Samsung ரசிகர்களை இனி கையில புடிக்க முடியாதே.. Galaxy S24 சீரீஸ் முழு அம்சங்களும் லீக்.. எப்போது அறிமுகம்?
சாம்சங்கின் கேலக்ஸி எஸ்24 சீரீஸ் (Samsung Galaxy S24 Series) ஸ்மார்ட்போன்கள் வரட்டும் அப்புறம் இருக்கு ஆப்பிளின் ஐபோன் 15 சீரீஸ்க்கு.. என்று வெறும் வாயை மென்றவர்களுக்கு 1 கிலோ அவல் அள்ளி கொடுத்தது போல.. கேலக்ஸி எஸ்24 சீரீஸின் 3 மாடல்களின் அனைத்து முக்கிய அம்சங்களும் லீக் ஆகியுள்ளது!
சாம்சங் கேலக்ஸி 23 சீரிஸ் - டிசைன் மற்றும் கலர் ஆப்ஷன்ஸ்: வெளியான லீக்ஸ் தகவலின்படி, கேலக்ஸி எஸ்24 அல்ட்ரா மாடலானது நான்கு கலர் ஆப்ஷன்களில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது: டைட்டானியம் பிளாக், டைட்டானியம் கிரே, டைட்டானியம் வயலட் மற்றும் டைட்டானியம் மஞ்சள்.

சாம்சங் அதன் 2024 ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனின் உருவாக்கத் தரத்தை புதிய கட்டத்திற்கு உயர்த்துவது போல் தெரிகிறது. டைட்டானியம் ஃப்ரேம் உடன் வரும் சாம்சங்கின் எஸ் 24 அல்ட்ராவானது ஆப்பிளின் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸை காலி செய்யும் என்பது போல் தெரிகிறது.
மறுகையில் உள்ள கேலக்ஸி எஸ்24 பிளஸ் மற்றும் எஸ்24 போன்களுக்கு கண்டிப்பாக டைட்டானியம் ஃப்ரேம் கிடைக்காது. மாறாக இவ்விரு மாடல்களும் அலுமினியம் ஃப்ரேமை பெறலாம். எஸ்24 மற்றும் எஸ்24 பிளஸ் ஸ்மார்ட்போனின் கலர் ஆப்ஷன்கள் ஓனிக்ஸ் பிளாக், மார்பிள் கிரே, கோபால்ட் வயலட் மற்றும் ஆம்பர் யெல்லோ என்று அழைக்கப்படலாம்.

சாம்சங் கேலக்ஸி 23 சீரிஸ் - என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? வெளியான லீக்ஸ் தகவலின்படி கேலக்ஸி எஸ்24 அல்ட்ரா, கேலக்ஸி எஸ்24 பிளஸ் ஆகிய இரண்டும் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட் (Snapdragon 8 Gen 3 chipset) மூலம் இயக்கப்படும். வெண்ணிலா வேரியண்ட் ஆன கேலக்ஸி எஸ்24 எக்ஸினோஸ் 2400 (Exynos 2400) சிப்செட் மூலம் இயக்கப்படலாம்.
ரேம்-ஐ பொறுத்தவரை அல்ட்ரா மற்றும் பிளஸ் மாடல்கள் 12 ஜிபி வரையிலான ரேம் உடனும், எஸ்24 மாடல் ஆனது 8 ஜிபி வரையிலான ரேம் உடனும் அனுப்பப்படலாம். பேட்டரியை பொறுத்தவரை, இம்மூன்று மாடல்களும் முறையே 5,000mAh, 4,900mAh மற்றும் 4,000 mAh பேட்டரியை பேக் செய்யலாம்.

கேமராக்களை பொறுத்தவரை, கேலக்ஸி எஸ்24 அல்ட்ரா மாடலில் 12 எம்பி (அல்ட்ராவைடு) + 200 எம்பி (வைட்) + 10 எம்பி டெலிபோட்டோ #1) + 50 எம்பி (டெலிபோட்டோ #2) சென்சார்கள் உடனான குவாட் ரியர் கேமரா செட்டப் இடம்பெறலாம். முன் பக்கத்தில் 12 எம்பி (செல்பீ) கேமரா இடம்பெறலாம்.
சாம்சங் கேலக்ஸி எஸ்24 பிளஸ் மாடலில் 12 எம்பி (அல்ட்ராவைடு) + 50 எம்பி (வைட்) + 10 எம்பி டெலிபோட்டோ) சென்சார்கள் உடனான ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் இடம்பெறலாம். முன் பக்கத்தில் 12 எம்பி (செல்பீ) கேமரா இடம்பெறலாம்.
கடைசியாக உள்ள கேலக்ஸி எஸ்24 மாடலில், பிளஸ் மாடலில் இடம்பெற அதே கேமராக்கள், அதாவது அதே 12 எம்பி (அல்ட்ராவைடு) + 50 எம்பி (வைட்) + 10 எம்பி டெலிபோட்டோ) சென்சார்கள் உடனான ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் இடம்பெறலாம். முன் பக்கத்திலும் அதே 12 எம்பி (செல்பீ) கேமரா இடம்பெறலாம்.
ஸ்டோரேஜை பொறுத்தவரை, அல்ட்ரா மாடலானது 1 டிபி / 512ஜிபி / 256ஜிபி ஆப்ஷன்களிலும்,
பிளஸ் மாடலானது 512 ஜிபி / 256 ஜிபி /128 ஜிபி ஆப்ஷன்களிலும், எஸ்24 மாடலானது 512 ஜிபி / 256 ஜிபி ஆப்ஷனைகளிலும் வெளியாகலாம்.
கனெக்டிவிட்டியை (Connectivity) பொறுத்தவரை, எஸ்24 அல்ட்ரா மாடலில் ப்ளூடூத் வி5.3, வைஃபை 7 மற்றும் அல்ட்ரா வைட் பேண்ட், எஸ்24 பிளஸ் மாடலில் ப்ளூடூத் வி5.3 மற்றும் வைஃபை 7, எஸ்24 மாடலில் ப்ளூடூத் சி5.3 மற்றும் வைஃபை 6இ போன்றவைகளை எதிர்பார்க்கலாம்.
சாம்சங் கேலக்ஸி எஸ்24 சீரீஸ் - எப்போது அறிமுகமாகும்? சாம்சங் நிறுவனம் வருகிற 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் நடத்தும் கேலக்ஸி அன்பேக்டு (Galaxy Unpacked) நிகழ்வில் தனது புதிய பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களான எஸ்24 சீரீஸை அறிமுகம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்த ஆதிகாரப்பூர்வ தகவல் ஏதேனும் வந்தால் உடனுக்குடன் அப்டேட் செய்கிறோம்.


Click it and Unblock the Notifications








