இதுவரை இல்லாத அம்சம்: புதிய சாம்சங் கேலக்ஸி டேப் எஸ் 7, எஸ்7+ அறிமுகம்!

|

சாம்சங் கேலக்ஸி டேப் எஸ் 7, சாம்சங் கேலக்ஸி டேப் எஸ் 7 + இரட்டை பின்புற கேமராக்கள், எஸ் பென் ஆதரவுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி டேப் எஸ் 7, டேப் எஸ் 7 ப்ளஸ்

சாம்சங் கேலக்ஸி டேப் எஸ் 7, டேப் எஸ் 7 ப்ளஸ்

சாம்சங் கேலக்ஸி டேப் எஸ் 7, டேப் எஸ் 7 ப்ளஸ் இதுவரை இல்லாத வகையிலான சக்தி வாய்ந்த ஆண்ட்ராய்டு டேப்லெட்டுகளாக அறிமுகமாகியுள்ளன. இந்த இரண்டு மாடல்களும் ஒரே மாதிரியான வடிவமைப்பு மற்றும் புதிய எஸ்-பேனாவுடன் அறிமுகமாகியுள்ளன. சாம்சங் கேலக்ஸி எஸ் 7 டேப் 11 இன்ச் டிஸ்ப்ளேயுடன் வருகிறது. அடுத்ததாக சாம்சங் கேலக்ஸி எஸ் 7 ப்ளஸ் 12.9 இன்ச் டிஸ்ப்ளேயுடன் அறிமுகமாகியுள்ளது.

11 இன்ச் எல்சிடி டிஸ்ப்ளே

11 இன்ச் எல்சிடி டிஸ்ப்ளே

சாம்சங் கேலக்ஸி டேப் எஸ் 7, 11 இன்ச் எல்சிடி டிஸ்ப்ளே 2560 x 1600 பிக்சல் தெளிவுத்திறனுடன் அறிமுகமாகியுள்ளது. அதோடு 274 பிபிஐ பிக்சல் அடர்த்தி மற்றும் 500 நிட்ஸ் பீக் பிரைட்னெஸ் அம்சத்துடன் உள்ளது.

விலை விவரங்கள்

விலை விவரங்கள்

சாம்சங் கேலக்ஸி டேப் எஸ் 7, கேலக்ஸி டேப் எஸ் 7 ப்ளஸ் டேப்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலை குறித்து பார்க்கலாம். சாம்சங் கேலக்ஸி டேப் எஸ் 7 விலையானது, 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு 699 யூரோ தோராயமாக ரூ.62,000, 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி சேமிப்பு விலை 779 யூரோ தோராயமாக ரூ.69,100, 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு வசதி கொண்ட டேப் 799 யூரோ தோராயமாக ரூ.70,900 மற்றும் 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி சேமிப்பு வசதி கொண்ட விலை 879 யூரோ தோராயமாக ரூ.78,000 என அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

டேப் எஸ் 7 ப்ளஸ் விலை விவரங்கள்

டேப் எஸ் 7 ப்ளஸ் விலை விவரங்கள்

சாம்சங் கேலக்ஸி டேப் எஸ் 7 ப்ளஸ் விலை விவரங்கள் குறித்து பார்க்கலாம். 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு வசதி கொண்ட மாடல் 899 யூரோ தோராயமாக ரூ.79,700, 8 ஜிபி ரேம் மற்றும் 256 சேமிப்பு வசதி கொண்ட மாடல் 979 யூரோ தோராயமாக ரூ.86,800 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மூன்று வண்ண விருப்பங்களில்

மூன்று வண்ண விருப்பங்களில்

கேலக்ஸி டேப் எஸ் 7 ப்ளஸ் 5ஜி ஆதரவு கொண்ட 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி மாறுபாட்டுக்கு 1099 யூரோ தோராயமாக ரூ.97500, 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி சேமிப்பு விலை 1179 யூரோ தோராயமாக ரூ.1,04,600 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட சந்தைகளில் ஆகஸ்ட் 21 முதல் மிஸ்டிக் பிளாக், மிஸ்டிக் ப்ரான்ஸ் மற்றும் மிஸ்டிக் சில்வர் வண்ண விருப்பங்களில் இந்த டேப்லெட்டுகள் விற்பனைக்கு வருகிறது.

மிக்-23பி.என் ரக கார்கில் போர் விமானம் விற்பனைக்கு வந்ததா? உண்மை என்ன?மிக்-23பி.என் ரக கார்கில் போர் விமானம் விற்பனைக்கு வந்ததா? உண்மை என்ன?

 சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்7, கேலக்ஸி டேப் 7 ப்ளஸ் விவரக்குறிப்புகள்

சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்7, கேலக்ஸி டேப் 7 ப்ளஸ் விவரக்குறிப்புகள்

சாம்சங் கேலக்ஸி டேப் எஸ் 7 11 அங்குல எல்சிடி டிஸ்ப்ளே 2560 x 1600 பிக்சல்கள் திரை தெளிவுத்திறனுடன் வருகிறது. 274 பிபிஐ பிக்சல்கள் அடர்த்தி மற்றும் 500 நிட்ஸ் உச்ச பிரகாசத்துடன் வருகிறது.

முழு ஹெச்டி ப்ளஸ் சூப்பர் அமோலெட் டிஸ்ப்ளே

முழு ஹெச்டி ப்ளஸ் சூப்பர் அமோலெட் டிஸ்ப்ளே

கேலக்ஸி டேப் எஸ் 7 ப்ளஸ் 12.4 அங்குல முழு ஹெச்டி ப்ளஸ் சூப்பர் அமோலெட் டிஸ்ப்ளே 2800 x 1700 287 பிபிஐ பிக்சல் அடர்த்தி, 420 நிட்ஸ் பீக் பிரைட்னெஸ் மற்றும் 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு தெளிவுத்திறனுடன் வருகிறது. கேலக்ஸி டேப் எஸ் 7 பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சாருடன் வருகிறது, கேலக்ஸி டேப் எஸ் 7 ப்ளஸ் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் மூலம் வருகிறது.

குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 ப்ளஸ்

குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 ப்ளஸ்

இந்த இரண்டு டேப்லெட்களும் அட்ரினோ 650 ஜிபியு உடன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 ப்ளஸ் செயலி மூலம் இயக்கப்படுகின்றன. மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் மூலமாக 1 டிபி வரை சேமிப்பகத்தை விரிவுப்படுத்த அனுமதிக்கிறது.

டேப்லெட்கள் எஸ் பென்கள்

டேப்லெட்கள் எஸ் பென்கள்

டேப்லெட்கள் எஸ் பென்னுடன் வருகிறது. இது 9 மில்லி விநாடி தாமதத்திலேயே பதிவாகும். இந்த இரண்டு டேப்லெட்களும் ஆண்ட்ராய்டு 10 இல் ஒன்யூஐ 2.0 உடன் இயங்குகின்றன.

கேமரா விவரங்கள்

கேமரா விவரங்கள்

கேமராவை பொருத்தவரை முன்புறத்தில் கேலக்ஸி எஸ் 7 மற்றும் கேலக்ஸி எஸ்7 ப்ளஸ் ஆகியவை 13 மெகா பிக்சல் பிரைமரி கேமரா, 5 மெகா பிக்சல் இரண்டாவது கேமரா என இரட்டை கேமரா வடிவமைப்பை கொண்டுள்ளது. இந்த கேமரா அமைப்பானது எல்இடி பிளாஷ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. அதோடு 8 மெகாபிக்சல் செல்பி கேமரா ஆதரவும் இதில் உள்ளது.

10090 எம்ஏஹெச் பேட்டரி

10090 எம்ஏஹெச் பேட்டரி

கேலக்ஸி டேப் எஸ் 7 7040 எம்ஏஹெச் பேட்டரியுடனும் கேலக்ஸி எஸ் 7 ப்ளஸ் 10090 எம்ஏஹெச் பேட்டரியுடனும் வருகிறது. 45 வாட்ஸ் வரை வேகமான சார்ஜிங் அம்சம் இதில் இணைக்கப்பட்டுள்ளது. ஆடியோவைப் பொறுத்தவரை நான்கு ஸ்பீக்கர்கள் ஏகேஜி மற்றும் டோல்பை ஆட்மாஸ் தெளிவுத்திறன் இதில் உள்ளது.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy Tab S7 and Samsung Galaxy Tab S7+ tablets Launched with S Pen 11 Inch display

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X