Apple-ஐ வெளுத்துவிட்ட Samsung.. 10090mAh பேட்டரி, 13-இன்ச் டிஸ்பிளே, 12GB ரேம், 5ஜி டேப்லெட்.. என்ன விலை?
ஆப்பிள் (Apple) நிறுவனத்தின் மேல் மற்ற அப்படி என்ன கோபம் என்றே தெரியவில்லை. ஆப்பிள் அதன் ஐபேட் 2025 மாடல்களை அறிமுகம் செய்த வேகத்தில் ஷாவ்மீ (Xiaomi), விவோ (Vivo) மற்றும் ஒப்போ (Oppo) ஆகிய நிறுவனங்கள் தத்தம் புதிய டேப்லெட்கள் போட்டிக்கு களமிறங்கின.
விவோ நிறுவனம் அதன் விவோ பேட் 4 ப்ரோ (Vivo Pad 4 Pro) மாடலையும், ஒப்போ நிறுவனம் அதன் ஒப்போ பேட் 4 ப்ரோ ( Oppo Pad 4 Pro) மாடலையும் மற்றும் ஷாவ்மீ நிறுவனம் அதன் ஷாவ்மீ பேட் 7எஸ் ப்ரோ (Xiaomi Pad 7s Pro) மாடலையும் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளன. இந்த பட்டியலில் சாம்சங்கும் சேர்ந்துள்ளது.

சாம்சங் நிறுவனம் அதன் புதிய கேலக்ஸி டேப் எஸ்10 எப்இ (Samsung Galaxy Tab S10 FE) மற்றும் கேலக்ஸி டேப் எஸ்10 எப்இ பிளஸ் (Samsung Galaxy Tab S10 FE Plus) டேப்லெட்களை அறிமுகப்படுத்த தயாராகி வருவதாக கூறப்படுகிறது. இவ்விரண்டுமே அடுத்த 2 வாரங்களுக்குள் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கேலக்ஸி டேப் எஸ்10 எப்இ, கேலக்ஸி டேப் எஸ்10 எப்இ பிளஸ் மாடல்களில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்?
- இரண்டும் ஐபி68 தூசி மற்றும் நீர் எதிர்ப்பை கொண்ட அலுமினிய பாடியை பெறலாம்
- இரண்டும் எக்ஸினோஸ் 1580 சிப்செட்டால் இயக்கப்படலாம்
- இரண்டும் எக்ஸ்பேன்டபிள் ஸ்டோரேஜ் உடன் வரலாம்
- பி வைஃபை 6இ, என்எப்சி, ப்ளூடூத் 5.3 மற்றும் ஆப்ஷனல் 5ஜி ஆதரவுடன் வரலாம்
- எப்இ மாடலில் 90ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 2304 x 1440 பிக்சல்ஸ் மற்றும் எஸ் பென் ஆதரவுடன் 10.9-இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே பேக் செய்யப்படலாம்
- 8000mAh பேட்டரியை கொண்டிருக்கலாம்
- 45W பாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கலா
- 13MP ரியர் கேமரா மற்றும் 12MP செல்பீ கேமரா
- எப்இ பிளஸ் மாடலில் 90ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 2880 x 1800 பிக்சல்ஸ் மற்றும் எஸ் பென் ஆதரவுடன் 13.1-இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே பேக் செய்யப்படலாம்
- 10.090mAh பேட்டரியை கொண்டிருக்கலாம்
- 45W பாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கலா
- 13MP ரியர் கேமரா மற்றும் 12MP செல்பீ கேமரா
சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்10 எப்இ என்ன விலைக்கு வரும்?
வைஃபை ஒன்லி 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் - ரூ.54,400
வைஃபை ஒன்லி 12ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் - ரூ.63,700
5ஜி சப்போர்ட் 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் - ரூ.63,700
5ஜி சப்போர்ட் 12ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் - ரூ.73,100
சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்10 பிளஸ் எப்இ என்ன விலைக்கு வரும்?
வைஃபை ஒன்லி 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் - ரூ.70,200
வைஃபை ஒன்லி 12ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் - ரூ.79,600
5ஜி சப்போர்ட் 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் - ரூ.79,600
5ஜி சப்போர்ட் 12ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் - ரூ.89,000
விவோ பேட் 4 ப்ரோ டேப்லெட் ஆனது ஒப்போ பேட் 4 ப்ரோ ( Oppo Pad 4 Pro) மற்றும் சியோமி பேட் 7எஸ் ப்ரோ (Xiaomi Pad 7s Pro) ஆகிய மாடல்களுடன் கடுமையாக போட்டி போடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விவோ பேட் 4 ப்ரோ டேப்லெட்டை போலவே, ஒப்போ பேட் 4 ப்ரோ மற்றும் சியோமி பேட் 7எஸ் ப்ரோ ஆகிய இரண்டும் ஏப்ரல் மாதத்தில் சீனாவில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








