ஜூலை 26 வந்துடுச்சு.. இப்போ வாங்கடா.. 2 புது Samsung போன் உட்பட பல புதிய தயாரிப்புகள் அறிமுகம்!
சாம்சங் (Samsung) நிறுவனமானது 2023 ஆம் ஆண்டிற்கான இரண்டாவது கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வை (Galaxy Unpacked Event) ஜூலை 26 அன்று நடத்துகிறது. இந்நிகழ்வில் 2 புதிய ஸ்மார்ட்போன்கள் உட்பட 6 க்கும் மேற்பட்ட புதிய சாம்சங் தயாரிப்புகள் அறிமுகம் செய்யப்பட உள்ளன.
கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வின் மிக முக்கிய அறிமுகமாக சாம்சங் நிறுவனத்தின் நெக்ஸ்ட் ஜெனரேஷன் ஃபோல்டபிள் ஸ்மார்ட்போன்கள் இருக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம். அவைகள் - சாம்சங் கேலக்ஸி இஸட் ஃபோல்ட் 5 (Samsung Galaxy Z Fold 5) மற்றும் சாம்சங் கேலக்ஸி இஸட் ஃபிளிப் 5 (Samsung Galaxy Z Flip 5) மாடல்கள் ஆகும்.

இவ்விரு புதிய ஸ்மார்ட்போன்களுடன் சேர்த்து கேலக்ஸி வாட்ச் 6 சீரிஸின் (Galaxy Watch 6 Series) கீழ் புதிய சாம்சங் ஸ்மார்ட் வாட்சுகள் மற்றும் கேலக்ஸி டேப் எஸ்9 சீரீஸின் (Galaxy Tab S9 Series) கீழ் புதிய சாம்சங் டேப்லெட்கள் உட்பட பல புதிய தயாரிப்புகள் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
"ஜாயின் தி ஃபிளிப் சைட்" (Join the Flip Side) என்கிற "வாசகத்தின்" கீழ் நடக்கவுள்ள சாம்சங் கேலக்ஸி அன்பேக்டு ஜூலை 2023 நிகழ்வானது சரியாக எப்போது தொடங்கும்? இதன் லைவ் ஸ்ட்ரீமிங்கை பார்ப்பது எப்படி? கேலக்ஸி இஸட் ஃபோல்ட் 5 மற்றும் இஸட் ஃபிளிப் 5 போன்களின் இந்திய விலை நிர்ணயம் எப்படி இருக்கும்? இதோ விவரங்கள்:
சாம்சங் கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வின் லைவ் ஸ்ட்ரீமிங்கை பார்ப்பது எப்படி? இந்நிகழ்வு சாம்சங்.காம் (Samsung.com), சாம்சங் நியூஸ்ரூம் இந்தியா (Samsung Newsroom India) மற்றும் சாம்சங்கின் யூட்யூப் சேனல் (Samsung YouTube Channel) வழியாக ஜூலை 26 ஆம் தேதி மாலை 4:30 மணி முதல் லைவ் ஸ்ட்ரீமிங் செய்யப்படும்.
சாம்சங் கேலக்ஸி அன்பேக்டு ஜூலை 2023 நிகழ்வில் என்னென்ன புதிய தயாரிப்புகள் அறிமுகமாகும்? முன்னரே குறிப்பிட்டபடி, கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வில் சாம்சங்கின் புதிய ஃபோல்டபிள் ஸ்மார்ட்போன்களான கேலக்ஸி இஸட் ஃபோல்ட் 5 மற்றும் கேலக்ஸி இஸட் ஃபிளிப் 5 மாடல்கள் அறிமுகமாகும்.
இதனுடன் சேர்த்து கேலக்ஸி வாட்ச் 6 மற்றும் கேலக்ஸி வாட்ச் 6 கிளாசிக் என்கிற 2 புதிய ஸ்மார்ட் வாட்சுகளும் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கேலக்ஸி வாட்ச் 6 மற்றும் கேலக்ஸி வாட்ச் 6 கிளாசிக் ஆனது வெவ்வேறு அளவுகள் மற்றும் கனெக்டிவிட்டி வேரியண்ட்களின் அறிமுகமாகும்.
சாம்சங் கேலக்ஸி வாட்ச் 6 ஆனது 40மிமீ மற்றும் 44மிமீ அளவுகளில் கிடைக்கும். மறுகையில் உள்ள சாம்சங் கேலக்ஸி வாட்ச் 6 கிளாசிக் ஆனது 43மிமீ மற்றும் 47மிமீ அளவுகளில் கிடைக்கும். இரண்டு ஸ்மார்ட்வாட்ச்களும் வைஃபை-ஒன்லி மற்றும் வைஃபை + செல்லுலார் (எல்டிஇ) வகைகளில் கிடைக்கும்.
சாம்சங் கேலக்ஸி இஸட் ஃபோல்ட் 5 எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் அம்சங்கள்? இது 7.6 இன்ச் டைனமிக் அமோஎல்இடி டிஸ்பிளே, 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 4400எம்ஏஎச் பேட்டரி, ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ்-ஐ அடிப்படையாக கொண்ட ஒன் யுஐ 5.1 லேயர் போன்ற அம்சங்களை கொண்டிருக்கலாம். இது ரூ.1,43,500 க்கு அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சாம்சங் கேலக்ஸி இஸட் ஃபிளிப் 5 எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் அம்சங்கள்? இது 6.7 இன்ச் டைனமிக் அமோஎல்இடி டிஸ்பிளே, 3.4 இன்ச் அவுட்டர் டிஸ்பிளே, 512ஜிபி வரையிலான இன்டர்னல் ஸ்டோரேஜ், டூயல் ரியர் கேமரா செட்டப், 3700எம்ஏஎச் பேட்டரி, ஒன் யுஐ 5.1 ஓஎஸ் போன்ற அம்சங்களை கொண்டிருக்கலாம். இது ரூ.95,000 க்கு அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








