Home
News

எப்போது வெளியாகிறது சாம்சங் கேலக்ஸி எஸ்8.!

மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் நிகழ்வில் வெளியிடக்கூடும் என எதிர்பார்க்கப்பட்ட சாம்சங் கேலக்ஸி எஸ்8 ன் வெளியீட்டு தேதி தள்ளிப்போகிறது.அதுகுறித்த தகவல்கள்.

By Ilamparidi

ஸ்மார்ட்போன் வாடிக்கையாளர்கள் மற்றும் விற்பனையாளர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட நிகழ்வான மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் நிகழ்ச்சி நேற்று நடைபெற்று நிறைவு பெற்றிருக்கிறது.இந்நிகழ்ச்சியில் பல ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்கள் பலதரப்பட்ட அம்சங்களுடன் கூடிய தங்களது புதிய ஸ்மார்ட்போன்கள் பலவற்றினை வெளியிட்டன.மேலும்,தங்களது அடுத்த தயாரிப்புகளையும் அறிமுகப்படுத்தின.

இந்நிகழ்வில் வெளியிடக்கூடும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சாம்சங் நிறுவனத்தின் சாம்சங் கேலக்ஸி எஸ்8 ஸ்மார்ட்போன் ஆனது வெளியிடப்படவில்லை.அதன் வெளியீட்டு தேதி தள்ளிப்போயுள்ளது.அது எப்போதும் வெளியிடப்படக்கூடும் ஆகியன குறித்த தகவல்கள் கீழே.

எப்போது வெளியாகிறது சாம்சங் கேலக்ஸி எஸ்8.!

எம்டபுள்யூசி:

நேற்று பார்சிலோனாவில் நடைபெற்ற மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் நிகழ்ச்சியில் அனைத்து ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்களும் தங்களது புதிய தயாரிப்புகளை வெளியிட்டன.இந்த நிகழ்ச்சியில் வெளியிடக்கூடுமென பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சாம்சங் கேலக்ஸி வெளியிடப்படவில்லை.ஆனால் அதன் வெளியிட்டு தேதியானது அறிவிக்கப்பட்டுள்ளது.

எப்போது வெளியாகிறது சாம்சங் கேலக்ஸி எஸ்8.!

சாம்சங் கேலக்ஸி எஸ்8:

சாம்சங் நிறுவனத்தின் புதிய தயாரிப்பான சாம்சங் கேலக்ஸி எஸ் 8 ஆனது சாம்சங் ஏஎல் அசிஸ்டன்ட்,ஹோம் பட்டனுக்கு மாற்றாக டெடிகேட்டேட் பிக்ஸ்பை பட்டன்,குவால்கம் ஸ்னாப்ட்ராகன் 835 எஸ்ஓசி,4 ஜிபி/6 ஜிபி ரேம்,64 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ்,128 எக்ஸ்டெர்னல் ஸ்டோரேஜ் மற்றும் 3250 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி உள்ளிட்டவற்றைக் கொண்டு வெளிவரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எப்போது வெளியாகிறது சாம்சங் கேலக்ஸி எஸ்8.!

மார்ச் முதல்:

நேற்றைய எம்டபுள்யூசி நிகழ்ச்சியில் வெளியிடப்படாத சாம்சங் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் தயாரிப்பான சாம்சங் கேலக்ஸி அடுத்த மாதம் மார்ச் 29 ஆம் தேதி வெளியிடப்படுமெனவும்,அந்நிகழ்வின் நேரலை சாம்சங் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஒளிபரப்பப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க

வெளியானது மோட்டோ ஜி5 மற்றும் மோட்டோ ஜி5 பிளஸ்-அம்சங்கள் மற்றும் விலை.!

Best Mobiles in India

English summary
Samsung Galaxy S8 Launch Set for March 29.Read more about this in Tamil Gizbot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X