Home
News

ரூ.8000மா? ஆரம்பமே இவ்வளவு பெரிய தள்ளுபடியா? தத்தளிக்கும் Samsung Galaxy S23 Ultra!

இந்தியாவில் Samsung Galaxy S23 சீரிஸ் ஸ்மார்ட்போனானது சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஸ்மார்ட்போனுக்கு வரவேற்புகள் குவிந்து வரும் நிலையில் இதை ஊக்குவிக்கும் விதமாக தள்ளுபடிகளும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

சாம்சங் கேலக்ஸி எஸ்23 சீரிஸ்

சாம்சங் நிறுவனம் சமீபத்தில் இந்தியாவில் ப்ரீமியம் ஸ்மார்ட்போனாக புதிய கேலக்ஸி எஸ்23 சீரிஸை அறிமுகப்படுத்தியது. இந்த ஸ்மார்ட்போன்கள் தற்போது தள்ளுபடி சலுகையுடன் நாட்டில் கிடைக்கிறது. சாம்சங் கேலக்ஸி எஸ்23 சீரிஸ் இல் கேலக்ஸி எஸ்23 அல்ட்ரா ஸ்மார்ட்போன் என்பது ப்ரீமியம் மாடலாக இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனும் தற்போது தள்ளுபடி விலையில் கிடைக்கிறது.

ரூ.8000மா? ஆரம்பமே இவ்வளவு பெரிய தள்ளுபடியா? Samsung Galaxy S23 Ultra!

Samsung Galaxy S23 Ultra

Samsung Galaxy S23 Ultra ஸ்மார்ட்போனானது ரூ.1,24,999 என்ற விலை முதல் தொடங்குகிறது. ஆனால் பயனர்கள் பிளிப்கார்ட்டில் எச்டிஎஃப்சி, எஸ்பிஐ மற்றும் ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டுகள் மூலம் இந்த போனை வாங்கினால் ரூ.1,16,999 என வாங்கலாம். சாம்சங் கேலக்ஸி எஸ்23 அல்ட்ரா ஸ்மார்ட்போனை பிளிப்கார்ட்டில் ரூ.8000 தள்ளுபடியுடன் வாங்கலாம்.

Galaxy S23, Galaxy S23 Ultra மற்றும் Galaxy S23 Plus

சாம்சங் நிறுவனம் சமீபத்தில் Galaxy S23 சீரிஸை உலகளவில் அறிமுகம் செய்தது. Galaxy S23 சீரிஸ் இல் Galaxy S23, Galaxy S23 Ultra மற்றும் Galaxy S23 Plus ஆகிய ஸ்மார்ட்போன்கள் இடம்பெற்றுள்ளது. இந்த ஸ்மார்ட்போன்கள் பிப்ரவரி 23 முதல் வாங்குவதற்கு கிடைக்கும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. அப்போது நீங்கள் இந்த புதிய ஸ்மார்ட்போனை எப்படி தள்ளுபடி விலையில் பெறுவது என்பது குறித்து பார்க்கலாம்.

அமேசான் தள்ளுபடி

Samsung Galaxy S23 மாடலின் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் வேரியண்ட் ரூ.74,999 எனவும் 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் வேரியண்ட் ரூ.79,999 எனவும் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனுக்கு அமேசானில் ஆரம்பகால சலுகை வழங்கப்படுகிறது. அதன்படி அமேசானில் 128GB வேரியண்ட் விலையில் 256GB மாறுபாட்டைப் பெறலாம். அதாவது அமேசானில் 256 ஜிபி மாறுபாட்டிற்கு ரூ.5000 பிளாட் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

ரூ.8000மா? ஆரம்பமே இவ்வளவு பெரிய தள்ளுபடியா? Samsung Galaxy S23 Ultra!

ரூ.13,000 வரை தள்ளுபடி

இதுமட்டுமில்லை கூடுதலாக ஐசிஐசிஐ டெபிட் மற்றும் கிரெடிட் கார்ட் பயன்படுத்தி பணம் செலுத்தினால் ரூ.8,000 வரை தள்ளுபடியை பெறலாம். இதன்மூலம் கேலக்ஸி எஸ்23 மாடலின் 256ஜிபி வேரியண்ட்டை ரூ.66,999 என வாங்கலாம். ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும் முதல்நாளிலேயே ரூ.13,000 வரை தள்ளுபடியை பெற சிறந்த வாய்ப்பு இதுவாகும். Galaxy S23 ஆனது Phantom Black, Cream, Green மற்றும் Lavender என மூன்று வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது.

ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 எஸ்ஓசி ஆதரவு

சாம்சங் கேலக்ஸி எஸ்23 சீரிஸ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய சாம்சங் கேலக்ஸி எஸ் 23 தொடரில் Samsung Galaxy S23, Galaxy S23+ மற்றும் Galaxy S23 அல்ட்ரா போன்கள் இடம்பெற்றுள்ளது. Galaxy Unpacked நிகழ்வில் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டன. இந்த ஃப்ளாக்ஷிப் போன் ஆனது குவால்காமின் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது. மூன்று மாடல்களிலும் Gorilla Glass Victus 2 பாதுகாப்பு இருக்கிறது.

Samsung Galaxy S23 தொடரில் அடிப்படை மாடலாக சாம்சங் கேலக்ஸி எஸ்23 இருக்கிறது. இந்த தொடரில் உள்ள போன்களில் கம்மி விலை கொண்ட ஸ்மார்ட்போன் இதுதான்.

Android 13 ஓஎஸ்

இந்த ஸ்மார்ட்போனானது Android 13 அடிப்படையிலான UI 5.1 மூலம் இயங்குகிறது. இந்த ஸ்மார்ட்போனானது 120Hz ரெஃப்ரஷிங் ரேட் உடனான 6.1 இன்ச் முழு HD+ டைனமிக் AMOLED 2X டிஸ்ப்ளே ஆதரவைக் கொண்டிருக்கிறது. இந்த டிஸ்ப்ளே ஆனது வெளிப்புற பயன்பாட்டையும் மேம்படுத்தி வழங்கும் வகையில் விஷன் பூஸ்டர் அம்சத்தைக் கொண்டிருக்கிறது.

கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 பாதுகாப்பு

கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 பாதுகாப்பு ஆதரவு இதில் வழங்கப்பட்டிருக்கிறது. 240Hz டச் மாதிரி விகித ஆதரவைக் கொண்டிருக்கிறது. இந்த புதிய ஸ்மார்ட்போனானது குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. 8ஜிபி ரேம் உடன் இணைக்கப்பட்டிருக்கிறது.

ரூ.8000மா? ஆரம்பமே இவ்வளவு பெரிய தள்ளுபடியா? Samsung Galaxy S23 Ultra!

டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு

Samsung Galaxy S23 ஸ்மார்ட்போனானது டிரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டிருக்கிறது. இதில் 50 எம்பி பிரைமரி வைட்-ஆங்கிள் சென்சார், 12 எம்பி அல்ட்ரா வைட் ஆங்கிள் கேமரா மற்றும் 10 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமரா என டிரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டிருக்கிறது. ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் ஃபீல்ட் ஆஃப் வியூ ஆதரவு கொண்ட 12 எம்பி செல்பி கேமரா பொருத்தப்பட்டிருக்கிறது. இதில் Samsung Knox பாதுகாப்பு மற்றும் நிறுவனத்தின் Knox Vaultக்கான ஆதரவை கொண்டிருக்கிறது.

3,900mAh பேட்டரி

சாம்சங் Galaxy S23 ஸ்மார்ட்போனில் 3,900mAh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. அதை சார்ஜ் செய்வதற்கு என 25W வயர்டு சார்ஜிங் மற்றும் 15W வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவு வழங்கப்பட்டிருக்கிறது. 30 நிமிடங்களில் 50 சதவீதம் வரை சார்ஜ் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் எடை 168g கிராம் ஆகும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Samsung Galaxy S23 Ultra Now Available With Rs.8000 Discount Offers: How to Buy?
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X