Home
News

இந்திய சந்தைக்கு வந்த சாம்சங் கேலக்ஸி டேப் எஸ் 7, எஸ்7+: விற்பனை தேதி, சலுகை விவரம்!

சாம்சங் கேலக்ஸி டேப் எஸ் 7, சாம்சங் கேலக்ஸி டேப் எஸ் 7 + இரட்டை பின்புற கேமராக்கள், எஸ் பென் ஆதரவுடன் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்7 சீரிஸ் ஆனது செப்டம்பர் 7 ஆம் தேதி முதல் இந்தியாவில் விற்பனைக்கு வர உள்ளது.

கேலக்ஸி டேப் எஸ் 7, டேப் எஸ் 7 ப்ளஸ்

கேலக்ஸி டேப் எஸ் 7, டேப் எஸ் 7 ப்ளஸ்

சாம்சங் கேலக்ஸி டேப் எஸ் 7, டேப் எஸ் 7 ப்ளஸ் இதுவரை இல்லாத வகையிலான சக்தி வாய்ந்த ஆண்ட்ராய்டு டேப்லெட்டுகளாக இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்த இரண்டு மாடல்களும் ஒரே மாதிரியான வடிவமைப்பு மற்றும் புதிய எஸ்-பேனாவுடன் அறிமுகமாகியுள்ளன. சாம்சங் கேலக்ஸி எஸ் 7 டேப் 11 இன்ச் டிஸ்ப்ளேயுடன் வருகிறது. அடுத்ததாக சாம்சங் கேலக்ஸி எஸ் 7 ப்ளஸ் 12.9 இன்ச் டிஸ்ப்ளே இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

11 இன்ச் எல்சிடி டிஸ்ப்ளே

11 இன்ச் எல்சிடி டிஸ்ப்ளே

சாம்சங் கேலக்ஸி டேப் எஸ் 7, 11 இன்ச் எல்சிடி டிஸ்ப்ளே 2560 x 1600 பிக்சல் தெளிவுத்திறனுடன் அறிமுகமாகியுள்ளது. அதோடு 274 பிபிஐ பிக்சல் அடர்த்தி மற்றும் 500 நிட்ஸ் பீக் பிரைட்னெஸ் அம்சத்துடன் உள்ளது.

கேலக்ஸி டேப் எஸ் 7 128 ஜிபி ஸ்டோரேஜ்

கேலக்ஸி டேப் எஸ் 7 128 ஜிபி ஸ்டோரேஜ்

சாம்சங் கேலக்ஸி டேப் எஸ் 7 128 ஜிபி ஸ்டோரேஜ் வைஃபை ஒன்லி வேரியண்ட் விலை ரூ.55,999 ஆகவும், 128 ஜிபி ஸ்டோரேஜ் 4ஜி வேரியண்ட் விலை எல்டிஇ விலை ரூ.63,999 ஆகவும் உள்ளது. கேலக்ஸி டேப் எஸ்7 ப்ளஸ் 4ஜி வேரியண்ட் விலை ரூ.79,999 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த டேப் மிஸ்ட்ரிக் ப்ளாக், மிஸ்டிக் ப்ரான்ஜ், மிஸ்டிக் சில்வர் வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது.

டேப் எஸ் 7: முன்பதிவு சலுகைகள்

டேப் எஸ் 7: முன்பதிவு சலுகைகள்

கேலக்ஸி டேப் எஸ் 7 ஐ முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்கள் கீபோர்ட் கவரை ரூ.10,000 தள்ளுபடி விலையில் பெற முடியும். இதன் விலை வழக்கமான ரூ.15,999 ஆகும். கூடுதலாக, எச்.டி.எஃப்.சி கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு வாடிக்கையாளர்கள் ரூ .5 ஆயிரம் வரை கேஷ்பேக் பெற தகுதியுடையவர்கள்.

டேப் எஸ் 7 +: முன்பதிவு சலுகைகள்

டேப் எஸ் 7 +: முன்பதிவு சலுகைகள்

கேலக்ஸி டேப் எஸ் 7 + ஐ முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்கள் கீபோர்ட் கார்டை ரூ .10,000 தள்ளுபடி விலையில் பெற முடியும். இதன் கீபோரட் கார்ட் விலை ரூ.17,999 ஆகும். எச்.டி.எஃப்.சி வங்கி அட்டை உரிமையாளர்களுக்கு ரூ.6,000 வரை கூடுதல் கேஷ்பேக் கிடைக்கும்.

விற்பனை விவரங்கள்

விற்பனை விவரங்கள்

இரு சாதனங்களும் ஆகஸ்ட் 26 முதல் முன்பதிவு செய்யப்படும் என கூறப்படுகிறது. கேலக்ஸி டேப் எஸ் 7 வைஃபை மாறுபாட்டுடன் ரிலையன்ஸ் சில்லறை மற்றும் சாம்சங் கடை வழியாக கிடைக்கிறது. எல்.டி.இ ஆகிய இரு வகைகளும் சாம்சங் கடை, அமேசான், பிளிப்கார்ட் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட சில்லறை விற்பனை நிலையங்கள் மூலம் விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

டேப் எஸ்7, டேப் 7 ப்ளஸ் விவரக்குறிப்புகள்

டேப் எஸ்7, டேப் 7 ப்ளஸ் விவரக்குறிப்புகள்

சாம்சங் கேலக்ஸி டேப் எஸ் 7 11 அங்குல எல்சிடி டிஸ்ப்ளே 2560 x 1600 பிக்சல்கள் திரை தெளிவுத்திறனுடன் வருகிறது. 274 பிபிஐ பிக்சல்கள் அடர்த்தி மற்றும் 500 நிட்ஸ் உச்ச பிரகாசத்துடன் வருகிறது.

12.4 அங்குல முழு ஹெச்டி ப்ளஸ்

12.4 அங்குல முழு ஹெச்டி ப்ளஸ்

கேலக்ஸி டேப் எஸ் 7 ப்ளஸ் 12.4 அங்குல முழு ஹெச்டி ப்ளஸ் சூப்பர் அமோலெட் டிஸ்ப்ளே 2800 x 1700 287 பிபிஐ பிக்சல் அடர்த்தி, 420 நிட்ஸ் பீக் பிரைட்னெஸ் மற்றும் 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு தெளிவுத்திறனுடன் வருகிறது. கேலக்ஸி டேப் எஸ் 7 பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சாருடன் வருகிறது, கேலக்ஸி டேப் எஸ் 7 ப்ளஸ் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் மூலம் வருகிறது.

கேமரா விவரங்கள்

கேமரா விவரங்கள்

கேமராவை பொருத்தவரை முன்புறத்தில் கேலக்ஸி எஸ் 7 மற்றும் கேலக்ஸி எஸ்7 ப்ளஸ் ஆகியவை 13 மெகா பிக்சல் பிரைமரி கேமரா, 5 மெகா பிக்சல் இரண்டாவது கேமரா என இரட்டை கேமரா வடிவமைப்பை கொண்டுள்ளது. இந்த கேமரா அமைப்பானது எல்இடி பிளாஷ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. அதோடு 8 மெகாபிக்சல் செல்பி கேமரா ஆதரவும் இதில் உள்ளது.

10090 எம்ஏஹெச் பேட்டரி

10090 எம்ஏஹெச் பேட்டரி

கேலக்ஸி டேப் எஸ் 7 7040 எம்ஏஹெச் பேட்டரியுடனும் கேலக்ஸி எஸ் 7 ப்ளஸ் 10090 எம்ஏஹெச் பேட்டரியுடனும் வருகிறது. 45 வாட்ஸ் வரை வேகமான சார்ஜிங் அம்சம் இதில் இணைக்கப்பட்டுள்ளது. ஆடியோவைப் பொறுத்தவரை நான்கு ஸ்பீக்கர்கள் ஏகேஜி மற்றும் டோல்பை ஆட்மாஸ் தெளிவுத்திறன் இதில் உள்ளது.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy Tab S7 and Samsung Galaxy Tab S7+ tablets Launched in India with S Pen 11 Inch display
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X