Home
News

ரூ.1999 க்கு முன்பதிவை ஆரம்பித்த Samsung.. ஜூலை 9-ல் Galaxy Unpacked Event 2025.. என்னென்ன அறிமுகமாகும்?

சாம்சங் (Samsung) தனது அடுத்த பெரிய வெளியீட்டு நிகழ்விற்கு தயாராகி வருகிறது. அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, சாம்சங் நிறுவனம் வருகிற ஜூலை 9, 2025 அன்று அதன் கேலக்ஸி அன்பேக்டு 2025 நிகழ்வை நடத்தும். இந்த நிகழ்வில் சாம்சங்கின் புதிய போல்டபிள் ஸ்மார்ட்போன்கள், TWS இயர்பட்ஸ், ஸ்மார்ட்வாட்ச்கள் மற்றும் சாஃப்ட்வேர் மேம்படுத்தல்கள் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சாம்சங் நிறுவனத்தின் இந்த உலகளாவிய வெளியீட்டு நிகழ்விற்கு முன்னதாக, சாம்சங் இந்தியா அதன் வரவிருக்கும் கேலக்ஸி சீரிஸ்-க்கான முன்பதிவுகளை திறந்துள்ளது. இதன் கீழ் எர்லி பையர்களுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நன்மைகள் கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது நேற்று முதல் (அதாவது ஜூன் 24 ஆம் தேதி முதல்) அமலில் உள்ளது.

Galaxy Unpacked Event 2025: ரூ.1999 க்கு முன்பதிவை ஆரம்பித்த Samsung!

இதன்கீழ் இந்தியாவில் உள்ள வாடிக்கையாளர்கள் திரும்பப்பெறக்கூடிய ரூ.1,999 செலுத்துவதன் மூலம் வரவிருக்கும் கேலக்ஸி தயாரிப்புகளை முன்பதிவு செய்யலாம். இந்த முன்கூட்டிய அணுகல் பாஸ் (Early access pass) வழியாக வாடிக்கையாளர்களுக்கு ரூ.5,999 வரை மதிப்புள்ள நன்மைகள் கிடைக்கும்.

இதில் முன்கூட்டிய டெலிவரி, பிரத்தியேக வண்ணங்களுக்கான அணுகல் மற்றும் சிறந்த மாற்று விகிதங்கள் ஆகியவைகளும் அடங்கும். ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள் சாம்சங்கின் அதிகாரப்பூர்வ வலைத்தளம், அமேசான் இந்தியா, பிளிப்கார்ட் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்டரீடெயில் ஸ்டோர்கள் வழியாக முன்பதிவுகளை செய்யலாம்

சாம்சங் கேலக்ஸி அன்பேக்டு ஜூலை 2025 நிகழ்வின் நேரம் மற்றும் நேரலை விவரங்கள்: இந்த நிகழ்வு ஜூலை 9 ஆம் தேதி அன்று இந்திய நேரப்படி இரவு 7:30 மணிக்கு தொடங்கும். இது சாம்சங்கின் யூட்யூப் சேனல், சாம்சங்.காம் (Samsung.com) மற்றும் சாம்சங் நியூஸ்ரூம் வழியாக நேரடியாக ஒளிபரப்பப்படும்.

சாம்சங் கேலக்ஸி அன்பேக்டு ஜூலை 2025 நிகழ்வில் என்னென்ன அறிமுகங்கள், அறிவிப்புகளை எதிர்பார்க்கலாம்? 1. கேலக்ஸி இசட் ஃபோல்ட் 7 (Samsung Galaxy Z Fold 7): "மிகவும் ஸ்லிம் ஆன, லைட் ஆன மற்றும் மிகவும் மேம்பட்ட போல்டபிள்" ஆக இது அறிமுகப்படுத்தப்படலாம். இது ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட், 200MP ப்ரைமரி கேமரா, ஆண்ட்ராய்டு 16-அடிப்படையிலான ஒன் யுஐ 8 மற்றும் 25W வேகமான சார்ஜிங் கொண்ட 4,272mAh பேட்டரி ஆகியவற்றுடன் வரலாம்.

2. கேலக்ஸி இசட் ஃபிளிப் 7 (Samsung Galaxy Z Flip 7): இது சாம்சங்கின் சொந்த எக்ஸினோஸ் 2500 சிப் உடன் வரும் முதல் கேலக்ஸி இசட் ஃபிளிப்பாக அறிமுகப்படுத்தப்படலாம். இது அவுட் ஆப் பாக்ஸ் சமீபத்திய ஒன் யுஐ 8 உடன் அனுப்பப்படலாம். இது 4,174mAh பேட்டரி உடன் அறிமுகம் செய்யப்படலாம். சார்ஜிங் வேகம் 25W ஆகவும் மற்றும் இது Qi 2.1 வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவுடனும் வரலாம்

3. கேலக்ஸி ஜி ஃபோல்ட் (Samsung Galaxy G Fold): முன்னரே குறிப்பிட்டபடி இது சாம்சங் நிறுவனத்தின் முதல் ட்ரைஃபோல்ட் ஸ்மார்ட்போன் ஆக இருக்கலாம். இது மேலே 2 ஸ்மார்ட்போன்களை விடவும் நிச்சயம் அதிக விலைக்கு வரும். மேலும் உள்நோக்கி மடிக்கும் மெக்கானிசம் உடன் 9.96 இன்ச் டிஸ்ப்ளேவுடன் வரலாம். இது 6.54 இன்ச் உயரமும், 298 கிராம் எடையும் கொண்டதாக இருக்கலாம்.

4. கேலக்ஸி இசட் ஃபிளிப் 7 (Samsung Galaxy Z Flip FE): இது ஸ்டாண்டர்ட் கேலக்ஸி இசட் ஃபிளிப் 7 ஸ்மார்ட்போனின் மலிவு விலை விருப்பமாக இருக்கலாம். இது Exynos 2400e சிப்செட், 8ஜிபி ரேம், பேக் பேனலில் 12எம்பி +12எம்பி கேமரா செட்டப், முன்பக்கத்தில் 10எம்பி கேமரா மற்றும் 25W வேகமான சார்ஜிங் ஆதரவுடன் 3,700mAh பேட்டரி ஆகியவற்றை கொண்டிருக்கலாம்.

5. கேலக்ஸி வாட்ச் 8 சீரீஸ் (Samsung Galaxy 8 Watch Series): இதில் ஸ்டாண்டர்ட் வாட்ச் 8, வாட்ச் 8 கிளாசிக் (சுழலும் பெசல் உடன்) மற்றும் வாட்ச் அல்ட்ரா ஆகிய மாடல்கள் அறிமுகம் செய்யப்படலாம். மூன்று மாடல்களும் Squircle வடிவிலான முன்பக்கத்தை கொண்டிருக்கலாம். வாட்ச் 8 ஆனது சுமார் 425mAh பேட்டரியைக் கொண்டிருக்கலாம்.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy Unpacked event July 9 Pre Reservations Opened Early Access Pass Rs 1999
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X