Subscribe to Gizbot

சாம்சங் கேலக்ஸி எஸ்9 கத்திரிப்பூ நிறத்தில் வெளி வருகிறதா?

Posted By: Jijo Gilbert

கடந்த சில வாரங்களாக மிகவும் சுவாரஸ்யமாக போகிறது. ஏனெனில் ஒன்பிளஸ் 5டி உட்பட பல ஸ்மார்ட்போன்களின் அறிமுகம் மட்டுமின்றி, 2018 ஆண்டு வெளியாக உள்ள ஒரு ஸ்மார்ட்போனைப் பற்றி அதிகமாக கேட்க முடிகிறது.

சாம்சங் கேலக்ஸி எஸ்9 கத்திரிப்பூ நிறத்தில் வெளி வருகிறதா?

அது வேறு எதுவும் அல்ல, தென் கொரிய தயாரிப்பாளரான சாம்சங் நிறுவனத்தின் முக்கியத்துவம் வாய்ந்த ஸ்மார்ட்போன்களான கேலக்ஸி எஸ்9 மற்றும் எஸ்9+ ஆகியவைப் பற்றி பல வதந்திகளைக் கேட்கவும் பல கசிந்த படங்களைப் பார்க்கவும் முடிகிறது.

இந்த ஸ்மார்ட்போன்களை இந்நிறுவனம் விரைவில் வெளியிடப் போவதாகவும் மேற்கூறிய வதந்திகள் தெரிவித்து வருவது, ஒரு சுவாரஸ்சியமான ஒன்றாகும். மேலும் இந்த ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் அடுத்தாண்டு ஜனவரியில் நடைபெறும் நுகர்வோர் எலக்ட்ரானிக்ஸ் ஷோவில் (சிஇஎஸ்) அல்லது 2018 மார்ச் மாதம் நடைபெறும் எம்டபில்யூசி 2018-க்கு முன்னாக பிப்ரவரியில் இருக்கலாம் என்று அந்த செய்திகள் தெரிவிக்கின்றன.

ஜன.19 முதல் நோக்கியாவின் இரண்டாம் தலைமுறை ஸ்மார்ட்போன்கள்.!

முன்னதாக, சாம்சங் நிறுவனத்தின் அடுத்த தலைமுறையைச் சேர்ந்த எக்ஸிநோஸ் 9810 ப்ராசஸர் அல்லது குவால்கம் ஸ்னாப்டிராகன் 845 ஆகியவற்றால், கேலக்ஸி எஸ்9 செயலாற்றப்பட வாய்ப்புள்ளதாக, அந்த வதந்திகள் தெரிவித்து வந்தன. இந்த ஸ்மார்ட்போனை 4ஜிபி அல்லது 6ஜிபி அளவு ரேம் கொண்டதாகவும் ஒரு இரட்டை-லென்ஸ் பின்பக்க கேமராவை பெற்று, தனது முன்னோடிகளை விட கூடுதல் மதிப்பு கொண்டவையாக இருக்கும்.

மேலும், இதில் ஒரு முகம் அடையாளங்காட்டி அம்சமும், ஒரு மாற்றியமைக்கக் கூடிய எப்/1.5 அப்பர்ச்சுர் கேமரா கொண்டு, 64ஜிபி உள்ளக நினைவகமும், அதை ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு மூலம் விரிவாக்கவும் முடியும்.

மேற்கூறிய இந்தத் தகவல்கள் அனைத்தும் ஊகமாக உலா வரும் நிலையில், தற்போது ஒரு புதிய வதந்தி பரவி வருகிறது. இதிலிருந்து சாம்சங் நிறுவனம் இந்த புதிய ஸ்மார்ட்போனை கத்திரிப்பூ நிறத்தில் வெளியிடப் போவதாக நாங்கள் கேள்விப்படுகிறோம்.

சாம்மொபைலுக்கு கிடைத்த சில தகவல்களின்படி, தற்போதுள்ள தங்கம், கருப்பு மற்றும் நீல நிறங்களுடன் அடுத்த ஆண்டில் இருந்து கத்தரிப்பூ நிறமும் சேர்த்துக் கொள்ளப்படும் என்று கூறப்படுகிறது. மேலும் உலகின் எல்லா முன்னணி சந்தைகளிலும் அதிகாரப்பூர்வமான அறிமுகத்திற்கு பிறகு, இந்த நான்கு நிறங்களின் தேர்வுகளும் கிடைக்கப் பெறும் என்று அந்த வெளியிட்டாளர் தெரிவித்துள்ளார்.

இந்த புதிய நிறத் தேர்வு மூலம் வாடிக்கையாளர்களுக்கு அதிக தேர்வை அளிக்க முடியும் என்றாலும், அது எந்த அளவிற்கு சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இந்த மாற்றத்திற்கு மக்கள் இடையே எந்த அளவிற்கு வரவேற்பு இருக்கும் என்பதும் பார்க்க சுவாரஸ்யமான ஒன்றாகும்.

கடந்த ஆண்டு சாம்சங் கேலக்சி எஸ்8 வெளியாகும் முன் இதே நிறத்தை பற்றிய வதந்தி வெளியானது. ஆனால் கடைசியில் அப்படி ஒரு காரியம் நடைபெறவே இல்லை. இது குறித்து சாம்சங் நிறுவனத்திடம் இருந்து எந்த அதிகாரபூர்வமான உறுதியும் அளிக்கப்படாத நிலையில், இப்போதைக்கு இதை ஒரு புல்லின் மேல் விழுந்த பனி என்பதாக எடுத்து கொள்வது நல்லது.

Read more about:
English summary
Samsung could be bringing the purple color option for the Galaxy S9 next year, in addition to black, gold, and blue.

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot