ஆப்பிள் - சாம்சங் மோதல்..!! வெற்றி யாருக்கு..??
சாம்சங் நிறுவனம் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சாம்சங் கேலக்ஸி எஸ்6 எட்ஜ்+ கருவியினை கடந்த வாரம் அமெரிக்காவில் வெளியிட்டதை தொடர்ந்து அந்நிறுவனம் இதே கருவியை இந்தியாவிலும் வெளியிட்டிருக்கின்றது.
உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு, தப்பிக்குமா சாம்சங்..??
புதிய கருவியில் சாம்சங் பல புதிய அம்சங்களை வழங்கி இருக்கின்றது. அந்த வகையில் புதிய கருவி ஐபோன் 6+ கருவிக்கு சவால் விடும் அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது, அந்த வகையில் கீழ் வரும் ஸ்லைடர்களில் கேலக்ஸி எஸ்6 எட்ஜ்+ கருவியில் வழங்கப்பட்டிருக்கும் சிறப்பம்சங்களை பாருங்கள்..
யூட்யூப் மாயாஜாலகள் நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்..!!

டிஸ்ப்ளே
சாம்சங் கேலக்ஸி எஸ்6 எட்ஜ்+ 5.7 இன்ச் டிஸ்ப்ளே, ஷார்ப் குவாட் எச்டி ரெசல்யூஷன் கொண்டிருக்கின்றது.

பேட்டரி
புதிய கருவியில் சாம்சங் நிறுவனம் எஸ் 6 எட்ஜ் கருவியை விட 400 எம்ஏஎச் அதிக திறன் கொண்ட பேட்டரியை வழங்கி இருக்கின்றது. புதிய எஸ்6 எட்ஜ்+ கருவியில் 3000 எம்ஏஎச் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.

ரேம்
முந்தைய எஸ்6 எட்ஜ் கருவியில் 3ஜிபி ரேம் வழங்கப்பட்டிருந்ததால் புதிய கருவியில் 1ஜிபி நீட்டிக்கப்பட்டு எஸ்6 எட்ஜ்+ கருவியில் 4ஜிபி ரேம் கொடுக்கப்பட்டுள்ளது.

கேமரா
புதிய கருவியில் 16 எம்பி ப்ரைமரி கேமரா, ஆப்டிக்கல் இமேஜ் ஸ்டேபிலைசேஷன் வழங்கப்பட்டுள்ளதால் அதிக துள்ளியமான புகைப்படங்களை எடுக்க வழி வகுக்கின்றது.

சார்ஜிங்
வயர்லெஸ் சார்ஜிங் இம்முறை அதிகமாக மேம்படுத்தப்பட்டுள்ளதால், போனினை 120 மணி நேரம் சார்ஜ் செய்ய முடியும்.

பயன்பாடு
பெரிய திரையை ஒரே கையில் பயன்படுத்தும் வசதி வழங்கப்பட்டுள்ளதால், இந்த கருவியினை பயன்படுத்துவது எளிமையாகவே இருக்கின்றது.

சாம்சங் பே
கேலக்ஸி எஸ்6 எட்ஜ்+ கருவியில் புதிய வகை பணம் செலுத்தும் முறை வழங்கப்பட்டுள்ளது. இந்த அம்சம் மூலம் உங்களது க்ரெடிட், டெபிட் மற்றும் லாயல்டி கார்டுகளை பாதுகாப்பாக சேமித்து வைத்து கொள்ள முடியும். சாம்சங் பே இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் பயன்பாட்டிற்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கீபோர்டு கேஸ்
சாம்சங் நிறுவனம் எஸ்6 எட்ஜ்+ கருவிக்கு கீபோர்டு கேஸ் வழங்கி இருக்கின்றது, இந்த கருவியினை போனில் பொறுத்தி பயன்படுத்த ஆரம்பிக்கலாம்.

பீப்பள் எட்ஜ்
இம்முறை பீப்பள் எட்ஜ் அம்சம் நீட்டிக்கப்பட்டு உங்களுக்கு முக்கியமாக இருக்கும் ஐந்து செயலிகளை உயர்த்தி காட்ட முடியும்.

விலை
சாம்சங் கேலக்ஸி எஸ்6 எட்ஜ்+ இந்தியாவில் ஆகஸ்டு 28 ஆம் தேதி முதல் கிடைக்கும் என்பதோடு ரூ.57,900க்கு கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications