iPhone 15-க்கு சரியான செக்.. Galaxy S24 அறிமுக தேதியோடு சேர்த்து இன்னொரு செம்ம நியூஸ் சொன்ன Samsung!
ஆப்பிள் (Apple) மற்றும் சாம்சங் (Samsung) நிறுவனங்களுக்கு இடையேயான நீயா நானா போட்டி.. இன்றோ நேற்றோ அல்ல. கடந்த பல ஆண்டுகளாகவே நடக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் முதலில் புதிய ஐபோன்கள் அறிமுகமாவதும், அதன் பின்னர் புதிய எஸ் சீரீஸ் அறிமுகமாவதும் வழக்கமாக உள்ளது!
ஒவ்வொரு முறையும் ஆப்பிளுடம் இருந்தும், சாம்சங்கிடம் இருந்தும் புதிய பிளாக்ஷிப் மாடல்கள் அறிமுகமாகும் போதெல்லாம்.. முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு "இரண்டில் எது பெஸ்ட்?" என்கிற விவாதங்கள், போட்டிகள் மற்றும் விமர்சனங்கள் பலமாக இருக்கும். இம்முறையும் அதற்கு எந்த குறையும் இருக்காது என்பது போல் தெரிகிறது!

ஏனென்றால் சாம்சங் அறிவித்துள்ள தகவல் அப்படி! அதென்ன தகவல்? சாம்சங் கேலக்ஸி எஸ்24 சீரிஸ் சரியாக எப்போது அறிமுகமாகும்? இந்த சீரிஸின்கீழ் மொத்தம் எத்தனை மாடல்கள் வெளியாகும்? என்னென்ன அம்சங்களை பேக் செய்யும்? விலை நிர்ணயம் எப்படி இருக்கும்? இதோ விவரங்கள்:
எப்போது அறிமுகமாகும்? சாம்சங் நிறுவனத்திடம் இருந்து மிகவும் எதிர்பார்க்கப்படும் கேலக்ஸி எஸ்24 சீரிஸ் ஆனது வருகிற ஜனவரி 17, 2024 அன்று உலகளவில் அறிமுகம் செய்யப்படலாம் என்கிற லீக் தகவலொன்று வெளியாகியுள்ளது. நினைவூட்டும் வண்ணம், சாம்சங் கேலக்ஸி எஸ்23 சீரீஸ் கடந்த 2023 பிப்ரவரியில் அறிமுகமானது!

மொத்தம் எத்தனை மாடல்கள் அறிமுகமாகும்? பழைய சீரீஸ்களை போலவே இம்முறையும் சாம்சங் கேலக்ஸி எஸ்24 சீரீஸின் கீழ் மொத்தம் மூன்று மாடல்கள் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது: கேலக்ஸி எஸ்24 (Galaxy S24), கேலக்ஸி எஸ்24 பிளஸ் (Galaxy S24 Plus) மற்றும் கேலக்ஸி எஸ்24 அல்ட்ரா (Galaxy S24 Ultra).
சாம்சங் சொன்ன ஸ்பெஷல் நியூஸ் என்னது? ஏற்கனவே கேலக்ஸி எஸ்24 சீரீஸ் ஸ்மார்ட்போன்களின் மீது பலத்த எதிர்பார்ப்புகள் உள்ள நிலைப்பாட்டில், கேலக்ஸி எஸ்24 ஆனது ஒரு ஏஐ போன் (AI Phone) ஆக இருக்கும் என்பதை சாம்சங் நிறுவனம் உறுதிப்படுத்தி, எதிர்பார்ப்புகளை இன்னும் எகிற செய்துள்ளது.

அதாவது கேலக்ஸி எஸ்24 சீரிஸில் பல்வேறு வகையான ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ் திறன்கள் சேர்க்கப்படவுள்ளது. கேலக்ஸி கிளப் (Galaxy Club) என்கிற டச்சு வலைத்தளத்தின்படி கேலக்ஸி எஸ்24 ஆனது ஒரு ஏஐ போனாக வெளியிடப்படுமாம்; இதற்காக ஏஐ போன் மற்றும் ஏஐ ஸ்மார்ட்போன் போன்ற தலைப்புகளுக்கான வர்த்தக முத்திரைகளை சாம்சங் நிறுவனம் பதிவு செய்துள்ளதாம்.
இதன்மூலம் சாம்சங் நிறுவனமானது ஏஐ விஷயத்தில் மிகவும் தீவிரமாக செயல்படுவதை வெளிப்படையாகவே அறிந்துகொள்ள முடிகிறது. இருப்பினும், இந்த பெயர்கள் (ஏஐ போன் / ஏஐ ஸ்மார்ட்போன்) சற்று வரம்புக்குட்பட்ட பெயர்கள் ஆகும். ஆகையால் சாம்சங்கிற்கு இந்த வர்த்தக முத்திரைகள் வழங்கப்படாமல் கூட போகலாம். ஆனால் நிச்சயம் ஏஐ திறன்களில் எந்த குறையும் இருக்காது!
என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? கேலக்ஸி எஸ்24 அல்ட்ராவின் லேட்டஸ்ட் லீக் புகைப்படங்களில், பிளாட் பேக் பேனல் மற்றும் பிளாட் டிஸ்பிளேவை காணமுடிகிறது. மேலும் இதில் குவாட் ரியர் கேமரா செட்டப் இடம்பெறும், அது தனித்தனி உலோக வளையங்களுக்குள் வைக்கப்பட்டுள்ளன.
சாம்சங் கேலக்ஸி எஸ் 24 அல்ட்ராவின் குவாட் ரியர் கேமரா யூனிட்டில் 200 மெகாபிக்சல் ப்ரைமரி சென்சார் + 50 மெகாபிக்சல் பெரிஸ்கோப் கேமரா + 12 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் ஆங்கிள் ஷூட்டர் + 10 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ சென்சார் ஆகியவைகள் பேக் செய்யப்படலாம்.
எதிர்பார்க்கப்படும் அம்சங்களை பொறுத்தவரை, கேலக்ஸி எஸ்24 அல்ட்ரா மாடலானது 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மற்றும் 8ஜிபி ரேம் + 128 ஜிபி என்கிற 2 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் அறிமுகம் செய்யப்படலாம். கடைசியாக இது 45W பாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 5000mAh பேட்டரியை பேக் செய்யலாம். சுவாரசியமாக இதில் டைட்டானியம் ஃப்ரேமும் (Titanium frame) இருக்கலாம்.
என்ன விலைக்கு அறிமுகம் செய்யப்படலாம்? எதிர்பார்க்கப்படும் விலை நிர்ணயத்தை பொறுத்தவரை, சாம்சங் கேலக்ஸி எஸ்24 மாடலானது ரூ.72,990 க்கும், கேலக்ஸி எஸ்24 பிளஸ் மாடலானது ரூ.85,990 க்கும், கேலக்ஸி எஸ்24 அல்ட்ரா மாடலானது ரூ.1,19,990 க்கும் அறிமுகம் செய்யப்படலாம். சரியான விலை நிர்ணயம் வெளியீட்டு நாளின் போது தான் அறிவிக்கப்படும்.
Photo Courtesy: David Martin | @DavidMa05368498, Xavier Naxa | @XavierNaxa


Click it and Unblock the Notifications








