தங்க நிற மாறுபாட்டில் சாம்சங் கேலக்ஸி எஸ்8 - லீக்ஸ் தகவல்.!
இந்த லீக்ஸ் தகவல் கேலக்ஸி எஸ்8 எவ்வளவு அழகானதொரு கருவியாக இருக்கும் என்பதை வெளிப்படுத்துகிறது.
ஒரு லீக்ஸ் தகவலை நாம் எப்போதுமே முழுமையாக நம்பிவ விடக்கூடாது அதே சமயம் லீக்ஸ் தகவலாக வெளியானவைகள் சில சமயம் நிஜமான ஸ்மார்ட்போன் அம்சங்களை வெளியான நிகழ்வுகளையும் நாம் மறந்துவிடக்கூடாது.
அப்படியானதொரு நிலைப்பாட்டில் வெளியாகியுள்ள லீக்ஸ் தகவல் தான் இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்8 கருவியின் புகைப்படம். பகுப்பாய்விற்கு பின்னர் இது உறுதி என்ற தகவலும் கிடையாது மறுபக்கம் இதன் சட்டபூர்வ தன்மையையும் மறுக்க முடியாது.

சாம்சங் லோகோ
சரி, அதெல்லாம் ஒருபக்கம் இருக்க புதிதாக கசிந்த படத்தில் இருந்து என்னென்ன காட்சிப்படுகிறது என்பதை காண்போம். கருவியின் மேல் மற்றும் கீழ் பக்கங்கள் ஒழுங்கமைக்கபட்டுள்ளது, உடன் அதன் ஹோம் பட்டனுக்கு இடம் அளிக்கப்படவில்லை. அதற்கு பதிலாக அங்கே சாம்சங் லோகோ இடம்பெறுகிறது.

ஒவ்வொரு முறையும்
எப்போதுமே ஒரு முந்தைய கசிவுடன் சமீபத்தில் வெளியாகும் லீக்ஸ் தகவலை ஒப்பிடும் போது எந்த ஒரு நிலைத்தன்மையும் இருக்கிறது. வெளியாகும் அறிக்கைகள் ஒவ்வொரு முறையும் வெவ்வேறு மாதிரியாக இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

உயரமானதாக மற்றும் மெலிதான ஒன்றாக
அப்படியாக, இந்த ஸ்மார்ட்போன் கேலக்ஸி எஸ்7 எட்ஜ் கருவியை உயரமானதாக மற்றும் மெலிதான ஒன்றாக இருக்கும் என்பதை பார்க்க முடியாது. மற்றும் வழக்கமாக சாம்சங் லோகோவை வர்ணமிடுவதற்கு பதிலாக இம்முறை பொறிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

எது உண்மை
மேலும், இக்கருவி பயனர் இடைமுகம் கொள்ள ஆண்ட்ராய்டு நௌவ்கட் கொண்டு இயங்கும் என்று காட்டுகிறது. இந்த அம்சங்களில் எது உண்மை எது சாத்தியம் உள்ள புள்ளி என்பதை உறுதி செய்ய அதிகாரப் பூர்வமான அறிவிப்பு மிக தேவை.

மிக அழகான ஒரு கருவி
இது உண்மையான படமா அலல்து போலியா என்பதை தவிர்த்து கேலக்ஸி எஸ்8 கருவியின் முந்தைய கசிவுகள் மற்றும் இணையத்தில்வெளியான பிற வதந்திகள் பரிசீலிப்பது என்னவென்றால் இக்கருவி மிக அழகான ஒரு கருவியாக இருக்கும், வரவிருக்கும் மாதங்களில் இந்த தலைமை ஸ்மார்ட்போன் வெளியாகும் என்பதை உறுதி செய்கின்றன.

மேலும் படிக்க
2017-ல் இந்தியாவில் வாங்கக்கூடிய 10 சிறந்த சாம்சங் ஸ்மார்ட்போன்கள்


Click it and Unblock the Notifications