Home
News

3 போன் வாங்குற விலைக்கு Samsung Galaxy Ring.. களைகட்ட தொடங்கிய Galaxy Unpacked Event 2024.. LIVE விவரங்கள்!

சாம்சங் நிறுவனம் தனது வருடாந்திர கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வை (Samsung Galaxy Unpacked Event 2024) நடத்த தயாராக உள்ளது. இந்நிகழ்வில் சாம்சங்கின் அடுத்த தலைமுறை ஃபோல்டபிள் மற்றும் ஃபிளிப் ஸ்மார்ட்போன்களின் அறிமுகங்கள் தான் ஹைலைட் ஆக இருக்கும் என்றாலும் கூட.. சிலர் சாம்சங் கேலக்ஸி ரிங்கின் இந்திய விலை நிர்ணயம் எப்படி இருக்கும் என்பதை அறிந்துக்கொள்ள மிகவும் ஆர்வமாக உள்ளனர். அப்படியாக, கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வில் என்னென்ன புதிய தயாரிப்புகள் அறிமுகம் ஆகும்? இந்நிகழ்வை லைவ் ஸ்ட்ரீமிங் செய்வது எப்படி? இதோ விவரங்கள்:

சாம்சங் கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வில் என்னென்ன புதிய தயாரிப்புகள் அறிமுகம் ஆகும்? இந்த வெளியீட்டு நிகழ்வின் போது சாம்சங் கேலக்ஸி இஸட் ஃபோல்ட் 6 (Samsung Galaxy Z Fold 6) மற்றும் சாம்சங் கேலக்ஸி இஸட் ஃபிளிப் 6 (Samsung Galaxy Z Flip 6) ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகும்.

களைகட்ட தொடங்கிய Galaxy Unpacked Event 2024.. LIVE விவரங்கள்!

2 புதிய ஸ்மார்ட்போன்களுடன் சேர்த்து சாம்சங் கேலக்ஸி வாட்ச் 7 சீரீஸ் (Samsung Galaxy Watch 7 Series), சாம்சங் கேலக்ஸி பட்ஸ் 3 (Samsung Galaxy Buds 3) மற்றும் சாம்சங் கேலக்ஸி ரிங் (Samsung Galaxy Ring) ஆகியவைகளும் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சாம்சங் கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வை லைவ் ஸ்ட்ரீமிங் செய்வது எப்படி? இந்நிகழ்வு பாரிஸில் ஜூலை 10 ஆம் தேதி மதியம் 3மணிக்கு, அதாவது இந்திய நேரப்படி மாலை 6.30 மணிக்கு தொடங்கும். இந்நிகழ்வு சாம்சங் நிறுவனத்தின் யூட்யூப் (YouTube) மற்றும் எக்ஸ் (X) தளங்கள் வழியாகவும், சாம்சங் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் வழியாக நேரடியாக ஒளிபரப்பப்படும்.

சாம்சங் கேலக்ஸி இஸட் ஃபோல்ட் 6-ல் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? இது அதன் முன்னோடியுடன் ஒப்பிடும்போது மேம்படுத்தப்பட்ட வடிவமைப்பை கொண்டிருக்கும். இந்த போன் பெரிய 7.6 இன்ச் டைனமிக் AMOLED 2x இன்னர் டிஸ்பிளே மற்றும் 6.3 இன்ச் அவுட்டர் டிஸ்பிளேவை கொண்டிருக்கலாம். இரண்டு ஸ்க்ரீன்களுமே 120Hz ஸ்கிரீன் ரெஃப்ரெஷ் ரேட்டை ஆதரிக்கும். மேலும் கவர் டிஸ்பிளேவானத கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 பாதுகாப்பை பெறும்.

இந்த ஸ்மார்ட்போன் குவால்காமின் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட் மூலம் இயக்கப்படும். மேலும் ஆண்ட்ராய்டு 14-அடிப்படையிலான ஒன் யுஐ 5 உடன் அனுப்பப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. கேமராக்களை பொறுத்தவரை, முன் மற்றும் பின்புறம் இரண்டிலும் பல கேமராக்கள் இருக்கும். பின்பக்கத்தில் 50 மெகாபிக்சல் மெயின் சென்சார் மற்றும் 12 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸ் மற்றும் 3x ஆப்டிகல் ஜூம் கொண்ட 10 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமரா இருக்கும்.

கவர் டிஸ்பிளேவில் 10 மெகாபிக்சல் செல்ஃபீ ஷூட்டரை கொண்டிருக்கலாம், அதே நேரத்தில் இன்னர் டிஸ்பிளேவில் 4 மெகாபிக்சல் அண்டர் டிஸ்பிளே கேமராவும் பேக் செய்யப்படலாம். கடைசியாக சாம்சங் கேலக்ஸி இஸட் ஃபோல்ட் 6 ஸ்மார்ட்போன் ஆனது 4,400mAh பேட்டரியை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் இந்த மாடலில் எஸ்-பென் ஆதரவும் இருக்கும்.

சாம்சங் கேலக்ஸி இஸட் ஃபிளிப் 6-ல் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? இதில் 6.7 இன்ச் ஃபுல் எச்டி+ மெயின் டிஸ்பிளே இடம்பெறலாம், இது 120 ஹெர்ட்ஸ் ஸ்கிரீன் ரெஃப்ரெஷ் ரேட்டுடன் வரக்கூடும். இதன் அவுட்டர் டிஸ்பிளேவானது அதன் முன்னோடியை விட பெரியதாக இருக்கலாம். இதுவும் குவால்காமின் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட் மூலம் இயக்கப்படும்

கேமராக்களை பொறுத்தவரை, இதில் டூயல் ரியர் கேமரா செட்டப் இடம்பெறும். அதில் 50 மெகாபிக்சல் மெயின் சென்சார் மற்றும் 12 மெகாபிக்சல் அல்ட்ரா-வைடர்-ஆங்கிள் லென்ஸ் இடம்பெறலாம். முன்பக்கத்தில் 10-மெகாபிக்சல் செல்பீ ஷூட்டர் இருக்கலாம். கடைசியாக சாம்சங் கேலக்ஸி இஸட் ஃபிளிப் 6 ஸ்மார்ட்போன் ஆனது 35W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உடனான 4,000mAh பேட்டரியை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

சாம்சங் கேலக்ஸி ரிங் என்ன விலைக்கு வரும்? இந்நிகழ்வின் போது சாம்சங் நிறுவனம் அதன் கேலக்ஸி ரிங்கையும் அறிமுகப்படுத்தலாம். சாம்சங்கின் இந்த ஸ்மார்ட் ரிங்கில் உடல்நலம் தொடர்பான சுவாரசியமான அம்சங்கள் மற்றும் கண்காணிப்பு திறன்கள் இருக்கலாம். இந்த ஸ்மார்ட் ரிங் தோல் மூலம் உடலின் வெப்பநிலையை அளவிடும் திறனை கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. சமீபத்திய லீக்ஸ் தகவலின்படி இந்தியாவில் இது ரூ.35,000 க்கு அறிமுகம் செய்யப்படலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Samsung Galaxy Unpacked Event 2024 on July 10 Live Stream New Launches Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X