கேலக்ஸி எஸ்9 சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் டீசர் வெளியானது.!
கேலக்ஸி எஸ்9 ப்ளஸ் ஸ்மார்ட்போனின் பின்புறம் 12எம்பி+ 12எம்பி டூயல் ரியர் கேமரா வசதி இடம்பெற்றுள்ளது.
சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி எஸ்9 மற்றும் கேலக்ஸி எஸ்9 பிளஸ் ஸ்மார்ட்போன்களின் முழு விவரங்களை பிப்ரவரி 25-ம் தேதி அறிவிக்கும். தற்சமயம் கேலக்ஸி எஸ்9 சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் டீசர் வெளிவந்த வண்ணம் உள்ளது.

சாம்சங் இப்போது வெளியிட்டுள்ள டீசரில் கேலக்ஸி எஸ்9 சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் 3டி எமோஜி, குறைந்த வெளிச்சத்திலும் தலைசிறந்த புகைப்படங்களை எடுக்கும் வசதி போன்ற பல்வேறு அம்சங்கள் இவற்றள் இடம்பெற்றுள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
கேலக்ஸி எஸ்9 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 5.8-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு எஸ்9 ப்ளஸ் ஸ்மார்ட்போன் 6.2-இன்ச் டிஸ்பிளேவுடன் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த இரண்டு ஸ்மார்ட்போன் சாதனங்களும் எக்ஸிநோஸ் 9810 எஸ்ஒசி கொண்டும் சில சந்தைகளில் ஸ்னாப்டிராகன் 845 எஸ்ஒசி கொண்டும் வெளியிடப்படும் எனத் தெரிவிக்ப்பட்டுள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த சாதனங்கள் வெளிவரும்.
முந்தைய தகவலின் அடிப்படையில் கேலக்ஸி எஸ்9 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் மிட்நைட் பிளாக், டைட்டானியம் கிரே மற்றும் கோரல் ப்ளூ போன்ற நிறங்களுடன் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கேலக்ஸி எஸ்9 சாதனத்தில் 3000எம்ஏஎச் பேட்டரி இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு கேலக்ஸி எஸ்9 ப்ளஸ் ஸ்மார்ட்போனில் 3500எம்ஏஎச் பேட்டரி இடம்பெற்றுள்ளது.

இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, டூயல்-சிம் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.
கேலக்ஸி எஸ்9 ப்ளஸ் ஸ்மார்ட்போனின் பின்புறம் 12எம்பி+ 12எம்பி டூயல் ரியர் கேமரா வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் கேலக்ஸி எஸ்9 ஸ்மார்ட்போனின் பின்புறம் 12எம்பி வைட்-ஆங்கில் கேமரா இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் கூட இரண்டு கருவிகளுமே எப்/1.5 முதல்எப்/2.4 வரையிலான துளையுடனேயே வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தற்சமயம் வெளிவந்த அதிவேக டீசர் வீடியோவை பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications