Home
News

கலக்குற சந்துரு.. புது FE போன், புது Lite டேப்லெட்.. Samsung Galaxy Unpacked நிகழ்வில் என்னென்ன அறிமுகம்?

2025 ஆம் ஆண்டுக்கான சாம்சங்கின் அடுத்த கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வு இன்று (செப்.4) நடைபெற உள்ளது. இன்னும் சில மணிநேரங்களில் தொடங்க உள்ள இந்த நிகழ்வில் "பிரீமியம் ஏஐ டேப்லெட்டுகள்" மற்றும் "கேலக்ஸி எஸ்25 சீரிஸின் புதிய மாடல்" ஆகியவற்றை நாம் எதிர்பார்க்கலாம் என்னென்ன அறிமுகமாகும்? இந்நிகழ்வை லைவ் ஸ்ட்ரீமிங் செய்வது எப்படி? வாருங்கள் விரிவாக பார்க்கலாம்:

செப்.4 சாம்சங் கேலக்ஸி ஈவென்ட் லைவ் ஸ்ட்ரீம் விவரங்கள்: சாம்சங் கேலக்ஸி ஈவென்ட் ஆனது செப்டம்பர் 4 ஆம் தேதி மதியம் 3 மணிக்கு (இந்திய நேரடி) தொடங்கும். இது ஒரு நேரடி நிகழ்வு அல்ல, முற்றிலும் மெய்நிகர் முறையில் நடத்தப்படுகிறது; அதாவது இதுவொரு விர்ச்சுவல் ஈவென்ட் ஆகும்.

Samsung Galaxy Unpacked நிகழ்வில் என்னென்ன அறிமுகம்?

இந்நிகழ்வை பார்க்க நீங்கள் ஆர்வமாக இருந்தால், நீங்கள் சாம்சங்கின் வலைத்தளத்தை அணுகலாம் அல்லது சாம்சங் நிறுவனத்தின் யூட்யூப் சேனல் வழியாகவும் இந்நிகழ்வை பார்க்கலாம். தென் கொரிய தொழில்நுட்பக் குழுமமான சாம்சங் இந்நிகழ்வை "சமீபத்திய கேலக்ஸி ஏஐ அனுபவத்திற்கான புதிய நுழைவாயில்" என்று சந்தைப்படுத்துகிறது; ஆக இந்த வெளியீட்டு நிகழ்வில் பல புதிய ஏஐ அம்சங்கள் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சாம்சங் கேலக்ஸி நிகழ்வில் என்ன எதிர்பார்க்கலாம்? இந்நிகழ்வின் போது சாம்சங் கேலக்ஸி எஸ்25 எப்இ ஸ்மார்ட்போனும், கேலக்ஸி டேப் எஸ்11 மற்றும் கேலக்ஸி டேப் எஸ்11 அல்ட்ரா ஆகிய டேப்லெட்களும் அறிமுகம் செய்யப்படலாம். கேலக்ஸி எஸ்25 எப்இ மாடல் ஆனது "பெரும்பாலும்" கேலக்ஸி எஸ்25 மற்றும் கேலக்ஸி எஸ்25 பிளஸ் மாடல்களை போலவே இருக்கும் கூறப்படுகிறது.

முக்கிய வேறுபாடுகள் - சாம்சங் கேலக்ஸி எஸ்25 எப்இ ஸ்மார்ட்போனின் பேக் பேனல் மற்றும் கலர் ஆப்ஷன்களில் சில இருக்கும். இந்த ஸ்மார்ட்போன் ஐசி ப்ளூ (Icyblue), ஜெட் பிளாக் (Jetblack), நேவி (Navy) மற்றும் ஒயிட் (White) ஆகிய கலர்களில் வரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சாம்சங் கேலக்ஸி எஸ்25 எப்இ ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? டிஸ்பிளேவை பொறுத்தவரை சாம்சங் கேலக்ஸி எஸ்25 எப்இ ஸ்மார்ட்போனானது 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.7-இன்ச் டைனமிக் அமோஎல்இடி 2எக்ஸ் டிஸ்பிளேவை கொண்டிருக்கலாம்

இது 8ஜிபி ரேம் உடன் இணைக்கப்பட்ட எக்ஸினோஸ் 2400 சிப்செட்டுடன் அறிமுகம் செய்யப்படலாம். கேமராக்களை பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் 50-மெகாபிக்சல் பிரைமரி ஷூட்டர், 12-மெகாபிக்சல் அல்ட்ராவைடு லென்ஸ் மற்றும் 8-மெகாபிக்சல் 3எக்ஸ் டெலிஃபோட்டோ சென்சார் ஆகியவற்றை கொண்ட டிரிபிள் ரியர் கேமரா செட்டப்பை கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. முன்பக்கத்தில் 12-மெகாபிக்சல் கேமராவுடன் வரலாம்.

பேட்டரியை பொறுத்தவரை சாம்சங் கேலக்ஸி எஸ்25 எப்இ ஸ்மார்ட்போனானது 4,900mAh பேட்டரியை பேக் செய்யலாம். இதுதவிர்த்து அல்ட்ராசோனிக் இன்-டிஸ்ப்ளேபிங்கர் பிரிண்ட் சென்சார் மற்றும் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் அடிப்படையிலான சாம்சங் நிறுவனத்தின் சொந்த ஒன் யுஐ 7 (One UI 7) ஓஎஸ் ஆகியவைகளையும் கொண்டிருக்கலாம். விலை ரூ.60,000 க்குள் இருக்கும்.

சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்11 மற்றும் கேலக்ஸி டேப் எஸ்11 அல்ட்ரா டேப்லெட்களில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம் கேலக்ஸி டேப் எஸ்11 மற்றும் கேலக்ஸி டேப் எஸ்11 அல்ட்ரா ஆகிய இரண்டும் மாலி-ஜி925 ஜிபியு உடனான ஒரே எக்சினோஸ் 9400 சிப்செட்டுடன் வரும் என்று கூறப்படுகிறது.

பேஸிக் மாடலைப் பற்றி அதிகம் தெரியவில்லை என்றாலும், அல்ட்ரா மாடலை பற்றி நிறைய விவரங்கள் லீக் ஆகியுள்ளன. அதன்படி அல்ட்ரா மட ஆனது 14.6-இன்ச் டைனமிக் அமோஎல்இடி 2எக்ஸ் டிஸ்பிளேவை கொண்டிருக்கும். மேலும் இந்த டேப்லெட் 12ஜிபி வரை ரேம் மற்றும் 256ஜிபி வரை பில்ட்இன் ஸ்டோரேஜை கொண்டிருக்கும்.

கேமராக்களை பொறுத்தவரை கேலக்ஸி டேப் எஸ்11 அல்ட்ரா டேப்லெட் ஆனது 13-மெகாபிக்சல் பிரைமரி சென்சார் மற்றும் 8-மெகாபிக்சல் அல்ட்ராவைடு ஷூட்டருடன் டூயல் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுருக்கலாம். முன்பக்கத்தில் டூயல் 12 மெகாபிக்சல் கேமராக்களை கொண்டிருக்கலாம்.

பேட்டரியை பொறுத்தவரை இந்த டேப்லெட் 45W சார்ஜிங் ஆதரவுடன் 11,600mAh பேட்டரியை பேக் செய்யலாம். மேலும் கேலக்ஸி டேப் எஸ்11 அல்ட்ரா டேப்லெட் ஆனது அதன் முன்னோடியை போலவே எஸ் பென் ஸ்டைலஸ் ஆதரவு (S Pen Stylus Support) உடன் வரலாம். இதோடு சேர்த்து சாம்சங் நிறுவனம் கேலக்ஸி டேப் எஸ்10 லைட் (Galaxy Tab S10 Lite) மாடலை அறிமுகப்படுத்தலாம் என்றும் சில வதந்திகள் கூறுகின்றன; இருப்பினும், இந்த டேப்லெட் பற்றி தற்போது வரை எந்த தகவலும் இல்லை.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy Unpacked Event Today How to Watch Live What To Expect Galaxy S25 FE Tab S11 More
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X