுகிறது.

சாம்சங் கேலக்ஸி எஸ் 22 தொடர்

சாம்சங் கேலக்ஸி எஸ் 22 தொடர்

சாம்சங் கேலக்ஸி எஸ் 22 தொடர் ஜனவரி மற்றும பிப்ரவரி 2022-ல் எப்போதாவது தொடங்கப்படலாம் என கூறப்படுகிறது. இந்தியா மற்றும் இன்னும் சில நாடுகளில் சாம்சங் ஃபிளாக்ஷிப் சாதனங்களாக அறிமுகமாகும் என கூறப்படுகிறது. சாம்சங் நிறுவனம் தனது புதிய கேலக்ஸி எஸ்22 ஸ்மார்ட்போனை விரைவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்த சாதனம் தனித்துவமான அம்சங்களுடன் சற்று உயர்வான விலையில் விலையில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு

உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு

சாம்சங் ஸமார்ட்போன்களுக்கு உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு உள்ளது என்றுதான் கூறவேண்டும். குறிப்பாக இந்நிறுவனத்தின் சாதனங்கள் தனித்துமான சிப்செட் வசதியுடன் வெளிவருவதால் அதிக வரவேற்பை பெறுகிறது. அதேபோல் விரைவில் வெளிவரும் கேலக்ஸி எஸ்22 ஸ்மார்ட்போன் ஆனது குவால்காம் ஸ்னாப்டிராகன் 898 சிப்செட் வசதியுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்இந்த சிப்செட் வசதி இருப்பதால் விலையும் சற்று உயர்வாக இருக்கும்.

ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம்

ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம்

அதேபோல் இந்த சாதனத்தின் வடிவமைப்பும் மிக அருமையாக இருக்கும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக இந்த சாதனம் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவரும் என்று கூறப்படுகிறது. அதன்பின்பு ஆண்ட்ராய்டு 12 அப்டேட் கிடைக்கும் என அந்நிறுவனம் கூறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்22 ஸ்மார்ட்போனின் பின்புறம் 50எம்பி பிரைமரி கேமரா சென்சார் + 12எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 12எம்பி டெலிபோட்டோ லென்ஸ் என மொத்தம் மூன்று கேமராக்கள் இடம்பெறும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு செல்பீகளுக்கும்,
வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி செல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். அதேபோல் 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 65 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் இந்த புதிய கேலக்ஸி எஸ்22 ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. சமீபத்தில் இந்நிறுவனம் அறிமுகம் செய்த சாம்சங் கேலக்ஸி ஏ52எஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்களைப் பார்ப்போம்.

File Images

Most Read Articles
Best Mobiles in India

English summary
Samsung Galaxy Wide 5 Launched with triple camera, 5000 mAh Battery and More

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X