Home
News

Samsung Galaxy S24 Ultra: இது ஸ்மார்ட்போனே இல்லை.. குட்டி AI ரோபோட்.. மிரட்டல் ஸ்பெக்ஸ் உடன் அறிமுகம்..

சாம்சங் (Samsung) நிறுவனம் அதன் சாம்சங் கேலக்ஸி S24 சீரிஸ் (Samsung Galaxy S24 series) ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. S24 சீரிஸ் இன் கீழ் நிறுவனம் இப்போது 3 மாடல்களை அறிமுகம் செய்துள்ளது.

சாம்சங் நிறுவனம், அதன் சாம்சங் அன்பேக்டு ஈவென்ட் 2024 நிகழ்வை இன்று நடத்தியது. இதில் சாம்சங் கேலக்ஸி S24 (Samsung Galaxy S24), சாம்சங் கேலக்ஸி S24 பிளஸ் (Samsung Galaxy S24 Plus) மற்றும் சாம்சங் கேலக்ஸி S24 அல்ட்ரா (Samsung Galaxy S24 Ultra) ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது.

Samsung Galaxy S24 Ultra: இது ஸ்மார்ட்போனே இல்லை.. குட்டி AI ரோபோட்..

இதில் நாம் Samsung Galaxy S24 Ultra மாடலை பற்றிய விபரங்களை தான் இந்த பதிவில் பார்க்கப் போகிறோம். சாம்சங் கேலக்ஸி S24 சீரிஸ் இல் பிரீமியம் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் (Premium Flagship Smartphone) மாடலாக இந்த சாம்சங் கேலக்ஸி S24 அல்ட்ரா (Samsung Galaxy S24 Ultra) வெளிவருகிறது. இதன் சிறப்பம்சங்களை பற்றி பேசுகையில், இது அட்டகாசமான அம்சங்களை பேக் செய்துள்ளது.

சாம்சங் கேலக்ஸி S24 அல்ட்ரா சிறப்பம்சம் (Samsung Galaxy S24 Ultra Specifications):

இந்த ஸ்மார்ட்போன் சாதனம் 6.8" இன்ச் அளவு கொண்ட 1440 x 3088 பிக்சல் (pixel) உடன் கூடிய டைனமிக் LTPO AMOLED 2X டிஸ்பிளேவை (display) கொண்டுள்ளது. இது 120Hz ரெஃப்ரஷ் ரேட் (refresh rate), HDR10+ சப்போர்ட் மற்றும் 2600 நீட்ஸ் பீக் பிரைட்னஸ் உடன் வருகிறது. இது கார்னிங் கொரில்லா கிளாஸ் ஆர்மர் (Corning Gorilla Glass Armour) உடன் வருகிறது.

இந்த புதிய சாம்சங் கேலக்ஸி S24 அல்ட்ரா (Samsung Galaxy S24 Ultra) குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 (Qualcomm Snapdragon 8 Gen 3) சிப்செட் உடன் வெளிவருகிறது. இந்த சாதனம் 12GB RAM | 256GB, 12GB RAM | 512GB மற்றும் 12GB RAM | 1TB UFS 4.0 ஸ்டோரேஜ் மாடலாக வெளிவந்துள்ளது.

இது ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான ஒன் UI 6.1 (Android 14, One UI 6.1) இயங்குதளத்துடன் இயங்குகிறது. இதன் கேமரா அம்சங்கள் பற்றி பேசுகையில், இது குவாட் கேமரா அமைப்புடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போனின் மெயின் கேமரா 200MP சென்சார் உடன் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Samsung Galaxy S24 Ultra: இது ஸ்மார்ட்போனே இல்லை.. குட்டி AI ரோபோட்..

சாம்சங் கேலக்ஸி S24 அல்ட்ரா ஆனது 200 MP பிரைமரி கேமராவுடன் OIS ஆதரவை கொண்டுள்ளது. இதனுடன், 50 MP பெரிஸ்கோப் டெலிபோட்டோ (periscope telephoto) உடன் 5x ஆப்டிகல் ஜூம் (optical zoom) சென்சார், 10 MP டெலிபோட்டோ (telephoto) லென்ஸ் உடன் 3x ஆப்டிகல் ஜூம் மற்றும் 12 MP உடன் 120˚ அல்ட்ராவைடு (ultrawide) சென்சார் இதில் வழங்கப்பட்டுள்ளது.

முன்பக்கத்தில், இந்த ஸ்மார்ட்போன் சாதனம் ஆனது 12 MP (f/2.2) செல்பி கேமராவை கொண்டுள்ளது. இது நானோ சிம் மற்றும் இ-சிம் (Nano-SIM and eSIM) விருப்பத்துடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் சாதனம் 5000 mAh பேட்டரியை பேக் செய்கிறது. இது 65% சார்ஜ்ஜை 30 நிமிடங்களில் நிரப்பும் 45W வயர்டு சார்ஜிங் PD3.0 சார்ஜிங் அம்சத்தை ஆதரிக்கிறது. இது 15W வயர்லெஸ் (Qi/PMA) சார்ஜிங்கையும் ஆதரிக்கிறது.

சாம்சங் கேலக்ஸி S24 அல்ட்ரா விலை (Samsung Galaxy S24 Ultra Price):

இது இறுதியாக, 4.5W திறன் கொண்ட ரிவர்ஸ் வயர்லெஸ் (reverse wireless) அம்சத்தையும் கொண்டுள்ளது. இதன் விலை பற்றி பேசுகையில், இது இந்திய மதிப்பில் சுமார் ரூ.1,08,125 விலையில் துவங்குகிறது. இதன் 1TB மாடல் ரூ.1,24,600 விலையில் வருகிறது. இது டைட்டானியம் பிளாக் (Titanium Black), டைட்டானியம் க்ரேய் (Titanium Gray), டைட்டானியம் வையோலேட் (Titanium Violet) மற்றும் டைட்டானியம் எல்லோவ் (Titanium Yellow) என்ற 4 நிறங்களில் வருகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Samsung Galaxy S24 Ultra 12GB RAM 256GB 512GB 1TB Storage Check Price and Specifications Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X