சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்8, டேப் எஸ்8+, டேப் எஸ்8 அல்ட்ரா அறிமுகம்: உச்ச ரக அம்சம்.,அதுக்கு இதுவே போதும்!
சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்8, கேலக்ஸி டேப் எஸ்8+, கேலக்ஸி டேப் எஸ்8 அல்ட்ரா சாதனம் டூயல் கேமரா வசதியோடு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதோடு சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்8 தொடர் பிப்ரவரி 25 முதல் தேர்ந்தெடுக்கப்பட்ட சந்தைகளில் விற்பனைக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்8, கேலக்ஸி டேப் எஸ்8+ மற்றும் கேலக்ஸி டேப் எஸ்8 அல்ட்ரா
சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்8, கேலக்ஸி டேப் எஸ்8+ மற்றும் கேலக்ஸி டேப் எஸ்8 அல்ட்ரா சாதனம் ஆகியவை கேலக்ஸி Unpacked 2022 நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்த நிகழ்வில் நிறுவனம் சாம்சங் கேலக்ஸி எஸ்22 தொடர் சாதனங்களையும் அறிமுகம் செய்தது. கேலக்ஸி டேப் எஸ்8 மற்றும் கேலக்ஸி டேப் எஸ்8+ ஆகியவை நிறுவனத்தின் கேலக்ஸி டேப் எஸ்7 மற்றும் கேலக்ஸி டேப் எஸ்7+ ஆகியவையின் வாரிசுகளாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இருப்பினும் சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்8 அல்ட்ரா ஆனது நிறுவனத்தின் புதிய மாடலாக இருக்கிறது. இந்த புதிய சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்8 தொடர் 5ஜி இணைப்புடன் வருகிறது. கூடுதலாக சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்8+ மற்றும் சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்8 அல்ட்ரா ஆகியவை எஸ் பென் ஆதரவோடு வருகிறது.
சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்8 தொடர் விமர்சனங்கள்
சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்8, கேலக்ஸி டேப் எஸ்8+, கேலக்ஸி டேப் எஸ் அல்ட்ரா சாதனத்தின் விலை மற்றும் கிடைக்கும் தன்மை குறித்து பார்க்கலாம். சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்8 விலை குறித்து பார்க்கையில், இந்த சாதனம் இந்திய விலை மதிப்புப்படி தோராயமாக ரூ.52,400 ஆக இருக்கிறது. சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்8 ப்ளஸ் சாதனத்தின் இந்திய விலைப்படி ரூ.67,300 ஆக இருக்கிறது. அதேபோல் இதன் உயர் ரக மாடலான சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்8 அல்ட்ரா சாதனத்தின் விலை ரூ.82,300 ஆக இருக்கிறது. சாம்சங் டேப் எஸ் 8 சீரிஸ் சாதனம் பிப்ரவரி 9 ஆம் தேதி இரவு 10 மணி முதல் முன்கூட்டிய ஆர்டர்களுக்கு கிடைக்கும். இந்த சாதனத்தின் விற்பனை பிப்ரவரி 25 முதல் அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் தென் கொரிக்கா உள்ளிட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட சந்தைகளில் கிடைக்கும் என தெரிவிக்கப்படுகிறது.
12 ஜிபி ரேம் வசதியோடு சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்8
சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்8 மற்றும் சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்8+ ஆகிய சாதனங்கள் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் மற்றும் 12 ஜபி ரேம் மற்ரும் 128 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் உடன் வருகிறது. அதேபோல் சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்8 அல்ட்ரா ஆனது 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு, 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு மற்றும் 16 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது. புதிய சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்8 மற்றும் கேலக்ஸி டேப் எஸ்8+ ஆனது கிராஃபைட், பிங்க் கோல்ட் மற்றும் சில்வர் வண்ண விருப்பத்தில் கிடைக்கிறது, அதேபோல் சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்8 அல்ட்ரா மாடல் ஆனது கிராஃபைட் ஷாடோ வண்ண விருப்பத்தில் வருகிறது. சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்8, கேலக்ஸி எஸ்8+ மற்றும் கேலக்ஸி டேப் எஸ்8 அல்ட்ரா சாதனத்தின் முறையான இந்திய விலை மற்றும் விவரங்கள் அறிவிக்கப்படவில்லை.
ஆண்ட்ராய்ட் ஃபிளாக்ஷிப் சாதனம்
சாம்சங் நிறுவனம் கேலக்ஸி டேப் எஸ்8 தொடர் உடன் சாம்சங் கேலக்ஸி எஸ்22, கேலக்ஸி எஸ்22+, கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா சாதனம் ஆண்ட்ராய்ட் ஃபிளாக்ஷிப் சாதனமாக வெளியிடப்பட்டுள்ளது. தென் கொரிய நிறுவனமான சாம்சங், கேலக்ஸி டேப் எஸ்8 சாதனத்துக்கான புக் கவர், கீபோர்ட், புக் கவர் கீபோர்ட் ஸ்லிம், புக் ப்ரொடக்டிவ் ஸ்டாண்டிவ் கவர், நோட் வியூகவர் மற்றும் ஸ்ட்ராப் கவர் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டிருக்கிறது.
சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்8 விவரக்குறிப்புகள்
சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்8
விவரக்குறிப்புகள் குறித்து பார்க்கையில் இந்த சாதனம் ஆண்ட்ராய்டு 12 ஆதரவோடு யூஐ டேப் 4 மூலம் இயங்குகிறது. டேப்லெட் 11 இன்ச் WQXGA (2,560x1,600 பிக்சல்கள்) எல்டிபிஎஸ் டிஎஃப்டி டிஸ்ப்ளே 276பிபிஐ பிக்சல் அடர்த்தி டிஸ்ப்ளே வசதியோடு வருகிறது. அதேபோல் இந்த சாதனம் 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீத ஆதரவோடு வருகிறது. ஹூட்டின் கீழ் இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 மூலம் இயக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் 12 ஜிபி ரேம் உடன் இணைக்கப்பட்டிருக்கிறது.
13 மெகாபிக்சல் முதன்மை சென்சார்
சாம்சங் கேலக்ஸி டேப் எஸ் எஸ்8 சாதனமானது இரட்டை பின்புற கேமரா அமைப்போடு வருகிறது. இந்த சாதனம் 13 மெகாபிக்சல் முதன்மை சென்சார், 6 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் சென்சார் ஆதரவோடு வருகிறது. கேமரா அமைப்பு எல்இடி ஃபிளாஷ் உடன் இணைக்கப்பட்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் 12 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் ஷூட்டர் வசதி இருக்கிறது. சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்8 ஆனது மைக்ரோ எஸ்டி கார்ட் ஸ்லாட் வசதி இருக்கிறது. இதன்மூலம் 1 டிபி வரை மெமரி விரிவாக்கம் செய்யலாம். இதில் 256 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது. சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்8 சாதனமானது 8000 எம்ஏஎச் பேட்டரியுடன் வருகிறது. இது சூப்பர் ஃபாஸ்ட் சார்ஜிங் 2.0 வசதியோடு வருகிறது. 45 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியைக் கொண்டுள்ளது.
சாம்சங் கேல்கஸி டேப் எஸ்8+ விவரக்குறிப்புகள்
சாம்சங் கேல்கஸி டேப் எஸ்8+ விவரக்குறிப்புகள் குறித்து பார்க்கையில், இந்த சாதனம் ஆண்ட்ராய்டு 12 அடிப்படையிலான ஒன் யூஐ டேப் 4 உடன் வருகிறது. இந்த சாதனம் 120 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே வசதியோடு வருகிறது. இது 12.4 இன்ச் WQXGA+ (2,800x1,752 பிக்சல்கள்) சூப்பர் அமோலெட் டிஸ்ப்ளே உடன் வருகிறது. இந்த சாதனம் ஆக்டோ கோர் எஸ்ஓசி வசதியோடு இயக்கப்படுகிறது. இந்த சாதனம் 12 ஜிபி ரேம், 13 எம்பி முதன்மை கேமரா, 6 மெகாபிக்சல் அல்ட்ரா ஷூட்டர் எல்இடி ஃபிளாஷ் வசதியோடு வருகிறது. இந்த சாதனத்தின் முன்பக்கத்தில் 12 மெகாபிக்சல் செல்பி கேமரா இருக்கிறது. சாம்சங் கேல்கஸி டேப் எஸ்8 போல் இல்லாமல் கேலக்ஸி டேப் எஸ்8 சாதனம் அண்டர் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வசதியோடு வருகிறது. இந்த சாதனமும் சூப்பர் ஃபாஸ்ட் சார்ஜிங் 2.0 45வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியோடு வருகிறது.
சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்8 அல்ட்ரா சிறப்பம்சங்கள்
சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்8 மற்றும் சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்8+ போன்றே சாம்சங் கேல்கஸி டேப் எஸ்8 அல்ட்ரா ஆண்ட்ராய்ட் 12 யூஐ டேப்4 உடன் இயங்குகிறது. இந்த டேப்லெட் ஆனது 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு டிஸ்ப்ளே அடர்த்தியோடு வருகிறது. இந்த சாதனம் 14.6 இன்ச் WQXGA+ (2,960x1,848 பிக்சல்கள்) சூப்பர் அமோலெட் டிஸ்ப்ளே வசதியோடு வருகிறது. இந்த சாதனம் 13 மெகாபிக்சல் கேமரா 6 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் ஷூட்டர வசதியோடு வருகிறது. இந்த சாதனத்தின் முன்பக்கத்தில் 12 மெகாபிக்சல் அகலம் மற்றும் அல்ட்ரா வைட் ஷூட்டர் வசதியோடு வருகிறது.


Click it and Unblock the Notifications