முத்தான விலைகளில் 3 மாடல்கள்.. OnePlus, iPhone-களை ஓடவிடும் முரட்டு அம்சங்கள்.. Samsung Galaxy S24 சீரீஸ்!
இந்த 2024 ஆம் ஆண்டில் சாம்சங் (Samsung) நிறுவனத்திடம் இருந்து மிகவும் எதிர்பார்க்கப்படும் கேலக்ஸி எஸ்24 சீரீஸ் (Galaxy S24 Series) ஸ்மார்ட்போன்கள் ஜனவரி 17 ஆம் தேதியன்று நடக்கும் கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வில் (Galaxy Unpacked Event), உலகளவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது.
கேலக்ஸி எஸ்24 சீரீஸின் கீழ் மொத்தம் எத்தனை மாடல்கள் அறிமுகமாகும்? இதன்கீழ் சாம்சங் கேலக்ஸி எஸ்24 (Samsung Galaxy S24), சாம்சங் கேலக்ஸி எஸ்24 பிளஸ் (Samsung Galaxy S24 Plus) மற்றும் சாம்சங் கேலக்ஸி எஸ்24 அல்ட்ரா (Samsung Galaxy S24 Ultra) என மொத்தம் 3 மாடல்கள் அறிமுகமாகும்.

கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வு சரியாக எப்போது நடக்கும்? அமெரிக்காவில் கலிபோர்னியாவின் சான் ஜோஸில் உள்ள எஸ்ஏபி சென்டரில் (SAP Center) ஜனவரி 17 ஆம் தேதி, இந்திய நேரப்படி இரவு 11:30 மணிக்கு நடைபெறும். இந்நிகழ்வு சாம்சங் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ யூட்யூப் சேனல், ஃபேஸ்புக் மற்றும் எக்ஸ் அக்கவுண்ட் வழியாக நேரலையில் ஒளிபரப்பப்படும்.
கேலக்ஸி எஸ்24-ன் முக்கிய அம்சங்கள்: இது 6.2-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட், 8ஜிபி ரேம், 128 / 256 / 512ஜிபி ஸ்டோரேஜ், 25W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உடனான 4000mAh பேட்டரி மற்றும் 50எம்பி மெயின் கேமரா உடனான ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் போன்றவைகளை கொண்டிருக்கலாம்.
கேலக்ஸி எஸ்24 பிளஸி-ன் முக்கிய அம்சங்கள்: இது 6.7-இன்ச் க்யூஎச்டி பிளஸ் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட், 8ஜிபி ரேம், 128 / 256 / 512ஜிபி ஸ்டோரேஜ், 45W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உடனான 4900mAh பேட்டரி மற்றும் 50எம்பி மெயின் கேமரா உடனான ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் போன்றவைகளை கொண்டிருக்கலாம்.
கேலக்ஸி எஸ்24 அல்ட்ராவின் முக்கிய அம்சங்கள்: இது 6.8-இன்ச் க்யூஎச்டி பிளஸ் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட், 12ஜிபி ரேம், 128 / 256 / 512ஜிபி ஸ்டோரேஜ், 5000mAh பேட்டரி மற்றும் 200எம்பி மெயின் கேமரா உடனான குவாட் ரியர் கேமரா செட்டப் போன்றவைகளை கொண்டிருக்கலாம்.
கேலக்ஸி எஸ்24 சீரீஸ் விலை நிர்ணயம்: சாம்சங் கேலக்ஸி எஸ்24 பிளஸ் ஸ்மார்ட்போனின் பேஸிக் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.1,04,999 முதல் ரூ. 1,05,999 க்குள் எங்காவது ஒரு புள்ளியில் அறிமுகம் செய்யப்படலாம். இது கடந்த ஆண்டு அறிமுகமான கேலக்ஸி எஸ்23 பிளஸ் மாடலுடன் ஒப்பிடும்போது ரூ. 10,000-க்கும் அதிகமான விலை அதிகரிப்பை குறிக்கிறது.
சாம்சங் கேலக்ஸி எஸ்24 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் விலை ரூ.1,34,999 முதல் ரூ.1,35,999 க்குள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுவும் ரூ.1,24,999 க்கு வாங்க கிடைத்த எஸ்23 அல்ட்ராவை விட ரூ.10,000 விலை அதிகாமாக இருக்கும். கடைசியாக உள்ள எஸ்24 ஸ்மார்ட்போனின் விலை தெரியவில்லை. நினைவூட்டும் வண்ணம் கேலக்ஸி எஸ்23 ரூ.74,999 என்கிற ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதே விலைக்கு எஸ்24 மாடலும் அறிமுகமாகலாம்.
கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வில் வேறு என்னென்ன அறிமுகங்களை எதிர்பார்க்கலாம்? சாம்சங் நிறுவனம் அதன் கேலக்ஸி ஏஐ (Galaxy AI) என்கிற விஷயத்தை பெரிதும் டீஸ் செய்து வருகிறது. இதன்கீழ் ஏஐ வால்பேப்பர், ரியல்டைம் போன் கால் டிரான்ஸ்லேஷன், மேஜிக் எடிட்டர், ஏஐ-எனேபிள்டு ஜூம்-இன் போன்ற அம்சங்களை எதிர்பார்க்கலாம்.
சாம்சங் நிறுவனம் ஏற்கனவே இன்டெல் கோர் அல்ட்ரா சிப்களுடன் கூடிய புதிய லேப்டாப்களை அறிமுகம் செய்துவிட்டது. ஆகையால் கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வில் புதிய சாம்சங் லேப்டாப்கள் அறிவிக்கப்பட வாய்ப்பில்லை. இருப்பினும் கேலக்ஸி ஃபிட் 3 என்கிற புதிய ஃபிட்னஸ் பேண்ட் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








