Home
News

எல்லாமே உயர்ரகம்.,குறிப்பாக அந்த அம்சம்-பிப்ரவரி9 அறிமுகமாகும் சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்8: லீக்கான பிரஸ் ரிலிஸ்

Samsung Unpacked 2022 நிகழ்வுக்கு அதன் ரசிகர்களும் ஆர்வலர்களும் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். இந்த நிகழ்வில் சாம்சங் பல்வேறு சாதனங்களை அறிவிக்க இருக்கிறது. சாம்சங் கேலக்ஸி எஸ்22 சீரிஸ், சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்8 லைன்அப் உள்ளிட்ட பல சாதனங்களை கொண்டுவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் டேப்லெட் குறித்து பார்க்கையில், சாம்சங் ஒரு அல்ட்ரா மாடலை வெளியிட இருக்கிறது. தற்போது கசிந்துள்ள புதிய பிரஸ் ரிலீஸ்-ல் சாம்சங் டேப் எஸ்8 குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.

சாம்சங் கேலக்ஸி எஸ்8 பிரஸ் ரிலீஸ்

சாம்சங் கேலக்ஸி எஸ்8 பிரஸ் ரிலீஸ்

பிரபல டிப்ஸ்டர் இவான் பிளாஸ், சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்8 தொடரின் பிரஸ் ரிலீஸ் படங்களை பகிர்ந்துள்ளார். கசிவுத் தகவல் வரவிருக்கும் டேப்லெட் தொடரில் மூன்று மாடல்கள் இடம்பெறும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. அது சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்8, டேப் எஸ்8 ப்ளஸ் மற்றும் டேப் எஸ்8 அல்ட்ரா ஆகும். இந்த சாதனங்கள் வைஃபை 6இ, 45 வாட்ஸ் வேகமான சார்ஜிங் உள்ளிட்ட பல அம்சங்களை உள்ளடக்கியுள்ளது.

சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்8 ப்ளஸ் மற்றும் சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்8 அல்ட்ரா

சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்8 ப்ளஸ் மற்றும் சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்8 அல்ட்ரா

சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்8 ப்ளஸ் மற்றும் சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்8 அல்ட்ரா ஆகியவை புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட எஸ் பென் ஸ்டைலஸ் அம்சத்தோடு வருகிறது. இது "அதிக குறைந்த தாமதத்திற்கான ஒரு கணிப்பு அலகாரிதத்தை பயன்படுத்துகிறது". சாம்சங் டேப்லெட்களின் விரிவான ரெண்டர்களை வெளிப்படுத்தியுள்ளது. இது முந்தை கசிவுகளுன் ஒத்துப்போகிறது.

11-இன்ச் டிஸ்ப்ளே வசதி

11-இன்ச் டிஸ்ப்ளே வசதி

வெண்ணிலா கேலக்ஸி டேப் எஸ்8 ஆனது 2560 x 1600 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 11-இன்ச் டிஸ்ப்ளே உடன் வருகிறது. இது தொடரின் மிகச் சிறிய அளவில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்8 ப்ளஸ் 12.8 இன்ச் திரை மற்றும் 2800 x 1752 தெளிவுத்திறன் கொண்டதாக கூறப்படுகிறது. இது மிட் வேரியண்ட் மாடலாக இருக்கிறது. சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்8 அல்ட்ரா ஆனது 2960 x 1848 தெளிவுத்திறனுடன் ஒரு பெரிய டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. இது 14.6 இன்ச் டிஸ்ப்ளே மற்றும் நாட்ச் வசதியோடு வருகிறது.

சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்8 அல்ட்ரா: எதிர்பார்க்கப்படும் அம்சம்

சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்8 அல்ட்ரா: எதிர்பார்க்கப்படும் அம்சம்

சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்8 அல்ட்ரா ஆனது புதிய ஈர்ப்பாக இருக்கிறது. சாம்சங்கின் அனைத்து ப்ரீமியம் டேப்லெட்களும் வெண்ணிலா மாடல் மற்றும் பிளஸ் மாறுபாட்டை கொண்டிருக்கின்றன. டேப்லெட்டில் அல்டார் மாடல் அறிமுகம் என்பது இதுவே முதன்முறையாகும். அல்ட்ரா மாடலானது தனித்துவமான பஞ்ச் ஹோல் கட்அவுட்-க்கு பதிலாக நாட்ச் அம்சத்தோடு அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது.

டேப்லெட் பிளஸ் மற்றும் அல்ட்ரா மாடல்

அதேபோல் வரவிருக்கும் டேப்லெட்டின் பிளஸ் மற்றும் அல்ட்ரா மாடல்களில் ஓஎல்இடி டிஸ்ப்ளே இடம்பெறும் என கூறப்படுகிறது. இதன் வெண்ணிலா மாறுபாடானது எல்சிடி பேனலை பெறும் என கூறப்படுகிறது. சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்8 அல்ட்ரா ஆனது 12 எம்பி முதன்மை லென்ஸ் மற்றும் 6 எம்பி செகண்டரி ஷூட்டர் வசதியோடு பின்புறத்தில் இரட்டை கேமரா அமைப்பு கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இதில் 12 எம்பி முன்பக்க கேமரா பொருத்தப்பட்டிருக்கும் என கூறப்படுகிறது.

சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்8 வெளியீட்டு விவரங்கள்

சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்8 வெளியீட்டு விவரங்கள்

கசிந்த செய்திக்குறிப்பின்படி சாதனத்தின் பெரும்பாலான அம்சங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. கீபோர்ட்கள், கவர்கள் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய புதிய டேப்லெட்டுகளுடன் இரண்டு துணைக்கருவிகளும் இருக்கும் என ரெண்டர்கள் தெரிவிக்கிறது. சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்8 ஆனது பிப்ரவரி 9 ஆம் தேதி இந்திய நேரப்படி இரவு 8:30 மணிக்கு அறிமுகமாகும் என கூறப்படுகிறது. அதேபோல் புதிய டேப்லெட்கள் அறிமுகம் செய்த உடன் அது முன்கூட்டிய ஆர்டர்களுக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது. இந்த சாதனத்தின் ஷிப்பிங் பிப்ரவரி 25 ஆம் தேதி செய்யுப்படும் என கூறப்படுகிறது. இது தேர்ந்தெடுக்கப்பட்ட தென் ஆப்பிரிக்கா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பா சந்தைகளுக்கு மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய சந்தையை பொறுத்தவரை சாம்சங் கேலக்ஸி எஸ்22 ஸ்மார்ட்போன்கள் மற்றும் சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்8 டேப்லெட்கள் விரைவில் கிடைக்கும் என கூறப்படுகிறது. விரைவில் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy Tab S8 Set to Launch on February 9: Press Release Leaked
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X