Home
News

Galaxy Unpacked 2025 நிகழ்வு: எத்தனை மணிக்கு தொடங்கும்? LIVE ஸ்ட்ரீமிங் செய்வது எப்படி? என்னென்ன அறிமுகமாகும்?

2025 ஆம் ஆண்டில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட டெக் ஈவென்ட் மற்றும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சாம்சங் ஸ்மார்ட்போன்களின் அறிமுகம் ஆகிய இரண்டுமே இன்று நடக்க உள்ளன. ஏனென்றால் சாம்சங் கேலக்ஸி அன்பேக்டு 2025 நிகழ்வு இன்று (ஜனவரி 22) நடக்கவுள்ளது. இது சரியாக எத்தனை மணிக்கு தொடங்கும்? இதை லைவ் ஆக பார்ப்பது எப்படி? என்னென்ன அறிமுகங்களை மற்றும் அறிவிப்புகளை எதிர்பார்க்கலாம்? இதோ விவரங்கள்:

சாம்சங் கேலக்ஸி அன்பேக்டு 2025 நிகழ்வு (Samsung Galaxy Unpacked 2025 Event) தேதி மற்றும் நேரம்: முன்னரே குறிப்பிட்டபடி சாம்சங் கேலக்ஸி அன்பேக்டு 2025 நிகழ்வு இன்று, அதாவது ஜனவரி 22 ஆம் தேதி ஆம் தேதி நடக்கவுள்ளது. இந்த வெளியீட்டு நிகழ்வு சரியாக, இந்திய நேரடி இரவு 11.30 மணிக்கு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

Galaxy Unpacked 2025 நிகழ்வு: LIVE ஸ்ட்ரீமிங் செய்வது எப்படி?

சாம்சங் கேலக்ஸி அன்பேக்டு 2025 நிகழ்வை லைவ் ஸ்ட்ரீம் செய்வது எப்படி? சாம்சங்கின் இத வெளியீட்டு நிகழ்வை சாம்சங்.காம், சாம்சங் நியூஸ்ரூம் மற்றும் சாம்சங் யூட்யூப் சேனல் வழியாக நேரலையில் பார்க்க முடியும். கூடவே சாம்சங்கின் எக்ஸ் பக்கம் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் கூட அறிமுகங்கள் மற்றும் அறிவிப்புகள் குறித்த அப்டேட்களை பார்க்க முடியும்.

சாம்சங் கேலக்ஸி அன்பேக்டு 2025 நிகழ்வில் என்னென்ன அறிமுகங்களை மற்றும் அறிவிப்புகளை எதிர்பார்க்கலாம்? முதல் மற்றும் முக்கிய அறிமுகமாக கேலக்ஸி எஸ்25 சீரீஸ் இருக்கும். தற்போது வரையிலாக இந்த சீரிஸின் கீழ் "வழக்கம் போல" 3 மாடல்கள் தான் அறிமுகமாகும் என்பதை உறுதியாக சொல்ல முடியவில்லை.

ஏனென்றால், இந்தாண்டு கேலக்ஸி எஸ்25 (Galaxy S25), கேலக்ஸி எஸ்25 பிளஸ் (Galaxy S25 Plus), கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா (Galaxy S25 Ultra) உடன் சேர்த்து முற்றிலும் புதிய கேலக்ஸி எஸ்25 ஸ்லிம் (Galaxy S25 Slim) என்கிற மாடலும் அறிமுகமாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறைந்தது இது குறித்த அறிவிப்புகள் வெளியாகலாம் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.

சில டிப்ஸ்டர்கள் இது இது ஜனவரி 22 அன்று வெளியாகாது; மாறாக 2025 மே மாத வாக்கில் அறிமுகமாகும் என்று கூறுகின்றன. ஆனால் நம்பகமான டிப்ஸ்டர்களில் ஒருவரான ஈவான் பிளாஸ் (Evan Blass) வழியாக கிடைத்த தகவலின்படி, கேலக்ஸி எஸ் 25 ஸ்லிம் மாட தென் கொரியாவில் மட்டுமே அறிமுகம் செய்யப்படலாம் என்று கூறுகிறார்.

புதிய ஸ்மார்ட்போன்களை தவிர்த்து, சில புதிய கேலக்ஸி ஏஐ அம்சங்கள் அறிமுகமாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக கேலக்ஸி எஸ்25 சீரிஸ் ஸ்மார்ட்போன்களில், கூகுள் ஏஐ அசிஸிடண்ட்டிற்கான வேக் வேர்ட்ஸ் ஆனது "ஹே கூகுள்"என்பதில் இருந்து "ஹே ஜெமினி" ஆக மாற்றப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இது உண்மையாக இருந்தால், "ஹே ஜெமினி" என்கிற வேக் வேர்ட்ஸ்-க்கான ஆதரவை பெறும் முதல் ஸ்மார்ட்போன்களாக சாம்சங் கேலக்ஸி எஸ்25 சீரீஸ் ஆகத்தான் இருக்கும் . நினைவூட்டும் வண்ணம், கூகுளின் "சர்க்கிள் டு சேர்ச்" அம்சமானது (Google Circle to Search Feature) கூட முதலில் சாம்சங் கேலக்ஸி எஸ்24 சீரீஸில் (Samsung Galaxy S24 Series) தான் அறிமுகமானது.

மேலும் சாம்சங் கேலக்ஸி எஸ்25 சீரீஸில் ஜெனெரேட்டிவ் ஆர்ட்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ் (Generative Artificial Intelligence - gen AI) அடிப்படையிலான புதிய கேலக்ஸி ஏஐ அம்சங்களை (New Galaxy AI Features) அறிமுகம் செய்வதையும் சாம்சங் உறுதிப்படுத்தியுள்ளது. கூடவே ஆண்ட்ராய்டு 15 அடிப்படையிலான ஒன் யுஐ 7 ஓஎஸ் மூலம் கேலக்ஸி ஏஐ-பவர்டு ஸ்கெட்ச் டு இமேஜ் திறனானது இன்னும் சிறப்பாக இருக்கும் என்பதையும் சாம்சங் வெளிப்படுத்தியுள்ளது.

கடைசியாக சாம்சங் நிறுவனம், இன்று நடக்கும் வெளியீட்டு நிகழ்வில் தனது முதல் எக்ஸ்டென்டட் ரியாலிட்டி (எக்ஸ்ஆர்) ஹெட்செட்டை அறிமுகப்படுத்தலாம். இந்த ஹெட்செட்டை 'ப்ராஜெக்ட் மூஹன்' (Samsung Project Moohan XR Headset) என்று அழைக்கப்படுகிறது . இந்த ஹெட்செட்டின் சரியான அம்சங்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக்கப்படவில்லை என்றாலும் கூட, இது மல்டிமாடல் இன்புட், ஸ்டேட்-ஆப்-தி-ஆர்ட் டிஸ்பிளே மற்றும் பாஸ்த்ரூ திறன்கள் உட்பட சில முக்கிய அம்சங்களை டீஸ் செய்துள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Samsung Galaxy Unpacked 2025 Event Today Time Live Streaming New Product Announcements
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X