Home
News

சாம்சங் கேலக்ஸி எஸ்7, வியக்க வைக்கும் கான்செப்ட் புகைப்படங்கள்??

By Meganathan

கேலக்ஸி எஸ்6 மற்றும் கேலக்ஸி எஸ்6 எட்ஜ் கருவிகளை கொண்டு ஸ்மார்ட்போன் சந்தையில் சாம்சங் நிறுவனம் எதிர்பார்ப்பை அதிகரித்திருக்கின்றது என்றே கூற வேண்டும். அந்நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்7 குறித்து பல்வேறு வதந்திகள் இணையத்தை ஆக்கிரமித்திருக்கின்றது.

அந்த வகையில் புதிய கேலக்ஸி எஸ்7 கருவியில் வழங்கப்பட இருப்பதாக கூறப்படும், நிச்சயம் இருக்கும் என எதிர்பார்க்கப்படும் சில அம்சங்களை அடுத்து வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்.

வளைந்த வடிவமைப்பு

வளைந்த வடிவமைப்பு

டெல்டா கான்செப்ட்ஸ் வடிவமைப்பின் படி புதிய கேலக்ஸி எஸ்7 கருவியின் ஒரு புறம் வளைந்த டிஸ்ப்ளே மற்றும் டூயல் ஸ்பீக்கர்கள் இருப்பதோடு திரையில் கைரேகை ஸ்கேனர் வழங்கப்படலாம் என கூறப்படுகின்றது.

தட்டை

தட்டை

மார்டின் ஹாஜெக் மற்றும் கம்ப்யூட்டர் பில்டு இணைந்து வடிவமைத்த இந்த ரென்டர் கருவி மெல்லிய வடிவமைப்போடு அழகிய தோற்றம் கொண்டிருக்கும் என்றும் கூடவே வாட்டர் ப்ரூஃப் அம்சமும் வழங்கப்படலாம்.

கேலக்ஸி எஸ்6 சாயல்

கேலக்ஸி எஸ்6 சாயல்

கேலக்ஸி எஸ்6 கருவியை தழுவி வடிவமைப்போடு சில சிறிய மாற்றங்களை கொண்டிருக்கின்றது ஜெர்மைன் ஸ்மிட் வடிவமைப்பு. மேலும் இந்த வடிவமைப்பின் படி பார்க்கும் போது புதிய நிறம் மற்றும் வளைந்த வடிவமைப்பு கொண்டிருக்கும் என எதிர்பார்க்கலாம்.

மெட்டல் வடிவமைப்பு

மெட்டல் வடிவமைப்பு

சோனி நிறுவனத்தை தொடர்ந்து ஹசன் கேமக் வடிவமைப்பில் கேலக்ஸி எஸ்7 கருவியானது மெட்டல் மூலம் வடிவமைக்கப்படலாம் என்றும் கூறப்படுகின்றது.

எட்ஜ்

எட்ஜ்

ஜெர்மைன் ஸ்மித் வடிவமைப்பில் கேலக்ஸி எஸ்7 எட்ஜ் கருவியும் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த கருவியில் ஸ்னாப்டிராகன் 820 அல்லது எக்சைனோஸ் 8890 சிப்செட் மற்றும் 5.7 இன்ச் குவாட் எச்டி திரை வழங்கப்படலாம்.

மெட்டல் ஃபிரேம்

மெட்டல் ஃபிரேம்

கேலக்ஸி எஸ்7 எட்ஜ் கருவியில் மெல்லிய மெட்டல் ஃபிரேம் மற்றும் வளைந்த எட்ஜ் வடிவமைப்பு கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகின்றது.

வளைந்த வடிவமைப்பு

வளைந்த வடிவமைப்பு

3டிஃபியூச்சர் வடிவமைப்பின் படி கேலக்ஸி எஸ்7 எட்ஜ் 2016 மாடல் சாம்சங் நிறுவனத்தின் புகைப்படங்களில் தழுவி தயாரிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.

வளைந்த திரை

வளைந்த திரை

SCAVids வடிவமைப்பின் படி கேலக்ஸி எஸ்7 கருவியில் 4ஜிபி ரேம், ஸ்னாப்டிராகன் 820 சிபியு, 21 எம்பி கேமரா மற்றும் யுஎஸ்பி டைப் சி போர்ட் வழங்கப்படலாம் என கூறப்படுகின்றது.

முகநூல்

முகநூல்

மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy S7 Amazing Concepts We Wish To Be Real.Read more in Tamil.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X