சாம்சங் கேலக்ஸி எஸ்6 - ஆப்பிள் ஐபோன் 6, எது சிறந்தது
சாம்சங் கேலக்ஸி எஸ் 6 சமீபத்தில் நடந்து முடிந்த மொபைல் வேர்ல்டு காங்கிரஸ் விழாவில் அனைவரது கவனத்தையும் ஈர்த்ததோடு சமீபத்தில் உலகம் முழுவதிலும் வெளியாகி விற்பனையிலும் அசத்தி வருகின்றது.
இங்கு ஆப்பிள் நிருவனத்தின் கடைசி வெளியீடான ஐபோன் 6 மற்றும் கேலக்ஸி எஸ்6 என இரு பெரிய ரக ஸ்மார்ட்போன்களில் எது சிறந்தது என்பதை தான் பார்க்க இருக்கின்றோம்.
கீழ் வரும் ஸ்லைடர்களில் ஆப்பிள் ஐபோன் 6 மற்றும் சாம்சங் கேலக்ஸி எஸ்6 என இரு மாடல்களில் சிறந்தவை எது என்பதை பாருங்கள்..

வடிவமைப்பு
கேலக்ஸி எஸ்6 மெட்டல் மற்றும் கிளாஸ் வடிவமைப்பு பார்க்க அட்டகாசமாக இருக்கின்றது, என்றாலும் ஐபோன் 6 6.9 எம்எம் வரை மெலிதாக இருப்பதோடு கைகளில் எடை குறைவாகவும் இருக்கின்றது.

டிஸ்ப்ளே
ஆப்பிள் நிறுவனம் 4.7 இன்ச் டிஸ்ப்ளே 750*1334 பிக்ஸல் ரெசல்யூஷன் வழங்குகின்றது, கேலக்ஸி எஸ்6, 5.1 இன்ச் சூப்பர் ஏஎம்ஓஎல்ஈடி ஸ்கிரீன் 1440*2560 பிக்ஸல் வழங்குகின்றது.

பிராசஸர்
கேலக்ஸி எஸ்6 கருவியில் எக்சைனோஸ் 7 ஆக்டாகோர் பிராசஸர் மற்றும் இரு குவாட்கோர் பிராசஸர் 2.1 ஜிகாஹெர்ட்ஸ் மற்றும் 1.5 ஜிகாஹெர்ட்ஸ் இருப்பதோடு 3ஜிபி ரேமும் வழங்கப்பட்டுள்ளது. ஐபோன் 6, 64 பிட் 1.39 ஜிகாஹெர்ட்ஸ் டூயல் கோர் ஏ8 பிராசஸர் 1 ஜிபி ரேம் இருக்கின்றது. இங்கு இரு நிறுவனங்களும் சம அளவு சரியான சிறப்பம்சங்களை தான் வழங்கி இருக்கின்றன.

இயங்குதளம்
சாம்சங் நிறுவனம் சுத்தமான ஸ்டாக் ஆன்டிராய்டு வழங்கி இருக்கின்றது, ஆப்பிள் நிறுவனம் ஐஓஎஸ் 8.1 மூலம் இயங்குகின்றது. இந்த ஐஓஎஸ் ஆன்டிராய்டு போன்று சிறப்பம்சங்களை வழங்கவில்லை என்று தான் கூற வேண்டும்.

கேமரா
8 எம்பி ப்ரைமரி கேமராவினை வழங்கியதா் ஆப்பிள் சற்று பின் தங்கியே இருக்கின்றது, கேலக்ஸி எஸ்6 ஸ்மார்ட்போனில் சாம்சங் நிறுவனம் 16 எம்பி ப்ரைமரி கேமரா வழங்கி இருக்கின்றது.

பேட்டரி
கேலக்ஸி எஸ்6 பேட்டரியை பொருத்த வரை 2550 எம்ஏஎஹ் வழங்கப்பட்டிருக்கின்றதோடு வயர்லெஸ் சார்ஜிங் அம்சமும் வழங்கப்பட்டுள்ளது. இதுவே ஐபோனில் 1810 எம்ஏஎஹ் பேட்டரி தான் வழங்கப்பட்டுள்ளது, இதிலும் சாம்சங் முன்னிலை வகிக்கின்றது என்றே கூறலாம்.


Click it and Unblock the Notifications