Home
News

Apple iPhone 17-ஐ செஞ்சிட்டா போச்சு.. செப்.4-ல் Samsung அறிமுகம் செய்யப்போகும் 3 தயாரிப்புகள்!

ஆப்பிள் (Apple) நிறுவனம் அதன் ஐபோன் 17 சீரீஸ் (iPhone 17 Series) அறிமுகத்திற்கான தேதியை 2025 செப்டம்பர் 9 என்று அறிவித்த வேகத்தில், இந்தாண்டிற்கான சாம்சங்கின் இரண்டாவது கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வு ஆனது வருகிற செப்டம்பர் 4 ஆம் தேதி நடக்கும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்நிகழ்வு செப்டம்பர் 4 ஆம் தேதி இந்திய நேரப்படி பிற்பகல் 3:00 மணிக்கு, விர்ச்சுவல் முறையில் நடைபெறும் என்பதை சாம்சங் உறுதிப்படுத்தி உள்ளது. இந்நிகழ்வில் சாம்சங் நிறுவனம் 2 முக்கிய தயாரிப்புகளை வெளிப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதென்ன தயாரிப்புகள்? என்னென்ன அம்சங்களை பேக் செய்யும்? என்ன விலைக்கு வரும்? வாருங்கள் விரிவாக பார்க்கலாம்:

செப்.4-ல் Samsung அறிமுகம் செய்யப்போகும் 3 தயாரிப்புகள்!

1. சாம்சங் கேலக்ஸி எஸ்25 எப்இ (Samsung Galaxy S25 FE): டிஸ்பிளேவை பொறுத்தவரை இது 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், கார்னிங்கின் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பிளஸ் ப்ரொடெக்ஷன் உடனான 6.7-இன்ச் எப் எச்டி பிளஸ் அமோஎல்இடி டிஸ்பிளேவை கொண்டிருக்கலாம். சிப்செட்டை பொறுத்தவரை எக்ஸினோஸ் 2400 சிப்செட் மூலம் இயக்கப்படலாம்.

ஓஎஸ்-ஐ பொறுத்தவரை சாம்சங் கேலக்ஸி எஸ்25 எப்இ ஆனது ஆண்ட்ராய்டு 16 அவுட் ஆப் பாக்ஸ் உடன் அனுப்பப்படும், இது சாம்சங்கின் ஒன் யுஐ 8 ஓஎஸ் கொண்டு இயங்கலாம். கேமராக்களை பொறுத்தவரை பின்புறத்தில், 50எம்பி ப்ரைமரி கேமரா, 12எம்பி அல்ட்ராவைடு லென்ஸ் மற்றும் 3எக்ஸ் ஆப்டிகல் ஜூம் கொண்ட 8எம்பி டெலிஃபோட்டோ இடம்பெறலாம். முன்பக்கத்தில் 12எம்பி செல்பீ கேமரா இடம்பெறலாம்

பேட்டரியை பொறுத்தவரை சாம்சங் கேலக்ஸி எஸ்25 எப்இ ஸ்மார்ட்போன் ஆனது 4900எம்ஏஎச் பேட்டரியை பேக் செய்யலாம். இது 45W வயர்டு சார்ஜிங் மற்றும் 15W வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவுடன் இணைக்கப்படலாம். விலையை பொறுத்தவரை மெரிக்காவில் சாம்சங் கேலக்ஸி எஸ்25 எப்இ ஸ்மார்ட்போனின் 128ஜிபி ஆப்ஷன் $649.99 க்கு, அதாவது இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.56,960 க்கும். ஆக இந்தியாவில் ரூ.60,000 - ரூ.70,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் வரலாம்

2. சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்11 சீரீஸ் (Samsung Galaxy Tab S11 Series): புதிய ஸ்மார்ட்போனுடன் சேர்த்து, சாம்சங் நிறுவனம் அதன் அடுத்த தலைமுறை டேப்லெட்டுகளான - கேலக்ஸி டேப் எஸ்11 (Galaxy Tab S11) மற்றும் கேலக்ஸி டேப் எஸ்11 அல்ட்ரா (Galaxy Tab S11 Ultra) ஆகியவற்றை வெளியிடலாம்.

ஸ்டாண்டர்ட் வேரியண்ட் ஆனது 11-இன்ச் அமோஎல்இடிபேனலை கொண்டிருக்கும், அதே நேரத்தில் அல்ட்ரா வேரியண்ட் அணை 1600 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் உடனான 14.6-இன்ச் 120ஹெர்ட்ஸ் டிஸ்பிளேவை கொண்டிருக்கும். மேலும் எஸ் பென் (S Pen) ஆதரவுடன் வரும்

சிப்செட்டை பொறுத்தவரை இரண்டு டேப்லெட்டுகளும் மீடியாடெக் 9400 பிளஸ் (MediaTek 9400 Plus) சிப்செட்டில் இயங்கலாம். 1டிபி வரை ஸ்டோரேஜ் ஆப்ஷன்கள் மற்றும் மைக்ரோஎஸ்டி கார்டு வழியாக மேலும் விரிவாக்கக்கூடிய ஸ்டோரேஜை பெறலாம். பேட்டரியை பொறுத்தவரை எஸ்11 அல்ட்ரா மாடலில் 11,600mAh பேட்டரி இடம்பெறலாம்; மறுகையில் உள்ள எஸ்11 மாடலில் 8,400mAh [பேட்டரி இடம்பெறலாம். இரண்டுமே 45W சார்ஜிங் ஆதரவுடன் வரும்

செல்பீ கேமராக்களை பொறுத்தவரை எஸ்11 அல்ட்ரா மாடலில் 8 மெகாபிக்சல் அல்ட்ராவைடுடன் இணைக்கப்பட்ட 13 மெகாபிக்சல் ப்ரைமரி லென்ஸ் இருக்கும் என்று கூறப்படுகிறது, அதே நேரத்தில் டேப் எஸ்11 மாடலில் சிங்கிள் 13 மெகாபிக்சல் சென்சார் இடம்பெறலாம். எதிர்பார்க்கப்படும் விலைகளை பொறுத்தவரை டேப் எஸ்11 அல்ட்ரா சுமார் $1,200 (ரூ.1,05,000) இல் தொடங்கும் என்றும், ஸ்டாண்டர்ட் மாடல் $860 (ரூ. 75,400) க்கு அருகில் வரக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy Unpacked Event on September 4 Galaxy S25 FE Galaxy Tab S11 Ultra Price Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X