அம்மாடி.! ரூ.14000 வரை தள்ளுபடியா? Samsung டேப்லெட் வாங்க பெஸ்ட் நேரம் இதான் டோய்.!
சாம்சங் (Samsung) நிறுவனம் தனது கேலக்ஸி டேப் 8 சீரிஸை (Samsung Galaxy Tab 8 Series) இந்தியாவில் பிப்ரவரி 2021ஆம் ஆண்டு அறிமுகம் செய்தது. இந்த டிவைஸின் S8 மற்றும் S8+ ஆகிய மாடல்கள் மீது நம்ப முடியாத தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்8 சீரிஸின் பேஸ் வேரியண்டான (Base variant) டேப் எஸ்8 (Tab S8) ரூ. 58,999-ற்கும்; சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்8+ (Tab S8+) ரூ. 74,999-ற்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது அமேசான் (Amazon) மற்றும் ப்ளிப்கார்ட் (Flipkart) இணையதளங்களில் இந்த ஆண்ட்ராய்டு டேப்புகள் பெரும் தள்ளுபடி விலையில் கிடைக்கின்றன.

Samsung Galaxy Tab S8 சீரிஸ் மீது நம்ப முடியாத சலுகையா?
இந்த தள்ளுபடியில் சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்8 (Samsung Galaxy Tab S8) ரூ. 44,999-ற்கும், சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்8+ (Samsung Galaxy Tab S8+) ரூ. 61,999-ற்கும் விற்பனை செய்யப்படுகிறது. சாம்சங் கேலக்ஸி எஸ்8 டேபின் தள்ளுபடி விற்பனை அமேசானிலும், எஸ்8+ டேப் குறைவான விலையில் ப்ளிப்கார்ட் தளத்திலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த இரண்டு சாம்சங் கேலக்ஸி டேப்ளின் சிறப்பு அம்சங்களைப் பற்றி இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
மேலே கூறப்பட்ட இரண்டு டேப்லெட்களுமே கிராபைட் (Graphite), பிங்க் கோல்ட் (Pink Gold) மற்றும் சில்வர் (Silver) ஆகிய நிறங்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்8 மற்றும் எஸ்8+ ஆகிய இரண்டு டேப்களும் ஸ்னாப் டிராகன் 8 ஜென் 1 ப்ராசசர் (Snapdragon 8 Gen 1 Processor) மூலம் இயக்கப்படுகிறது. இது 12GB RAM மற்றும் 256GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் (Internal Storage) உடன் வருகிறது.

S-Pen ஸ்டைலஸ் உடன் கெத்து காட்டும் புது டேப்லெட் டிவைஸ்.!
டிஸ்ப்ளேவை (Display) பொருத்தவரை S8 டேப் 11' இன்ச் LTPS TFT கொண்ட 2560 x 160 பிக்சல் ரெசொல்யூஷன் உடைய (Pixel Resolution) மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் (Refresh Rate) டிஸ்பிளேவாக வருகிறது. அதேபோல எஸ்8+ டேப் 12.4' இன்ச் சூப்பர் AMOLED உடன் கூடிய 2800 x 1752 பிக்சல் ரெசொல்யூஷன் டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இரண்டு டேப்லெட்களுமே OneUI 5 சார்ந்த ஆண்ட்ராய்டு 13 தளத்தில் இயங்குகின்றன. டேப்லெடுடன் சேர்த்து ஒரு S-Pen ஸ்டைலஸ் பென்னும் கொடுக்கப்படுகிறது.
பேட்டரியை (Battery) பொருத்தவரை S8 டேப் 8000mAh பேட்டரியும், S8+ டேப் சற்று பெரிய 10090mAh பேட்டரியையும் கொண்டுள்ளது. இந்த இரண்டு பேட்டரிகளும் 45W பாஸ்ட் சார்ஜிங் அம்சத்தை ஆதரிக்கிறது. இது 8GB RAM மற்றும் 128 ஸ்டோரேஜ் (Storage) வைஃபை வசதி போன்ற அம்சங்கள் கொண்ட சாம்சங் கேலக்ஸி எஸ்8 டேப் அமேசான் தளத்தில் 58,999 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ரூ.14,000 வரை தள்ளுபடியா? எப்படி அதிக தள்ளுபடியுடன் டேப்லெட் வாங்குவது?
கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு மூலம் EMI பயன்படுத்தி, இந்த டேப்லெட்டை வாங்குவோருக்கு ரூ. 7000 இன்ஸ்டன்ட் சலுகை (instant discount) வழங்கப்படுகிறது. மேலும், குறிப்பிட்ட சில கார்டுகளை பயன்படுத்துவோருக்குக் கூடுதலாக ரூ. 7000 ரூபாய் சலுகையையும் பெற முடியும். இதன் படி சாம்சங் கேலக்ஸி S8 டேப் இன் விலை ரூ. 44,999 ஆக குறைகிறது.
இது மட்டுமின்றி அமேசான் பே, ஐசிஐசிஐ கிரெடிட் கார்டு மூலம் வாங்கினால் ரூபாய் 14,000 தள்ளுபடி கிடைக்கிறது. இத்துடன் சேர்த்து 5% கேஷ் பேக்கும் வழங்கப்படுகிறது. இந்த சலுகைகளை பயன்படுத்தி அமேசான் விற்பனை இணையதளத்தில் சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்8 டிவைஸை ரூ. 42,250 வரை குறைவான விலையில் வாங்கலாம்.
அதேபோல ப்ளிப்கார்ட் இணையதளத்தில் விற்பனையாகிவரும் 8GB RAM, 128GB ஸ்டோரேஜ், வைஃபை வேரியண்ட் சாம்சங் கேலக்ஸி எஸ்8+ டேப் ரூ. 71,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. எச்டிஎப்சி கிரெடிட் கார்ட் பயன்படுத்தி, இந்த டேப்லெட்டை வாங்குவோர் ரூ.10,000 தள்ளுபடி கிடைக்கிறது. இந்த தள்ளுபடி காரணமாக சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்8+ டிவைஸை வெறும் ரூ.61,1999 விலைக்கு வாங்கலாம்.


Click it and Unblock the Notifications








