Home
News

ஒரே நாளில் 11 அறிமுகங்கள்.. அதுல 3 போன்கள், 3 வாட்ச்கள், 2 பட்ஸ்.. Samsung-ன் பெரிய சம்பவம்.. எப்போது?

ஜூன் மாத தொடக்கத்தில் இருந்தே சாம்சங் (Samsung) நிறுவனம் அதன் அடுத்த ஜெனரேஷன் கேலக்ஸி இசட் ஃபோல்ட் ஸ்மார்ட்போனுக்கான விளம்பர பிரச்சாரத்தை ஆரம்பித்து இருந்தது; அப்போதே இது ஜூன் மாத இறுதிக்குள் ஜூலை மாத தொடக்கத்தில் அறிமுகம் செய்யப்படலாம் என்கிற யூகங்கள் கிளம்பின.

தென் கொரிய தொழில்நுட்ப நிறுவனமான சாம்சங் அதன் அடுத்த போல்ட் மற்றும் பிளிப் போன்களின் வெளியீட்டு தேதி குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை என்றாலும், கேலக்ஸி இசட் ஃபோல்ட் 7 மற்றும் கேலக்ஸி இசட் ஃபிளிப் 7 மாடல்களுக்கான கேலக்ஸி அன்பேக்டு 2025 நிகழ்வு எப்போது நடக்கும் என்கிற தேதி லீக் ஆகியுள்ளது.

ஒரே நாளில் 11 அறிமுகங்கள்.. Samsung-ன் பெரிய சம்பவம்.. எப்போது?

எக்ஸ் தளம் வழியாக டிப்ஸ்டர் இவான் பிளாஸ் (@evleaks) வழியாக கிடைத்த தகவலின்படி, சாம்சங்கின் அடுத்த கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வு ஜூலை 9, 2025 அன்று நடக்கலாம். இந்த நிகழ்வு இந்திய நேரப்படி இரவு 7:30 மணிக்கு தொடங்கும் என்று கூறப்படுகிறது. இந்த வெளியீட்டு நிகழ்வின் போது சாம்சங் கேலக்ஸி வாட்ச் 8 சீரிஸ் மாடல்களும், புதிய கேலக்ஸி பட்ஸ் மாடலும் அறிமுகம் செய்யப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், இந்தாண்டு சாம்சங் நிறுவனம் அதன் ஸ்டாண்டர்ட் கேலக்ஸி இஸட் 7 போல்ட் மற்றும் கேலக்ஸி இஸட் 7 பிளிப் மாடல்களுடன் சேர்த்து மலிவு விலையில் ஒரு எப்இ (FE) எடிஷனையும் அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கேலக்ஸி இஸட் 7 பிளிப் எப்இ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படலாம்.

கேலக்ஸி வாட்ச் 8 சீரிஸின் கீழ் கேலக்ஸி வாட்ச் 8 (Galaxy Watch 8), கேலக்ஸி வாட்ச் 8 கிளாசிக் (Galaxy Watch 8 Classic) மற்றும் கேலக்ஸி வாட்ச் 8 அல்ட்ரா 2025 (Galaxy Watch Ultra 2025) மாடல்கள் அறிமுகம் செய்யப்படலாம். கூடவே கேலக்ஸி பட்ஸ் கோர் (Galaxy Buds Core) மற்றும் கேலக்ஸி பட்ஸ் 3 எப்இ (Galaxy Buds 3 FE) மாடல்களும் அறிமுகம் செய்யப்படலாம்.

இந்த நிகழ்வின் போது சாம்சங் பிராண்ட் ஆனது அதன் முதல் எக்ஸ்ஆர் ஹெட்செட், ப்ராஜெக்ட் மூஹன் மற்றும் அதன் ட்ரை-ஃபோல்டு போனை காட்சிப்படுத்தும் என்றும் வதந்திகள் உள்ளன. அதாவது இந்த 3 அறிமுகங்கள் உடன் சேர்ந்து 3 ஸ்மார்ட்போன்கள், 3 ஸ்மார்ட் வாட்ச்கள், 2 இயர்பட்ஸ்கள் என மொத்தம் 11 அறிமுகங்கள் நடக்கலாம்!

முன்னதாக கேலக்ஸி இஸட் 7 போல்ட், கேலக்ஸி இஸட் 7 பிளிப், கேலக்ஸி இஸட் 7 பிளிப் எப்இ 3 ஆகிய மாடல்களின் ரேம், ஸ்டோரேஜ் மற்றும் கலர் ஆப்ஷன்கள் குறித்த விவரங்களை டிப்ஸ்டர் அர்சீன் லூபின் (@MysteryLupin), எக்ஸ் தளம் வழியாக லீக் செய்து இருந்தார். அதன்படி கேலக்ஸி இசட் ஃபோல்ட் 7 மாடல் ஆனது 3 ரேம் மற்றும் ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் வெளியிடப்படும்: 12ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ், 12ஜிபி ரேம் + 512ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 16ஜிபி ரேம் + 1ஜிபி ஸ்டோரேஜ். இது கோரல் ரெட், ப்ளூ ஷேடோ, ஜெட் பிளாக் மற்றும் சில்வர் ஷேடோ ஆகிய கலர்களில் அறிமுகம் செய்யப்படலாம்.

சாம்சங் கேலக்ஸி இசட் ஃபிளிப் 7 மாடல் ஆனது 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ், 12ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 12ஜிபி ரேம் + 512ஜிபி ஸ்டோரேஜ் ஆகிய 3 ஆப்ஷன்களில் வெளியிடப்படும். இது ப்ளூ ஷேடோ, ஒயிட் மற்றும் பிளாக் கலர் ஆப்ஷன்களில் விற்பனைக்கு வர வாய்ப்புள்ளது.

கடைசியாக உள்ள சாம்சங் கேலக்ஸி இசட் ஃபிளிப் 7 எப்இ மாடல் ஆனது 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 8ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் என்கிற 2 ஆப்ஷன்களில் அறிமுகம் செய்யப்படும். சாம்சங் நிறுவனத்தின் இந்த ஃபேன் எடிஷன் ஸ்மார்ட்போன் ஆனது பிளாக் மற்றும் ஒயிட் கலர்களில் வெளியிடப்படும்.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy Unpacked 2025 Event Date Leaked Galaxy Z Fold 7 Galaxy Z Flip 7 Launch on July 9
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X