Home
News

ஒரே நாளில் 4 புது போன்கள்.. அதில் ஒரு Tri-Fold மாடல்.. Samsung Galaxy Unpacked July 2025 தேதி அறிவிப்பு!

எதிர்பார்த்தபடியே, சாம்சங் (Samsung) நிறுவனம் அதன் அடுத்த கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வு (Next Galaxy Unpacked Event 2025) ஆனது வருகிற 2025 ஜூலை 9 ஆம் தேதி நடைபெறும் என்பதை உறுதிப்படுத்தி உள்ளது. இதுகுறித்த டீசர் ஆனது புதிய ஸ்லிம் ஃபோல்டபிள் ஸ்மார்ட்போன்களின் (Slim Foldable Smartphones) அறிமுகத்தை குறிக்கிறது.

அவைகள் கேலக்ஸி இஸட் ஃபோல்ட் 7 மற்றும் கேலக்ஸி இஸட் ஃபிளிப் 7 சீரீஸ் ஆக இருக்கலாம். லீக்ஸ்கள் மற்றும் வதந்திகள் அடிப்படையில் கேலக்ஸி இஸட் ஃபிளிப் 7 எப்இ, சாம்சங் நிறுவனத்தின் முதல் கேலக்ஸி ட்ரைஃபோல்ட் போன், புதிய சாம்சங் ஸ்மார்ட்வாட்ச்கள் மற்றும் ஒரு இயர்பட்ஸ் ஆகியவைகளும் அறிமுகம் செய்யப்படலாம்.

Samsung Galaxy Unpacked July 2025 தேதி அறிவிப்பு!

சாம்சங் கேலக்ஸி அன்பேக்டு ஜூலை 2025 நிகழ்வு சரியாக எத்தனை மணிக்கு தொடங்கும்? லைவ் ஸ்ட்ரீமிங் செய்வது எப்படி (Samsung Galaxy Unpacked 2025 Event Timings, Live Streaming Details)? இந்த நிகழ்வு ஜூலை 9 ஆம் தேதி அன்று இந்திய நேரப்படி இரவு 7:30 மணிக்கு தொடங்கும். இது சாம்சங்கின் யூட்யூப் சேனல், சாம்சங்.காம் (Samsung.com) மற்றும் சாம்சங் நியூஸ்ரூம் வழியாக நேரடியாக ஒளிபரப்பப்படும்.

சாம்சங் வெளியிட்டுள்ள டீசர் ஆனது "அல்ட்ரா" அனுபவத்திற்கும் "போல்டபிள் ஸ்மார்ட்போன்களின் எதிர்காலத்திற்கும்" என்று குறிப்பிடுகிறது. 15 வினாடிகள் நீளும் வீடியோ கிளிப்பில் ஒரு ஸ்லிம் ஆன போல்டபிள் ஸ்மார்ட்போனை பார்க்க முடிகிறது. சாம்சங் கேலக்ஸி அன்பேக்டு ஜூலை 2025 நிகழ்வில் எதிர்பார்க்கப்படும் அறிமுகங்கள் மற்றும் அறிவிப்புகள் குறித்த விவரங்கள் இதோ:

Samsung Galaxy Unpacked July 2025 தேதி அறிவிப்பு!

1. கேலக்ஸி இசட் ஃபோல்ட் 7 (Samsung Galaxy Z Fold 7): "மிகவும் ஸ்லிம் ஆன, லைட் ஆன மற்றும் மிகவும் மேம்பட்ட போல்டபிள்" ஆக இது அறிமுகப்படுத்தப்படலாம். இது ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட், 200MP ப்ரைமரி கேமரா, ஆண்ட்ராய்டு 16-அடிப்படையிலான ஒன் யுஐ 8 மற்றும் 25W வேகமான சார்ஜிங் கொண்ட 4,272mAh பேட்டரி ஆகியவற்றுடன் வரலாம்.

2. கேலக்ஸி இசட் ஃபிளிப் 7 (Samsung Galaxy Z Flip 7): இது சாம்சங்கின் சொந்த எக்ஸினோஸ் 2500 சிப் உடன் வரும் முதல் கேலக்ஸி இசட் ஃபிளிப்பாக அறிமுகப்படுத்தப்படலாம். இது அவுட் ஆப் பாக்ஸ் சமீபத்திய ஒன் யுஐ 8 உடன் அனுப்பப்படலாம். இது 4,174mAh பேட்டரி உடன் அறிமுகம் செய்யப்படலாம். சார்ஜிங் வேகம் 25W ஆகவும் மற்றும் இது Qi 2.1 வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவுடனும் வரலாம்

3. கேலக்ஸி ஜி ஃபோல்ட் (Samsung Galaxy G Fold): முன்னரே குறிப்பிட்டபடி இது சாம்சங் நிறுவனத்தின் முதல் ட்ரைஃபோல்ட் ஸ்மார்ட்போன் ஆக இருக்கலாம். இது மேலே 2 ஸ்மார்ட்போன்களை விடவும் நிச்சயம் அதிக விலைக்கு வரும். மேலும் உள்நோக்கி மடிக்கும் மெக்கானிசம் உடன் 9.96 இன்ச் டிஸ்ப்ளேவுடன் வரலாம். இது 6.54 இன்ச் உயரமும், 298 கிராம் எடையும் கொண்டதாக இருக்கலாம்.

4. கேலக்ஸி இசட் ஃபிளிப் 7 (Samsung Galaxy Z Flip FE): இது ஸ்டாண்டர்ட் கேலக்ஸி இசட் ஃபிளிப் 7 ஸ்மார்ட்போனின் மலிவு விலை விருப்பமாக இருக்கலாம். இது Exynos 2400e சிப்செட், 8ஜிபி ரேம், பேக் பேனலில் 12எம்பி +12எம்பி கேமரா செட்டப், முன்பக்கத்தில் 10எம்பி கேமரா மற்றும் 25W வேகமான சார்ஜிங் ஆதரவுடன் 3,700mAh பேட்டரி ஆகியவற்றை கொண்டிருக்கலாம்.

5. கேலக்ஸி வாட்ச் 8 சீரீஸ் (Samsung Galaxy 8 Watch Series): இதில் ஸ்டாண்டர்ட் வாட்ச் 8, வாட்ச் 8 கிளாசிக் (சுழலும் பெசல் உடன்) மற்றும் வாட்ச் அல்ட்ரா ஆகிய மாடல்கள் அறிமுகம் செய்யப்படலாம். மூன்று மாடல்களும் Squircle வடிவிலான முன்பக்கத்தை கொண்டிருக்கலாம். வாட்ச் 8 ஆனது சுமார் 425mAh பேட்டரியைக் கொண்டிருக்கலாம். அதே நேரத்தில் கிளாசிக் மற்றும் அல்ட்ரா ஆகிய மாடல்கள் பழைய மாடல்களை விட மிதமான பேட்டரி அதிகரிப்பை காணலாம். அனைத்துமே ஒன் யுஐ 8 வாட்ச் அம்சங்களைக் கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Samsung Galaxy Unpacked July 2025 Event Date Announced Timing Live Stream What to Expect
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X