Home
News

கேலக்ஸி எஸ்9 சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் மைக்ரோசாஃப்ட் எடிஷன் அறிமுகம்.!

கேலக்ஸி எஸ்9 ஸ்மார்ட்போனின் பின்புறம் 12எம்பி வைட்-ஆங்கில் கேமரா இடம்பெற்றுள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்போனின் கேமரா 720 பிக்சல் தீர்மானம் கொண்டவையாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கதது.

By Prakash S

தற்சமயம் மைக்ரோசாஃப்ட் ஸ்டோரில் கஸ்டமைஸ் செய்யப்பட்ட சாம்சங் கேலக்ஸி எஸ்9 சீரிஸ் சாதனங்களின் விற்பனை துவங்கியுள்ளது. அதன்பின்பு கேலக்ஸி எஸ்9 மற்றும் கேலக்ஸி எஸ்9 பிளஸ் ஸ்மார்ட்போன்களில் மைக்ரோசாஃப்ட் எடிஷன் மாடலில் கார்டனா, ஒன் நோட், எக்செல், ஸ்கைப், பவர்பாயின்ட், வொர்டு, மைக்ரோசாஃப்ட் லான்ச்சர் போன்ற பல்வேநு செயலிகளை பயன்படுத்தும் வசதி வழங்கப்பட்டுள்ளது.

கேலக்ஸி எஸ்9 சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் மைக்ரோசாஃப்ட் எடிஷன் அறிமுகம்.

மேலும் கேலக்ஸி எஸ்9 சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் தோற்றம் மற்றும் சிறப்பம்சங்களில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பின்பு மைக்ரோசாஃப்ட் எடிஷன் கேலக்ஸி எஸ்9 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை வாங்க விரும்பு பயனர்கள் இப்போது எளிமையாக முன்பதிவு செய்ய முடியும். பின்னர் இதன் விநியோகம் மார்ச் 16-ம் தேதி துவங்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேலக்ஸி எஸ்9 பிளஸ் :

கேலக்ஸி எஸ்9 பிளஸ் :

கேலக்ஸி எஸ்9 பிளஸ் ஸ்மார்ட்போனின் பின்புறம் 12எம்பி+ 12எம்பி டூயல் ரியர் கேமரா வசதி இடம்பெற்றுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ள டூயல் கேமரா வசதி வைட்-ஆங்கில் கேமராவை விட துள்ளியமாக வீடியோ மற்றும் புகைப்படத்தை எடுக்கும் திறமைக் கொண்டுள்ளது. "லைவ் ஃபோகஸ்" மற்றும் இந்தஸ்மார்ட்போனில் உள்ள முன்புற கேமராவில் ஆட்டோஃபோகஸ் அம்சங்கள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் செல்பீ கேமரா 8மெகாபிக்சல் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 கேலக்ஸி எஸ்9:

கேலக்ஸி எஸ்9:

கேலக்ஸி எஸ்9 ஸ்மார்ட்போனின் பின்புறம் 12எம்பி வைட்-ஆங்கில் கேமரா இடம்பெற்றுள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்போனின் கேமரா 720 பிக்சல் தீர்மானம் கொண்டவையாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கதது. இவற்றில் உள்ள ஆட்டோஃபோகஸ் தொழில்நுட்பம் வேகமாகவும் மற்றும் அதிக நம்பகமான செயல்திறன் கொண்டவை என்பது குறிப்பித்தக்கது.

கேமரா ஆப்:

கேமரா ஆப்:

கேலக்ஸி எஸ்9 சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் உள்ள கேமரா ஆப் பயன்பாடானது அதன் பல்வேறு முறைகள் விரைவான அணுகலுடன் மறுவடிவமைப்பு செய்யப்பட்டு, ஐபோனின் கேமரா பயன்பாடு எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் பொறுத்து, அவற்றுக்கிடையே ஸ்வைப் செய்வதன் மூலம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஸ்னாப்டிராகன் 845 :

ஸ்னாப்டிராகன் 845 :

கேலக்ஸி எஸ்9 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 செயலியைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 4ஜிபி ரேம் அமைப்பைக் கொண்டுள்ளது இந்த கேலக்ஸி எஸ்9 ஸ்மார்ட்போன். 6ஜிபி ரேம் அம்சங்களுடன் வெளிவரும் கேலக்ஸி எஸ்9 பிளஸ் ஸ்மார்ட்போன் மாடல். மேலும் இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் 64ஜிபி உள்ளடக்க மெமரி இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

டிஸ்பிளே:

டிஸ்பிளே:

கேலக்ஸி எஸ்9 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 5.8-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு எஸ்9 ப்ளஸ் ஸ்மார்ட்போன் 6.2-இன்ச் டிஸ்பிளேவுடன் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கேலக்ஸி எஸ்9 பிளஸ் ஸ்மார்ட்போனில் 2960 - 1440 பிக்சல் தீர்மானம் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

How to download Movies in your Mobile (GIZBOT TAMIL)
பேட்டரி :

பேட்டரி :

கேலக்ஸி எஸ்9 சாதனத்தில் 3000எம்ஏஎச் பேட்டரி இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு கேலக்ஸி எஸ்9 ப்ளஸ் ஸ்மார்ட்போனில் 3500எம்ஏஎச் பேட்டரி இடம்பெற்றுள்ளது.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy S9 Galaxy S9plus Microsoft Edition Now Available for Pre Orders ; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X