18:9 காட்சி விகிதம், பிக்ஸ்பையுடன் மிரட்டும் கேலக்ஸி எஸ்8.!

Written By:

மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் மாநாட்டில் வெளியிடப்படக்கூடும் என ஸ்மார்ட்போன் வாடிக்கையாளர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சாம்சங் நிறுவனத்தின் சாம்சங் கேலக்ஸி எஸ்8 ஸ்மார்ட்போனின் வெளியீடானது தள்ளிப்போயுள்ளது.ஆனால்,சாம்சங் கேலக்ஸி எஸ்8 பற்றியும் அது இத்தகைய அம்சங்களைக் கொண்டிருக்கக்கூடுமெனவும் அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் ஸ்மார்ட்போன் சந்தையில் கசிந்த வண்ணமே உள்ளன.

தற்போது கசிந்துள்ள தகவல்களின் படி சாம்சங் கேலக்ஸி எஸ்8 ஸ்மார்ட்போன் என்ன மாதிரியான அம்சங்களைக் கொண்டிருக்கக்கூடும் என்ற தகவல்களை கீழே காணலாம்.

18:9 காட்சி விகிதம், பிக்ஸ்பையுடன் மிரட்டும் கேலக்ஸி எஸ்8.!

எம்டபுள்யூசி 2017-வெளியிடப்படாத சாம்சங் கேலக்ஸி எஸ்8:

பார்சிலோனாவில் தற்போது நடைபெற்று வருகிற மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் மாநாட்டில் அனைத்து ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்களும் தமது புதிய தயாரிப்புகள் பலவற்றினை அறிமுகப்படுத்தி வெளியிட்டு வருகின்றன.சாம்சங் நிறுவனமும் டேப் உள்ளிட்ட தமது தயாரிப்புகளை வெளியிட்டது.ஆனால் வாடிக்கையாளர்கள் பிரித்து எதிர்பார்த்த சாம்சங் கேலக்ஸி எஸ்8 வெளியிடப்படவில்லை.

18:9 காட்சி விகிதம், பிக்ஸ்பையுடன் மிரட்டும் கேலக்ஸி எஸ்8.!

கசிந்த இமேஜ்:

துவக்கம் முதலே சாம்சங் கேலக்ஸி எஸ்8 குறித்து பல உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகி வந்தாலும் தற்போது இணைய வெளியில் முதன் முறையாக அதன் புகைப்படங்கள் கசிந்துள்ளன.கசிந்துள்ள இமேஜ்களின் அடிப்படையில் விர்சுவல் அசிஸ்டன்ட் பிக்ஸ்பை பட்டனுடன் வெளியாகுமென தெரிகிறது.

18:9 காட்சி விகிதம், பிக்ஸ்பையுடன் மிரட்டும் கேலக்ஸி எஸ்8.!

அம்சங்கள்:

மேலும்,சாம்சங் கேலக்ஸி எஸ்8 ஆனது ஸ்மார்ட்போன்களின் சராசரி டிஸ்பிளே அளவினை விட அதிகமான அளவில் இருக்குமென தெரிகிறது(18:9).5.7 இன்ச் கியூஎச்டி டிஸ்பிளே 1440x2880 பிக்சல்ஸ்,குவால்கம் ஸ்னாப்ட்ராகன் 835 எஸ்ஓசி ப்ரோசஸர்,4/6 ஜிபி ரேம்,64 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ்,128 எக்ஸ்பேன்டாபிள் ஸ்டோரேஜ்,3250 எம்ஏஎச் பேட்டரி ஆகிய அம்சங்களைக் கொண்டிருக்க கூடுமெனவும் தகவல்கள் வெளியாகின்றன.

விலை மற்றும் வெளியீடு:

சாம்சங் கேலக்ஸி எஸ்8 ன் விலை ரூபாய் 7,300 இருக்கக்கூடுமெனவும்,ஏப்ரல் 21 வெளியிடப்படுமெனவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் கசிகின்றன.

மேலும் படிக்க

தெரியுமா சேதி-வந்தாச்சு யூட்யூப் டிவி.!

English summary
Samsung Galaxy S8 Leaked Press Render Shows AI Button, 18:9 Display Aspect Ratio.Read more about this in Tamil Gizbot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot