"மொட்டையாக" இருக்கும் சாம்சங் கேலக்ஸி எஸ்8, என்ன ஆச்சோ.?!

சாம்சங் கேலக்சி எஸ்8 கருவி சார்ந்த லீக்ஸ் புகைப்பட தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

|

2017-ஆம் ஆண்டு சாம்சங் மொபைல் நிறுவனத்திற்கு ஒரு மிக முக்கியமான ஆண்டாக இருக்க போகிறது. கேலக்ஸி நோட் 7 தோல்வி காரணமாக கெட்டுப்போன தனது பிராண்ட் பெயரை எம்மாதிரியான சக்திவாய்ந்த கருவியை அறிமுகம் செய்வதின் மூலம் அவப்பெயரில் இருந்து மீண்டு வரும் என்று சாம்சங் பிரியர்களுடன் சேர்த்து நாம் அனைவருமே காத்திருக்கிறோம்.

அப்படியான எதிர்பார்பிம் முதல் நாள் இன்று எனக்கூறலாம் அதாவது கேலக்ஸி எஸ்8 கருவி சார்ந்த முதல் கசிவு புகைப்படம் இப்போது வெளியாகியுள்ளது. ஸ்லாஸ்லீக்ஸ்.காம் மூலம் வெளியிடப்பட்டுள்ள இக்கருவி சார்ந்து அறிய வந்துள்ள தகவல்கள் இதோ.!

குரோம் தங்க பூச்சு

குரோம் தங்க பூச்சு

வெளியாகியுள்ள லீக்ஸ் புகைப்படத்தின் முதல் பார்வையிலேயே எஸ்8 கருவி தற்போதுள்ள கேலக்ஸி எஸ்7 எட்ஜ் கருவி போன்றே ஒரு குரோம் தங்க பூச்சு கொண்டுள்ளதை காட்டுகிறது. இந்த படம் விபோ மூலம் வெளியாகியிருக்கலாம் என்றும் சீனாவில் சோதனையின் கீழ் இக்கருவி இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

முன்பக்கம்

முன்பக்கம்

இன்னும் நெருக்கமாக பார்த்தால் டிஸ்ப்ளே ஆனது மிகப்பெரிய அளவில் படர்ந்து முன்பக்கம் முழுவதையும் ஆக்கிரமித்துக் கொண்டுள்ளதை காணலாம்.

ஹோம்/ நேவிகேஷன் கீ

ஹோம்/ நேவிகேஷன் கீ

எஸ்7 எட்ஜ் கருவி போன்றே டூவல் எட்ஜ்ஸ் கொண்டிருந்தாலும் மேல் மற்றும் கீழ் பெசல்களில் ஒரு பெரிய வித்தியாசத்தை காணமுடிகிறது அதாவது வழக்கமான ஹோம் பொத்தான் இடமில்லை/ காணவில்லை. அதுமட்டின்றி மற்றொரு விவரமும் காணவில்லை அதாவது நேவிகேஷன் விசைகளுக்கும் இடமளிக்கப்படவில்லை.

மீயொலி கைரேகை ரீடர்

மீயொலி கைரேகை ரீடர்

கருவியின் மேல் இறுதி எஸ்7 எட்ஜ் மாதிரியான வடிவத்தில் தெரிகிற போது, கீழ் இறுதியில் வெறுமனே சாம்சங் லோகோவை மட்டுமே லீக்ஸ் புகைப்படம் காட்டுகிறது. ஒருவேளை இந்த புகைப்படம் போலியானது இல்லையெனில் சாம்சங் அதன் முகவாய் பகுதியில் லோகோ விற்கு கீழே ஒரு மீயொலி கைரேகை ரீடர் வைக்க வாய்ப்புண்டு.

லைட் அப் ஆன் டச்

லைட் அப் ஆன் டச்

நேவிகேஷன் கீகளும் ஒரு மென்பொருள் அளவில் மறைத்து வைக்கபட்டிருக்கலாம் அதாவது சாம்சங் கிரேஸ் யூஎக்ஸ் அல்லது வெறுமனே சாம்சங் லோகோவின் லைட் அப் ஆன் டச் ஆகிய இரண்டில் ஒருவழிமுறை கொண்டு மறைத்து வைக்கப்பட்டு இருக்கலாம்.

இரட்டை கேமரா

இரட்டை கேமரா

மறுபக்கம் சாதாரண பார்வைக்கு தெரியும் கைரேகை ரீடர் இல்லாமல் சாம்சங் நிறுவனம் அதற்கு ஒரு மறுவடிவம் கொடுத்து நாம் அனைவரும் எதிர்பார்க்காத ஒரு மேம்படுத்தலை வழங்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது கருவியின் பின்னால் மறைத்து வைக்கப்பட்ட ஒரு இரட்டை கேமரா இருக்க முடியும், ஆனால் இந்த கட்டத்தில் இந்த கருவியில் இது சுவையற்ற ஒன்றாகவே தெரிகிறது.

கவர்ச்சியான தொழில்நுட்பம்

கவர்ச்சியான தொழில்நுட்பம்

மிகவும் "மொட்டையாக" காட்சியளிக்கும் இந்த லீக்ஸ் புகைப்படம் பெரும்பாலும் போலியான ஒன்றாக இருக்க வேண்டும் மற்றும் ஆப்பிள் அதன் பத்தாம் ஆண்டு நிறைவையொட்டி பல கவர்ச்சியான தொழில்நுட்பங்களை புகுத்தும் அதற்கு ஈடுகொடுக்கும் அளவு சாம்சங் கேலக்சி எஸ்8 கருவி இருக்க வேண்டும் என்பதே பலரின் எண்ணமாக இருக்கிறது. பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

மேலும் படிக்க

மேலும் படிக்க

இரட்டை 12 எம்பி கேமரா, 5000எம்ஏஎச் பேட்டரி - அசுஸ் சென்போன் 3 ஸூம்.!

Best Mobiles in India

Read more about:
English summary
Samsung Galaxy S8 photo leaked; shows no visible fingerprint reader or navigation keys. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X