Home
News

சாம்சங் கேலக்ஸி டேப் ஏ 10.1 மற்றும் கேலக்ஸி டேப் ஏ8 சாதனங்களுக்கு விலைகுறைப்பு.!

அண்மையில் வெளிவந்த தகவலின்படி சாம்சங் கேலக்ஸி டேப் ஏ 10.1, கேலக்ஸி டேப் ஏ8, சாம்சங் கேலக்ஸி வாட்ச் 3 போன்ற சாதனங்களுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விலைகுறைப்பு தகவலை மும்பையைச் சேர்ந்த சில்லறை விற்பனையாளர் மகேஷ் டெலிகாம் ட்விட்டரில் தெரிவித்துள்ளது.

விலைகுறைப்பு

விலைகுறைப்பு

அதன்படி விலைகுறைப்புக்கு பின் சாம்சங் கேலக்ஸி டேப் ஏ 10.1 சாதனம் ஆனது இப்போது ரூ.12,999-க்கு வாங்க கிடைக்கும். பின்பு சாம்சங் கேலக்ஸி டேப் ஏ8 சாதனம் ஆனது ரூ.7,999-க்கு வாங்க கிடைக்கும். கடைசியாக சாம்சங் கேலக்ஸி வாட்ச் 3 மாடல் ரூ.29,990-க்கு வாங்க கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

 கேலக்ஸி டேப் ஏ 10.1 டிஸ்பிளே

கேலக்ஸி டேப் ஏ 10.1 டிஸ்பிளே

கேலக்ஸி டேப் ஏ 10.1 சாதனம் பொதுவாக 10.1-இன்ச் டிஎப்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 1920x1200 பிக்சல்
திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு இந்த சாதனம் வெளிவந்துள்ளது.

கேலக்ஸி டேப் ஏ 10.1 கேமரா

கேலக்ஸி டேப் ஏ 10.1 கேமரா

கேலக்ஸி டேப் ஏ 10.1 சாதனத்தில் எக்ஸிநோஸ் 7904எஸ்ஒசி சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு 2ஜிபி ரேம் மற்றும' 32ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவு கொண்டு இந்த டேப்லெட் மாடல் வெளிவந்துள்ளது. இந்த டேப்லெட் மாடலில் 8எம்பி ரியர் கேமரா மற்றும் 5எம்பி செல்பீ கேமரா இடம்பெற்றுள்ளது. பின்பு 6150எம்ஏஎச் பேட்டரி மற்றும் வைஃபை, ஜிபிஎஸ், மைக்ரோ யுஎஸ்பி போர்ட் போன்ற பல்வேறு இணைப்புஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

 சாம்சங் கேலக்ஸி வாட்ச் 3 அம்சங்கள்

சாம்சங் கேலக்ஸி வாட்ச் 3 அம்சங்கள்

சாம்சங் கேலக்ஸி வாட்ச் 3 ஆனது 1.3-இன்ச் டிஸ்பிளே மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் வெளிவந்துள்ளது. மேலும் 1.16ஜிகாஹெர்ட்ஸ் பிராசஸர் வசதி கொண்டு இந்த சாதனம் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். பின்பு 1ஜிபி ரேம் மற்று 8ஜிபி ரோம் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட் வாட்ச் மாடல்.

சாம்சங் கேலக்ஸி டேப் ஏ8 அம்சங்கள்

சாம்சங் கேலக்ஸி டேப் ஏ8 அம்சங்கள்

சாம்சங் கேலக்ஸி டேப் ஏ8 சாதனம் ஆனது 8-இன்ச் WXGA டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 1280 x 800 பிக்சல் தீர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த டேப்லெட் மாடல். மேலும் 8எம்பி ரியர் கேமரா மற்றும் 2எம்பி செல்பீ கேமரா இவற்றுள் அடக்கம். குறிப்பாக 2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி வசதியைக் கொண்டுள்ளது இந்த சாதனம்.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy Tab A 10.1, Galaxy Tab A8 Price Slashed in India: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X