இருக்கு.. சிறப்பா ஒரு சம்பவம் இருக்கு.. மிரட்டலாக ரெடியாகும் Samsung Galaxy S23 Ultra.! லுக்கே அள்ளுதே.!

|

கடந்த சில வாரங்களாக இணையத்தில் நாம் அடிக்கடி மீண்டும் - மீண்டும் பார்க்கும் புதிய ஸ்மார்ட்போன் மாடலாக Samsung Galaxy S23 Ultra காணப்படுகிறது. சாம்சங் நிறுவனத்திற்கு சொந்தமான இந்த புதிய சாம்சங் கேலக்ஸி S23 அல்ட்ரா (Samsung Galaxy S23 Ultra) மாடல் பற்றிய லீக்ஸ் மற்றும் டிப் தகவல்களை நாம் பார்த்து வருகிறோம். அந்த வரிசையில், இப்போது Samsung Galaxy S23 Ultra பற்றிய சில சுவாரசியமான தகவல்கள் வெளியாகியுள்ளது. இது வரவிருக்கும் ஸ்மார்ட்போன் பற்றிய தகவல்களை வெளிப்படுத்தியுள்ளது.

Samsung Galaxy S23 Ultra பற்றி வெளியான சுவாரசியமான தகவல்

Samsung Galaxy S23 Ultra பற்றி வெளியான சுவாரசியமான தகவல்

பல வாரங்களாக Samsung Galaxy S23 Ultra டிவைஸ் பற்றி வதந்திகள் இணையத்தில் பரவி வருகிறது. இப்போது வெளியான ரீசென்ட் தகவலின் படி, Samsung Galaxy S23 Ultra ஸ்மார்ட்போனின் கேமரா கட்டமைப்பு குறித்து பல்வேறு ஊகங்கள் வெளியாகியுள்ளன. தென் கொரிய தொழில்நுட்ப நிறுவனமான சாம்சங் அதன் கேலக்ஸி எஸ் 23 சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல்களில் இம்முறை, ஸ்னாப்டிராகன் சிப்செட்டை மட்டுமே பயன்படுத்தப் போவதாக புதிய தகவல்கள் தெரிவிக்கிறது.

சிறப்பான மேட்டரே இது தான்!

சிறப்பான மேட்டரே இது தான்!

விஷயம் தெரியாதவர்களுக்கு, கடந்த காலத்தில் சாம்சங் நிறுவனம் அதன் S சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல்களை சில சந்தைகளில் அறிமுகம் செய்யும் போது, நிறுவனத்திற்குச் சொந்தமான Exynos சிப்செட் உடன் அறிமுகம் செய்து, அவற்றை விற்பனை செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல், ஒரு குறிப்பிடத்தக்க டிப்ஸ்டர் வெளியிட்ட தகவலின் படி, இப்போது Samsung Galaxy S23 Ultra ஆனது புதிய Qualcomm Snapdragon 8 Gen 2 சிப்செட் உடன் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டிப்ஸ்டர் ஐஸ் யுனிவர்ஸின் தகவல் என்ன சொல்கிறது தெரியுமா?

டிப்ஸ்டர் ஐஸ் யுனிவர்ஸின் தகவல் என்ன சொல்கிறது தெரியுமா?

வெய்போவில் டிப்ஸ்டர் ஐஸ் யுனிவர்ஸின் இடுகையின்படி, சாம்சங் கேலக்ஸி எஸ் 23 அல்ட்ரா டிவைஸ் ஸ்னாப்டிராகன் 8 ஜெனரல் 2 சிப்செட் மூலம் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த அல்ட்ரா ஸ்மார்ட்போன் சாதனம் 5000 mAh பேட்டரி உடன் பொருத்தப்பட்டிருக்கலாம் என்றும் டிப்ஸ்டர் தகவல் தெரிவிக்கிறது. இந்த வரவிருக்கும் புதிய Samsung Galaxy S23 Ultra ஸ்மார்ட்போன் 228 கிராம் எடையுடன் வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Windows 11 இல் பைல் & போல்டர்களை எப்படி பாஸ்வோர்ட் மூலம் லாக் செய்வது? ஈஸி டிப்ஸ்!Windows 11 இல் பைல் & போல்டர்களை எப்படி பாஸ்வோர்ட் மூலம் லாக் செய்வது? ஈஸி டிப்ஸ்!

Samsung Galaxy S22 Ultra-வில் 200 மெகா பிக்சல் கொண்ட கேமராவா?

Samsung Galaxy S22 Ultra-வில் 200 மெகா பிக்சல் கொண்ட கேமராவா?

இந்த புதிய ஸ்மார்ட்போனின் முன்னோடியான Samsung Galaxy S22 Ultra போன்ற அதே தடிமனையும் Samsung Galaxy S23 Ultra கொண்டிருக்கும் என்று டிப்ஸ்டர் தகவல் தெரிவிக்கிறது. சாம்சங் கேலக்ஸி எஸ் 23 தொடர் தொடர்பான எந்த விவரங்களையும் சாம்சங் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது. சமீபத்திய வதந்திகளின் படி, வரவிருக்கும் Samsung Galaxy S23 Ultra ஸ்மார்ட்போன் ஆனது அறிவிக்கப்படாத 200 மெகா பிக்சல் கொண்ட ISOCELL HP2 கேமரா சென்சார் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது.

10x ஆப்டிகல் ஜூம் ஆதரவு

10x ஆப்டிகல் ஜூம் ஆதரவு

இந்த சென்சார் பிக்சல் அளவு 0.60μm என்று கூறப்படுகிறது. மேலும், இது 60fps ஆதரவுடன் 8K வீடியோக்களை பதிவு செய்யக் கூடிய திறன் உடன் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. Samsung Galaxy S23 Ultra ஸ்மார்ட்போனில், 10 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமராவுடன் வரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கேமரா 10x ஆப்டிகல் ஜூம் ஆதரவை வழங்கும் என்று கூறப்படுகிறது. சாம்சங் கேலக்ஸி S22 தொடரில் பயன்படுத்தப்பட்ட அதே சென்சார் இவை என நம்பப்படுகிறது.

EPFO: உங்கள் PF கணக்கில் ரூ.40000 டெபாசிட்! யாருக்கெல்லாம் இது கிடைக்கும்? Online பேலன்ஸ் செக் செய்வது எப்படி?EPFO: உங்கள் PF கணக்கில் ரூ.40000 டெபாசிட்! யாருக்கெல்லாம் இது கிடைக்கும்? Online பேலன்ஸ் செக் செய்வது எப்படி?

Samsung Galaxy S22 Ultra மாடலை நினைவிருக்கிறதா?

Samsung Galaxy S22 Ultra மாடலை நினைவிருக்கிறதா?

Samsung Galaxy S23 Ultra ஸ்மார்ட்போன் மாடல் தொடர்பான பல தகவல்கள் இணையத்தில் வைரல் ஆகி வருவதைத் தொடர்ந்து, இதன் அறிமுகம் மிக விரைவில் நடக்கக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. நினைவு கூற, சாம்சங் நிறுவனத்திற்குச் சொந்தமான Samsung Galaxy S22 Ultra ஸ்மார்ட்போன் மாடலை நிறுவனம் இந்த ஆண்டின் தொடக்கத்தில் பிப்ரவரியில் இந்தியாவில் அறிமுகம் செய்திருந்தது என்பது கவனிக்கத்தக்கது. இது Snapdragon 8 Gen 1 சிப்செட் உடன் வெளியாகியது என்பது குறிப்பிடத்தக்கது.

108 மெகாபிக்சல் கேமராவுடன் அசத்திய Samsung Galaxy S22 Ultra டிவைஸ்

108 மெகாபிக்சல் கேமராவுடன் அசத்திய Samsung Galaxy S22 Ultra டிவைஸ்

தற்போது, வதந்திக்குள்ளான Samsung Galaxy S23 Ultra டிவைஸில் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப்செட் எதிர்பார்க்கப்படுகிறது. மறுபுறம், Samsung Galaxy S22 Ultra டிவைஸ், 5,000mAh பேட்டரியைக் கொண்டிருந்தது. கேமரா அம்சங்களைப் பொறுத்த வரையில், இது 12 மெகாபிக்சல் மற்றும் 10 மெகாபிக்சல் செகண்டரி சென்சார்களுடன் 108 மெகாபிக்சல் பிரைமரி சென்சார் மூலம் சிறப்பம்சமாக ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பை ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. இது முன்பக்கத்திலும் 40 மெகாபிக்சல் செல்ஃபி கேமராவைக் கொண்டுள்ளது.

காதலிக்காக 7 Smartphone உடன் லேடீஸ் பாத்ரூமிற்குள் பதுங்கிய காதலன்.. டிவிஸ்ட் 'இங்க' தான் இருந்துச்சா?காதலிக்காக 7 Smartphone உடன் லேடீஸ் பாத்ரூமிற்குள் பதுங்கிய காதலன்.. டிவிஸ்ட் 'இங்க' தான் இருந்துச்சா?

சாம்சங் ஸ்மார்ட்போன் மாடல் மீது தள்ளுபடி

சாம்சங் ஸ்மார்ட்போன் மாடல் மீது தள்ளுபடி

அமேசான் நிறுவனத்தின் Great Freedom Festival Sale இன்று ஆகஸ்ட் 6 ஆம் தேதி முதல் துவங்கி ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரை இந்தியாவில் நடைபெறுகிறது. இந்த சிறப்பு விற்பனையின் பகுதியாகப் பல ஸ்மார்ட்போன் சாதனங்கள் மீதும், எலக்ட்ரானிக் கேட்ஜெட்ஸ்கள் மீதும் நம்ப முடியாத சிறப்புச் சலுகைகள் கிடைக்கிறது. குறிப்பாக, இப்போது சாம்சங் நிறுவனத்தின் மலிவு விலை 4G ஸ்மார்ட்போன் முதல் பிளாக்ஷிப் 5G ஸ்மார்ட்போன் வரை அனைத்து மாடல்களின் மீதும் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy S23 Ultra Tipped To Get Qualcomm Snapdragon 8 Gen 2 Chipset With 5000mah Battery

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X