சுந்தர் ஆட்டம் ஆரம்பம்.. அடுத்த கட்டதில் Google Gemini.. Samsung போன்களுக்கு வந்த Visual AI அம்சம்!
ஆப்பிள் (Apple) நிறுவனம் தேர்ந்தெடுக்கப்பட்ட ஐபோன் (iPhone) மாடல்களில் அதன் விஷுவல் இன்டலிஜென்ஸ் (Visual Intelligence) அம்சத்தை இறக்கி விட்ட வேகத்தில், சாம்சங் (Samsung) நிறுவனம் தேர்ந்தெடுக்கப்பட்ட கேலக்ஸி (Galaxy) ஸ்மார்ட்போன்களில் ரியல்-டைம் விஷூவல் ஏஐ (Real-Time Visual AI) என்கிற புதிய அம்சத்தை கொண்டு வந்துள்ளது.
ஆப்பிள் நிறுவனம் அதன் ஐஓஎஸ் 18.4 அப்டேட் வழியாக, இந்தியாவில் உள்ள ஐபோன்களுக்கு ஆப்பிள் இன்டெலிஜென்ஸ் (Apple Intelligence) அம்சங்களை கொண்டுவந்துள்ளது. இதோடு ஆப்பிளின் லேட்டஸ்ட் ஐபோன் 16 சீரீஸில் மட்டுமே அணுக கிடைத்த, மிகவும் பயனுள்ள ஒரு ஏஐ அம்சம், தற்போது ஐபோன் 15 ப்ரோ (iPhone 15 Pro),ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் (iPhone 15 Pro Max) மற்றும் ஐபோன் 16இ (iPhone 16e) ஆகிய மாடல்களிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அது விஷுவல் இன்டலிஜென்ஸ் (Visual Intelligence) அம்சமாகும். ஐபோன் 16இ மாடலில் ஆக்ஷன் பட்டனை சேர்த்ததன் மூலம், இனிமேல் ஆப்பிள் நிறுவனம் அதன் மலிவு விலை ஐபோனிலும் ஆக்ஷன் பட்டனை சேர்க்கும் என்கிற நிலைப்பாட்டிற்கு வந்துள்ளதை புரிந்துகொள்ள முடிகிறது. இந்த ஆக்ஷன் பட்டனில் தான் ஆப்பிள் நிறுவனம் ஏஐ-பவர்டு விஷுவல் இன்டலிஜென்ஸ் அம்சத்தை ஒரு ஷார்ட்கட் ஆக சேர்த்துள்ளது.
விஷுவல் இன்டலிஜென்ஸ்-ஐ வைத்து என்னென்ன செய்ய முடியும்? கண்ட்ரோல் சென்ட்ரல் அல்லது ஆக்ஷன் பட்டன் வழியாக நீங்கள் விஷுவல் இன்டலிஜென்ஸ்-ஐ செயல்படுத்தினால், ஏஐ ஆதரவு உடன் குறிப்பிட்ட டெக்ஸ்ட்-ஐ சுருக்க முடியும், மொழிபெயர்க்க முடியும், கேமராவை பயன்படுத்தி டெக்ஸ்ட்-ஐ சத்தமாக வாசிக்க வைக்கவும் முடியும்.
மேலும் கூகுள் லென்ஸை பயன்படுத்துவதை போலவே ஐபோன் பயனர்கள் விஷுவல் இன்டலிஜென்ஸ் அம்சம் மூலம் சேர்ச் செயல்பாடுகளையும் செய்யலாம். ஐபோன் கேமராவின் முன் ஒரு பொருளை வைக்கும்போது, உங்களுக்கு இரண்டு விருப்பங்கள் கிடைக்கும்: கேளுங்கள் (Ask) மற்றும் தேடுங்கள் (Search). இதில் உங்களுக்கு எதை செய்ய வேண்டுமோ அதை கிளிக் செய்து, தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள முடியும்.
இதற்கிடையில் தான், ஜெமினி லைவ் அடிப்படையிலான புதிய செயற்கை நுண்ணறிவு அனுபவத்தை அறிமுகப்படுத்துவதாக சாம்சங் அறிவித்துள்ளது. சாம்சங் நிறுவனம் இந்த அம்சத்தை ரியல்-டைம் விஷூவல் ஏஐ என்று அழைக்கிறது. இது சாம்சங் கேலக்ஸி எஸ்254 சீரீஸ்-ல் சேர்க்கப்பட்டுள்ளது.
இந்த விஷுவல் ஏஐ அம்சத்தை வைத்து என்னென்ன செய்ய முடியும்? இதன்கீழ் கேலக்ஸி எஸ்25 சீரீஸ் ஸ்மார்ட்போன் பயனர்கள் அன்றாட பணிகளை எளிதாக்கும் உரையாடல்களில் எளிதாக பங்கேற்க முடியும். அதாவது நீங்கள் பார்ப்பதை காண்பிக்கும் அதே வேளையில், ஜெமினி லைவ் உடன் நேரடி விவாதத்திலும் ஈடுபட முடியும். இதை செய்ய கேலக்ஸி எஸ்25 சீரீஸ் பயனர்கள் தங்கள் டிவைஸ்களின் பக்கவாட்டு பட்டனை பிரஸ் செய்து ஹோல்ட் செய்ய வேண்டும்.
இது பல்வேறு அன்றாட முடிவுகளை எடுக்க உதவும். அதாவது ஒரு ஆடையைத் தேர்ந்தெடுப்பது அல்லது ஒரு அலமாரியை மறுசீரமைப்பது போன்ற வேலைகளில் உதவி செய்கிறது. உதாரணமாக, கேமராவை ஒரு அலமாரியை நோக்கி சுட்டிக்காட்டுவதன் மூலம், பொருட்களை எவ்வாறு வகைப்படுத்துவது மற்றும் ஸ்பேஸ்-ஐ எவ்வாறு மேம்படுத்துவது என்பது குறித்த பரிந்துரைகளை பெறலாம்.
பயனர்கள் என்ன பார்க்கிறார் என்பதை பார்த்து நிகழ்நேரத்தில் பதிலளிக்கும் திறனை கொண்டுள்ள இந்த விஷூவல் ஏஐ அம்சமானது, எப்போதும் உதவத் தயாராக இருக்கும் ஒரு நண்பரை போல உணர வைக்கிறது என்றே கூறலாம். கேமரா மற்றும் ஸ்க்ரீன் ஷேரிங் திறன்களை கொண்ட ஜெமினி லைவ் ஆனது ஏப்ரல் 7 ஆம் தேதி முதல் அனைத்து கேலக்ஸி எஸ்25 சீரீஸ் மாடல்களுக்கும் வெளியிட தொடங்கபட்டுள்ளது என்றும் சாம்சங் தெரிவித்துள்ளது. மேலும் இந்த விஷுவல் ஏஐ அம்சம் பயனர்களுக்கு முற்றிலும் இலவசமாக கிடைக்கும் என்பதையும் சாம்சங் உறுதிப்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications